வங்கியில் லாக்கர் பெறுவது எப்படி?

தங்க நகை இல்லாத குடும்பங்களே இருக்க முடியாது. குண்டுமணி அளவு தொடங்கி கிலோ கணக்கு வரை, அவரவர் வசதிக்கேற்ப எல்லோரும் நகை வாங்கி வைத்திருக்கிறோம். போட்டு அழகு பார்க்க மட்டுமல்லாமல், முதலீடாகவும் கருதி வாங்குகிறோம். விலை குறையும்போது, அட்சய திருதியை அன்று, பண்டிகை போனஸ், இன்னும் பல ஆண்டுகள் கழித்து வரப்போகிற மகள் திருமணம் எனச் சிலர் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் தவற விடுவதில்லை. ஆனால், இப்படி வாங்கும் தங்கத்தை எந்தளவு பாதுகாப்பாக வைத்திருக்கிறோம்? தினமும் நகைத் திருட்டுச் […]

மேலும்....

செய்யக்கூடாதவை

பிள்ளை இல்லையென்று ஆண் மறுமணம் செய்யக் கூடாது அக்காலத்தில் அதிகம் காணப்பட்ட இவ்வழக்கம் இன்று அருகிக் காணப்படுகிறது. குழந்தையில்லையென்றால் அதற்குப் பெண்ணே காரணம் என்று தவறாக எண்ணும் அறியாமையே இதற்குக் காரணம். குழந்தையின்மைக்குப் பெண்ணைக் காட்டிலும் ஆணே பெரும்பாலும் காரணம் என்பது ஆய்வில் கிடைத்த உண்மை. பெண்ணுக்குக் கருக்குழாயில் அடைப்பு என்ற எளிய காரணம்தான். ஆனால், ஆணுக்கு விந்தணுவின் எண்ணிக்கை குறைவு, விந்தணு இன்மை போன்ற முதன்மையான காரணங்கள் உண்டு. ஆனால், இந்த உண்மைகளை அறியாத மக்கள், […]

மேலும்....

தனிமை தரும் மன உனர்வே பேய்த்தோற்றம் – க.அருள்மொழி

பேய் இருக்கா? இல்லையா? பேய் அல்லது பிசாசு அல்லது கடவுள்(?) எதுவாக இருந்தாலும் அதைப் பார்த்ததாகக் கூறுவதற்கு  உணரப்பட்ட இருப்பு (sensed presence) என்று உளவியலாளர்கள்  கூறுகிறார்கள். இதுபோன்று உணரப்படுதல் பொதுவாக, தீவிர மன அழுத்தத்தில் இருப்பவர்கள், மிக அசாதாரணமான சூழலில் தனியாக இருக்கும்போது ஏற்படுவதாகும். இது, சூழ்நிலையின் தன்மை, மன அழுத்தத்தின் தீவிரத்தன்மை, துணைக்கு உள்ளவர்களின் பலம் அல்லது பலவீனம் ஆகியவற்றைப் பொறுத்து, பேய்களைப் பார்ப்பது, என்பது தெளிவற்றதாகவோ தெளிவானதாகவோ இருக்கும்! சிலருக்கு ரத்தமும் சதையுமாகக் […]

மேலும்....

மக்கள் தொகைக் கணக்கும் மதவாத நோக்கும்!

இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு விவரங்கள் அண்மையில் வெளியிடப்பட்டன. அக் கணக்கெடுப்பின்படி மக்கள் தொகை வளர்ச்சியிலிருந்தாலும், வளரும் வீதம் கடந்த 30 ஆண்டுகளாகத் தொடர்ந்து குறைந்துவருகிறது என்ற விவரம் கிடைத்துள்ளது. ஆனால், இந்துத்வா வாதிகள் உண்மைக்கு மாறாக, மதவெறி உந்துதலில் தவறான செய்தியைப் பரப்புகின்றனர். தினமணி, போன்ற சிலபத்திரிகைகளும் இதைச் செய்கின்றன. இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறித்துவர்கள் என்று எல்லா மக்களின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது. எந்தவொரு மதத்தின் மக்கள் தொகையும் அதிகமாக உயரவில்லை. குறிப்பாக இஸ்லாம் மக்களின் வளர்ச்சி […]

மேலும்....

மார்பகப் புற்று நோயும் மகளிர் சுய சோதனையும்

– நேயன் மார்பகப் புற்றுநோய் அக்காலத்தில் மிக அரிதாய் சிலருக்கு வந்தது. ஆனால், தற்காலத்தில் அதிக அளவில் வருகிறது. காரணம், இரசாயனம் கலந்த உணவுகள், பூச்சுகள், மாசுகள். இது பரம்பரையாக வரும். தாய்க்கு இல்லாத நிலையிலும் வருமா? என்றால் வரும். ஆய்வு அப்படித்தான் சொல்கிறது. Epidemiology என்னும் நோய்ப் பரவு இயலின் ஆய்வுகள் அப்படித்தான் சொல்கின்றன. இன்றைக்கு மார்பகப் புற்றுநோயால் அதிகம் அவதிப்படுவோர், அமெரிக்க, அய்ரோப்பிய கண்டங்களைச் சேர்ந்த நாடுகளில் வாழும் பெண்கள்தான். புற்றுநோயில் மார்பகப் புற்று […]

மேலும்....