மணியம்மையாரை அன்னை என்பது ஏன்?

அன்னை மணியம்மையார் பிறந்த நாள் மார்ச் – 10

மணியம்மையாரை அன்னை என்பது ஏன்?

புகழக்கூடாத மணியம்மையாரை அன்னை எனப் புகழ்கிறீர்களே! இது சரியா? என்று மணச்சநல்லூரிலிருந்து ஒருவர் கேட்ட கேள்விக்கு சூடாக புரட்சிக்கவிஞர் அளித்த பதிலிருந்து சில பகுதிகள் இதோ!

நாம் இளைமைப் போதில் முருகனைப் புகழ்ந்தோம் _ பாடினோம் _ ஆனால் நாளடைவில் முருகன் புகழத்தக்க ஒரு பொருளன்று. பாடத்தக்க ஒருபொருளன்று எனக் கண்டோம். முருகனைப் புகழ்வதை விட்டோம். முருகனைப் பாடுவதை விட்டோம்.

மேலும்....

அன்னை நாகம்மையாரின் ஒப்பற்ற தொண்டு

பெண்களுக்கு ஒரு வழிகாட்டியாகத் திகழ்ந்தவர் அன்னை நாகம்மையார். சேலம் மாவட்டம் தாதம்பட்டியில் பிறந்தவர். தந்தை பெரியாரின் தாய் சின்னத்தாயம்மையாரின் ஒன்றுவிட்ட தம்பி மகளாவார். பள்ளி சென்று கல்வி கற்கவில்லை எனினும் உலக அறிவில் சிறந்து விளங்கினார். பெரியார் அவர்களை மணந்துகொண்ட பின், பெரியாரின் பொதுவாழ்வுக்கு உறுதுணையாக, மேடைப் பேச்சுக்கான தனித்த ஆற்றலை வளர்த்துக் கொண்டு பொதுவாழ்விற்குத் தன்னைத் தகுதியாக்கிக் கொண்டார்.

மேலும்....

பெண்களுக்குத் தற்காப்பு

பெண்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ளும் பொருட்டு, அவர்களுக்கு ஆயுதம் கொடுக்கப்படுமா என்று மத்திய சட்டசபையில் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையில், மாகாண சர்க்கார் அவசியமானதைச் செய்யும் என்று உள்நாட்டு மந்திரியான தோழர் பட்டேல் கூறியிருக்கிறார்.

மாகாண சர்க்கார் இத்துறையில் எதுவும் செய்யும் என்று நம்பிக்கை நமக்கில்லை. ஏனெனில், பெண்களை அடிமைப் பிறவிகளாக நினைக்கும் வைதிக மனப்பான்மை படைத்தவர்களே பெரிதும் மாகாண மந்திரிகளாயிருக்கின்றனர் என்றாலும், இவர்கள், எங்களுக்கு எந்த விடுதலையும் வேண்டாம்! அடிமைத்தனமே ஆனந்தம் என்று சொல்லக்கூடிய பத்தாம் பசலிகளாகவே இருக்கின்றனர்.

மேலும்....

இன்றேனும் சரிநிகர் சமானமா மகளிர்?

ரிநிகர் சமானம் என்று சொல்லிக் கொள்ளலாம். ஆனால், நாட்டின் நிலை என்ன? அன்னையர் குலம் என்று அருமையான சொல்லாடலால் அர்ச்சிக்கப்படுகின்ற பெண்களின் நிலை என்ன? ஆணுக்கு நிகராக பெண்கள் இல்லை என்ற கசப்பினைத் தள்ளி வைத்துவிட்டு, குறைந்த அளவு பெண் ஒரு மனுஷியாக மதிக்கப்படுகிறாரா?

மேலும்....