அய்யாவின் அடிச்சுவட்டில்…. 125 ஆம் தொடர்

மாவோவின் புரட்சியையும் மிஞ்சியது அய்யாவின் புரட்சி 15.04.1978 மாலை குடந்தையில் (கும்பகோணத்தில்) நடைபெற்ற திராவிடர் மாணவர் கழக கமிட்டிக் கூட்டத்தில்   நான் கலந்துகொண்டு உரையாற்றினேன். அதில் திராவிடர் மாணவர் கழகம் தோன்றக் காரணம் மற்றும் காரணமானவர்கள் ஆகியவற்றைத் தெளிவாக எடுத்துரைத்தேன். அதிலிருந்து விடுதலையில் பதிவான சில முக்கியப் பகுதிகளை மட்டும் குறிப்பிட்டுள்ளேன். (விடுதலை 17.5.1978, பக்கம் 3) இந்த திராவிடர் மாணவர் கழகம் தோற்றுவிக்கக் காரணமாக இருந்த நண்பர்கள் சிலர் இன்னும் இருக்கின்றார்கள். இன்னும் இந்த உணர்வுடனேயே […]

மேலும்....

உயிரியல் அடிப்படையில் அனைவரும் ஓர் இனமே!

மொழி மக்களை நிலத்தோடு பிணைக்கும் கருவி, மொழி மக்களை நிலத்தோடு பிணைக்கும் வேலையை மட்டும் செய்வதில்லை. அதற்கும் மேலாக அந்த மக்களின் வரலாற்றைத் தன்னியல்பாக எழுதும் ஒரு கருவியாகவே மொழி வளர்கிறது, ஆரியப் புனைவுகளை முன்னிறுத்தும் பல்வேறு தரப்பு மனிதர்கள் இன்றும் ஊடகங்களில் கிடைக்கிற இடைவெளிகளில் எல்லாம் சமஸ்கிருதம் தேவ மொழி என்றும், எல்லா உலக மொழிகளுக்கும் தாய் என்றும் ஒரு கடைந்தெடுத்த பொய்யை உளறிக் கொண்டே இருப்பார்கள். இந்திய மொழிகளைப் பற்றி ஆய்வு செய்த ருஷ்ய […]

மேலும்....

எங்க போச்சு மோடி அலை?

இவ்விடம் அரசியல் பேசலாம்

எங்க போச்சு மோடி அலை?

வாடிக்கையாளர்கள் சென்றபின், சலூனைப் பெருக்கிச் சுத்தம் செய்து கொண்டிருந்தார் சந்தானம். அந்த நேரத்தில் உள்ளே நுழைந்தார் தோழர் மகேந்திரன்.

“என்ன தோழர், முத்து இருக்காரா?”

“ஹஹஹ! இப்பல்லம் நீங்க உள்ள நுழையறப்பவே முத்துவைத்தான் விசாரிச்சுக்கிட்டு வர்றீங்க!”

மேலும்....

விட்டு விடுதலையாகி….

சிறப்புச் சிறுகதை – விட்டு விடுதலையாகி….

– கவின் மலர்

கடிகாரத்தைப் பார்த்தவாறே அமர்ந்திருந்தாள் கவிதா. நொடிமுள் நகர்வதையே பார்த்துக் கொண்டிருந்தவளுக்குத் தலை சுற்றுவது போலிருந்தது. சுதா இன்னும் வரவில்லை. பசி வேறு தாங்கவில்லை. வயிற்றை ஒரு கையால் தடவிக்கொண்டே கொஞ்சம் பொறுத்துக்கோ! சுதா வந்துரட்டும் என்று வயிறோடு பேசினாள்.

வயிறோ பலவித சப்தங்களை எழுப்பி தன் எதிர்ப்பைத் தெரிவித்தது.

ஏதாவது நொறுக்குத்தீனி அல்லது வாழைப்பழம் இருக்கிறதா என்று அறைக்குப் போய் பார்த்தாள். அறைக்குள்ளே  காலையில் அய்ம்பது பைசா சில்லரை இல்லாததால் பக்கத்துக் கடைப்பையன் கொடுத்த ஒரே ஒரு ஹால்ஸ் மிட்டாய் மட்டுமே தேடியதில் தட்டுப்பட்டது.

மஞ்சு கட்டிலில் அமர்ந்து ஷிட்னி ஷெல்டன் நாவலை வாசித்துக் கொண்டிருந்தாள்.

மேலும்....