செல்லாக் காசோலைகளும் சட்டபூர்வ விளைவுகளும்….

காசோலை ஒரு முக்கிய சட்ட ஆவணமாகக் கருதப்படுகிறது. காசோலையில் குறிக்கப்பட்ட நாளிலிருந்து மூன்று மாத காலம்வரை அது செல்லுபடியாகும். காசோலைகள் செல்லாமல் போவது இந்தியாவைப் பொறுத்தவரையில் மிகவும் பிரபலமான ஒரு குற்றம் என்று அறியப்படுகிறது. உச்சநீதிமன்றத்தில் 40 இலட்சம் வழக்குகள் நிலுவையிலுள்ளன. காசோலையில் குறிப்பிட்ட தொகை, காசோலைக் கொடுத்தவருடைய வங்கிக்கணக்கில் இல்லாமல் போனால், அந்த காசோலை bounce ஆகிறது. ஒரு காசோலை பல காரணங்களால் செல்லாமலாகி விடும். போதுமான தொகை கணக்கில் இல்லாமல் போவது, கையொப்பங்களின் வேறுபாடு, […]

மேலும்....

சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்

மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு! மானம் தந்தை பெரியார் இந்த நாட்டு மக்கள் தாங்கள் வாழ்வாங்கு வாழ்ந்த சமுதாயம் என்பதை உணராமல் எங்கிருந்தோ வந்த நாடோடிகள் கூறுவதை எல்லாம் உண்மை என்று நம்பி அவர்களுக்கு அடிமைப்பட்டு மானமிழந்து, அறிவிழந்து, இழிநிலையில் வாழ்வது கண்டு உள்ளம் பொறாமல் இந்த மக்களுக்கு மானமும், அறிவும் ஊட்டி உலக மக்களைப் போல் சிறப்பாக வாழவைக்க வேண்டும் என்று சூளுரை மேற்கொண்டார். அதற்காகவே வாழ்நாளெல்லாம் எத்தனையோ இழிவுகளையும், கல்லடி, சொல்லடிகளையும் சர்வ சாதாரணமாக […]

மேலும்....

கண்டுபிடித்தது… கடவுள் அல்ல! – 7

– மதிமன்னன் பிறக்கும்போதே காது கேட்காமல், செவிடாகச் சிலர் பிறக்கிறார்கள். சிலர் பேச இயலாத ஊமையாகப் பிறக்கிறார்கள். காது கேளாதவர்களுக்குப் பேச்சு வராது. ஒலிகளையும் உச்சரிப்புகளையும் கேட்டு அவை மூளையில் பதிவானால்தான் அதே ஒலிகளையும் உச்சரிப்புகளையும் குழந்தையால் திருப்பிக் கூற முடியும். பேச முடியும். கேட்கும் திறனே இல்லையென்றால் பேசவும் இயலாது. செவிட்டு ஊமை என்ற பெயர் கிடைக்கும். (Deaf and Dumb) என்கிறார்கள். இக்குழந்தைகளுக்கு காது கேட்கும் கருவியை எந்நேரமும் வைத்துக்கொள்ளச் செய்வதன்மூலம் கேட்கும் ஆற்றல் […]

மேலும்....

அய்யாவின் அடிச்சுவட்டில்…. 133 ஆம் தொடர்

வரலாற்றுச் சிறப்பை தனது மேல்முத்திரையாக்கிக் கொண்ட ஊர்வலம் பெரியார் திடலிலிருந்து தொடங்கியது என்றாலும், அதற்கான ஏற்பாடுகள் சென்னை நகர் முழுவதும் தொடங்கப்பட்டன. ஊர்வல நேரம் நெருங்க நெருங்க கருப்புச் சட்டை நெடும் படை எங்கும் அலை மோத காணப்பட்டது. ஊர்வலத்தின் முகப்பாக, தந்தை பெரியார் அவர்களின் முக்கிய வாழ்க்கைக் கட்டங்கள், போராட்டங்கள் பற்றி விளக்கம் அளிக்கும் வண்ண வண்ணப் படங்களுடன்  அலங்கார வண்டிகள் கண்டோர் கண்களில் நுழைந்து கருத்துகளில் தைத்தன! ஊர்வலத்தின் ஆரம்பத்தில் கம்பீரமாக கழகக் கொடியைப் […]

மேலும்....

உற்சாக சுற்றுலாத் தொடர் – 11

செந்நிற மலைகளும் செதுக்கப்பட்ட நகரமும்! – மருத்துவர்கள் சோம & சரோஜா இளங்கோவன் அழகு அழகு மிருகங்களிடமிருந்து பிரியா விடை பெற்று விமானத்தில் ஏறினோம். பேராசிரியர்கள் மிகவும் உணர்ச்சிவசத்துடன் பாடம் எடுத்தனர். ஜோர்டன் நாட்டைப் பற்றியும், அதன் வரலாறு, நெபோட்டியன் மக்கள் பற்றியும் சொன்னார்கள். ஜோர்டனின் மிகவும் சிறப்பான இடம். புதிய ஏழு உலக அற்புதங்களில் ஒன்று. சுமித்சோனியன் எனும் ஆராய்ச்சி சிறப்பாளர்கள் உலகில் பார்க்க வேண்டிய 28 இடங்களில் ஒன்று என்று சொல்லியுள்ளனர். எங்களுக்கு அந்த […]

மேலும்....