ஆசிரியர் பதில்கள்

கேள்வி : சுயமரியாதைச் சுடரொளி பெரியாரின் கொள்கை வழிக் குணக்குன்று நம் பேராசிரியர் (க.அன்பழகன்) அவர்களுக்கு, உடல்நலக் குறைவு என செய்தியறிந்து மனம் வெதும்பினேன். அவரைப் பற்றி சில வரிகள்?_ தி.பொ.சண்முகசுந்தரம், திட்டக்குடி பதில் : நம் இனமானப் பேராசிரியர் 94ஆவது வயதில் உள்ளவர்; இயல்பான முதுமை என்றாலும் உற்சாகத்துடன் நல்ல நினைவாற்றலுடன் அவ்வளவே! உள்ளார். கவலை வேண்டாம். கலைஞரும் பேராசிரியரும் நூற்றண்டுக்கு மேல் வாழுவார்கள். கேள்வி : மாணவர்கள் தேர்வில் தோல்வி அடைந்தால் தற்கொலை செய்துகொள்ளும் […]

மேலும்....

வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா?

திராவிடம் இது தமிழம் என்பதன் திரிபு, ஆதலின் தமிழ்ச் சொல்லே. ஆரியம் அன்று. இதுபற்றிப் பல தடவைகளில் என்னால் எழுதப்பட்ட வெண்பாக்கள் இங்கே தரப்படுகின்றன. பாலி மொழியிற் பகர்ந்த மகாவமிசநூலில் ஒருசெய்தி நோக்குகின்றோம்! மேலாம்தமிழ் என்ற சொல்லைத் தமிழோஎன் றார்! ஏன்?தமிழரல்லார் நாக்குத் தவறு. தமிழ் நாட்டை ஆசிரியர் தாலமி முன்னாள்தமிரிசி என்றுரைத்தார். தாம்ஓர் – தமிழரல்லர்!ஆதலினால் தோழா அயலார் ஒருசொல்லைஓதலினால் மாறுபடல் உண்டு. தமிழென்று சாற்றுதற்கு மச்ச புராணம்த்ரமிளென்று சாற்றியதும் காண்க – தமிழாபடியைப் ப்ரதிஎன்னும் […]

மேலும்....

நம்மால் முடியும்!

தகுதியும் திறமையும் தனக்கே உரியது என்று ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் ஆதிக்கம் செலுத்திய ஆரிய பார்ப்பனர்கள் அதிர்ச்சியடையும் வகையில் பார்ப்பனர் அல்லாதோர் கல்விச் சாதனை நாளுக்கு நாள் உச்சம் பெற்று மெச்சத்தக்கதாய் வளர்ந்து வருகிறது. எடுத்துக்காட்டாக மருத்துவப் படிப்பில் நமது மாணவர்களின் சாதனையைப் பாருங்கள். 200/200 எடுத்த 17 மாணவர்களில் 13 மாணவர்கள் பிற்படுத்தப்பட்டோர் சமுதாய மாணவர்கள். ஒருவர் மிகப் பிற்படுத்தப்பட்டோர்; ஒருவர் இஸ்லாமியர். ஒருவர் மட்டுமே உயர் ஜாதியைச் சேர்ந்தவர். மதம், ஜாதி மறுத்த கொள்கைக் குடும்பத்து […]

மேலும்....

”பெரியார் 1000′ போட்டியில் மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவ – மாணவிகள் சிறப்புச் சுற்றுலா மாட்சிகளும் – காட்சிகளும்

”பெரியார் 1000′ போட்டியில் மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவ – மாணவிகள் சிறப்புச் சுற்றுலா மாட்சிகளும் – காட்சிகளும் தந்தை பெரியாரின் 136ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் பெரியார் சிந்தனை மய்யமும், பெரியார் பிஞ்சு மாத இதழும் இணைந்து நடத்திய பெரியார் 1000 வினா-விடை போட்டியில் 100 விழுக்காடு மதிப்பெண்கள் எடுத்து மாநில அளவில் முதலிடத்தை பெற்ற மாணவர்கள் டெல்லி, ஆக்ரா ஆகிய இடங்களுக்குச் சுற்றுலா சென்று மேனாள் குடியரசுத் தலைவர் […]

மேலும்....