Category: ஜனவரி 16-31
இனப்படுகொலையாளனுக்கு ஜனநாயகத் தீர்ப்பு முதல் படியே!
இன்னும் இரண்டு ஆண்டுகள் பதவிக்காலம் இருந்தும் கூட, தமிழர்கள் மத்தியில் மட்டுமல்லாமல் சிங்களர்களிடமும் தனக்கு நல்ல பெயர் இல்லை என்பதைப் புரிந்துகொண்ட மகிந்த ராஜபக்சே, அந்நிலை மேலும் மோசமாவதற்குள் மூன்றாவது முறையாக அதிபராகிவிடலாம் என்று முடிவு செய்தார். இரண்டுமுறைக்கு மேல் அதிபராக முடியாது என்ற அரசியல் சட்ட அமைப்பையும், தன் போக்குக்கு வளைத்து, தன்னால் நியமிக்கப்பட்ட உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி மொகான் பிரீசை வைத்து மூன்றாவது முறையாகப் போட்டியிட அனுமதியும் பெற்றுவிட்டார். அவருடைய ஆஸ்தான ஜோதிடரான சுமனதாச […]
மேலும்....ஆசிரியர் பதில்கள்
கேள்வி : பி.ஜே.பி.யின் மத்திய அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் எவ்விதக் கட்டுப்பாடும் இன்றி தன்னிச்சையாக (தான்தோன்றித்தனமாக) கொள்கை முடிவுகளை அறிவித்து வருவது மோடி உட்பட பி.ஜே.பி.யின் உயர்மட்டக் குழுவுக்குத் தெரியாமல் நடப்பதாகக் கருதுகிறீர்களா?-நாத்திகன் சா.கோ., பெரம்பலூர் பதில் : மோடி எல்லா அதிகாரங்களையும் தன்னுள்ளும் தனது நண்பர் ஷா (பா.ஜ.தலைவர்) இருவரின் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவர். அதை மீறி, ஆர்.எஸ்.எஸ்.-காரர்களின் சித்துவேலைகள் மோடிக்கேகூட தலைவலியாய் நடக்கிறதோ என்னவோ! யாம் அறியோம்!. கேள்வி : மதவெறிக்கு மனிதாபிமானம் இருப்பதில்லையா?– சு.எழில்மலை, […]
மேலும்....பொங்கல் கவிதை
பொங்கல் கவிதை – கலைஞர் மானத்திற்கு மறுபிறப்பு ஞாயிறு போற்றுதும்;ஞாயிறு போற்றுதும்!சிலம்பொலி கேட்குது;சிந்தையில் இனிக்குது!ஆயிரம் நிலவுகள் ஆயிரம் மாதர்கள்;ஆயிரம் கதிர்கள் ஆயிரம் ஆடவர்;ஞாயிறு போற்றினர்!ஞாயிறு போற்றினர்!ஆயிரம் கோடியாய் ஆயினர் தமிழர்!பாயிரம் பலப்பல பாடினர் தமிழர்!ஞாயிறு போற்றியே கூடினர் பொங்கலில்!ஞாயிறு போற்றியே ஆடினர் பொங்கலில்!மாவிலை தோரணம் மஞ்சள் வாழைகோவிலின் முரசம் கோலம் கண்டனர்!பொங்கலோ பொங்கல்பொங்கலோ பொங்கல்குறிஞ்சி, முல்லை, நெய்தல், மருதம், பாலை நிலமெனப்பிரிந்து வாழினும் தமிழர் பண்பைப்புரிந்து வாழ்ந்தனர்!கல்தோன்றி மண் தோன்றாக் காலத்துமுன்தோன்றி மூத்தகுடி எனினும்காடு கொன்று நாடாக்கக்குளம் […]
மேலும்....சொல்லாடல்
சிறப்புச் சிறுகதை-1 சொல்லாடல் – கோவி.லெனின் சபா களைகட்டியிருந்தது. குருநாதர் முன்பாக உட்கார்ந்திருந்த சீடர்களுக்குள் அப்படி ஒரு பரவச மனநிலை. தன்னுடைய புதிய படைப்பின் டீசர் வெளியீட்டுக்காகத்தான் இன்றைய சபையைக் கூட்டியிருந்தார் குருநாதர். வாசிக்கட்டுமா? என்று கு.நா. கேட்டதும் பலமாக ஆடியது சீடகோடிகளின் தலை. உக்கிர சொரூப காளியின் சூலாயுதத்தில் பூத்திருந்தது கருமஞ்சள் பூ. வானத்தில் ஆயிரங்கால் பூச்சி தொங்கியபடி ஊர்ந்தது. நியூயார்க்கின் உயரமான கட்டடத்தில் சிலுக்குவார்பட்டி அழகேசன் ரம்மி ஆடிக் கொண்டிருந்தான். சீட்டுக்கட்டு ஜோக்கர்களின் காமெடிக்கு […]
மேலும்....