பகுத்தறிவே இளைஞர்களை ஆளவேண்டும்

பகுத்தறிவே இளைஞர்களை ஆளவேண்டும் -அறிஞர் அண்ணா பட்டதாரிகளே! உங்கள் குடும்பங்களுடைய நன்னிலைக்குப் பாடுபடுவதோடு, சமூகத்திற்-காகப் பணிகளையும் செய்ய வேண்டியதுடன், பகுத்தறிவுவாதத்தின் ஒளியை எங்கும் வீசச் செய்பவர்களாக நீங்கள் திகழ வேண்டும். பகுத்தறிவுவாதம் என்பது அடிப்படை உண்மைகளை, நெறிகளை மறுப்பதாகாது; எதையும் காரணங் கண்டு ஆராய்ந்து உண்மை காண்பதாகும். போலித்தனமான எண்ணங்-களை, செயல்களை அழித்தொழிப்பதுதான் பகுத்தறிவு ஆகும். அறிவின் எந்த ஒரு துறையாயினும் அதில் நமக்கென்று ஒருமுறை இல்லாமலில்லை. நம்முடைய வாழ்க்கை முறைகள் அழியாதவை என்று நாம் கொண்டாடலாம். […]

மேலும்....

மோடி ஏன் மறுக்கவில்லை?

மோடி ஏன் மறுக்கவில்லை? இந்தியாவில் மதச் சிறுபான்மையர் மீதான வன்முறைத் தாக்குதல்கள் குறித்துக் குறிப்பிடும் போது, மோடியின் மவுனம் ஆபத்தானது என்று அமெரிக்காவிலிருந்து வெளிவரும் நியூயார்க் டைம்ஸ் இதழின் தலையங்கம் குறிப்பிட்டுள்ளது. கிறித்தவர்களின் வழிபாட்டிடங்கள்மீதான தாக்குதல்களை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, இந்தியாவில் அனைத்துக் குடிமக்களையும் காப்பாற்ற வேண்டியராக உள்ள பிரதமர் மோடி, எவ்விதக் கருத்தும் தெரிவிக்காமல் உள்ளார். அதேபோல், கிறித்தவர்கள் மற்றும் இசுலாமியர்கள் அதிக அளவில் கட்டாயப்-படுத்தி அல்லது பணம் கொடுப்பதாக உறுதியளித்து இந்து மதத்துக்கு மாற்றம் செய்யப்படுவது […]

மேலும்....

பார்ப்பனப் பண்பாட்டுப் படையெடுப்பை முடித்த வழக்கின் தீர்ப்பு

பார்ப்பனப் பண்பாட்டுப் படையெடுப்பை முடித்த வழக்கின் தீர்ப்பு நீதிமன்ற வழக்குகள் என்பன அவை உரிமையியல் வழக்காக இருந்தாலும், குற்றவியல் வழக்காக இருந்தாலும் பெரும்பாலும் தனிமனிதரைச் சார்ந்தவையாகவே இருக்கும். இதனால் இவ்வழக்குகளின் மீது வழங்கப்படும் தீர்ப்புகளை வெறும் செய்தியாக மட்டுமே பெரும்பாலோர் படிப்பர். தம் சட்ட அறிவுக்குத் துணைபுரியும் என்றும் வேறு வழக்கில் மேற்கோள்காட்ட உதவும் என்றும் கருதினால் வழக்குரைஞர்களும் நீதிபதிகளும் நீதிமன்றத் தீர்ப்புகள் சிலவற்றை வரி பிறழாது படிப்பர். ஆனால் இவ்வெல்லையைத் தாண்டி சமூக வரலாற்றாவணமாக நீதிமன்றத் […]

மேலும்....

வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா?

வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா? -புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் அழிப்பாரின் எண்ணத்துக்கு வலிமை சேர்த்துவிடக் கூடும் என்று கருதினார் புரட்சிக்கவிஞர். தம் கருத்தை வலியுறுத்தி ஆராய்ச்சித் தொடர் ஒன்றினை எழுதினார்;  வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா? எனும் கட்டுரைத் தொடர், தமிழ்ப் பகைவர்களுக்குச் சாட்டையடி கொடுத்தது: தமிழ் ஆர்வலர்களுக்கெல்லாம் புது வழி காட்டியது; தெளிவூட்டியது. – சு.மன்னர்மன்னன் காட்சி தமிழ்ச் சொற்களையெல்லாம் வடசொற்கள் என்று ஆக்குவதில் பார்ப்பனர்க்குத் தனி ஆசை. அவ்வாறு செய்வதால் இந்நாட்டுக்கும் அவர்கட்கும் இல்லாத […]

மேலும்....

கர்மவீரன் கோட்சேயாம்! பாராளுமன்றத்தின் முன் சிலைகளாம்!

கர்மவீரன் கோட்சேயாம்!பாராளுமன்றத்தின் முன் சிலைகளாம்!   சந்திரபிரகாஷ் கவுசிக் காந்தியைச் சுட்டுக்கொன்ற கோட்சேவிற்கு நாடாளுமன்றத்தின் இரு அவையிலும் சிலை வைக்க மத்திய அரசை  நாடியுள்ளதாக கூறியுள்ளது. நாடு முழுவதும் கோட்சேவிற்கு சிலைகள் அமைக்க வேண்டும் என்று இந்து மகாசபை கூறியிருந்தது. இந்த நிலையில் முதலில் நாடாளுமன்றத்தில் சிலை அமைத்துவிட்டு பிறகு மற்ற இடங்களில் அமைக்க வேண்டும் என்று தற்போது மத்திய அரசிடம் அனுமதி கேட்டுள்ளது. இதுகுறித்து டில்லியில் பத்திரிகையாளர்களிடம் பேசிய சந்திரபிரகாஷ் கவுசிக் கூறியதாவது: இதுவரை நமது […]

மேலும்....