இந்தியாவின் முதல் நிதி அமைச்சர் ஆர்.கே.சண்முகம் பற்றி….

தலைநிமிரச் செய்த தலைவர்கள் இந்தியாவின் முதல் நிதி அமைச்சர் ஆர்.கே.சண்முகம் பற்றி…. சுதந்திர இந்தியாவின் முதல் நிதி அமைச்சர் பொறுப்பு வகிக்கும் பெருமையும் தகுதியும் ஒரு தமிழரான ஆர்.கே.சண்முகத்துக்கு வாய்த்தது. அவரைத்தான் நிதி அமைச்சர் ஆக்க வேண்டும் என்று பிரதமர் நேருவிடம் வலியுறுத்திச் சொன்னவர் மகாத்மா காந்தி. சித்தரஞ்சன் தாஸ், பெரியார் போன்றவர்களின் நண்பராக அரசியலில் வளர்ந்த இவர், கோவை வட்டாரத்தைச் சேர்ந்தவர். சென்னை கிறித்தவக் கல்லூரியிலும் சட்டக் கல்லூரியிலும் படித்தார். சுதந்திரத்துக்கு முந்தைய இந்தியாவில் நடந்த […]

மேலும்....

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டோருக்கு ஊதியத்துடன் 3 மாத விடுப்பு

பாலியல் புகார்களை விசாரிக்க உச்சநீதிமன்ற உத்தரவுப்படி ஒவ்வொரு துறைக்கும் ஒழுங்கு நடவடிக்கைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் தலைவராக ஒரு பெண் இருப்பார். அந்நிறுவனத்தில் பெண் அதிகாரி இல்லையென்றால், வேறு நிறுவனத்தின் பெண் அதிகாரி குழுவின் தலைவராக அமர்த்தப்படுவார். குழுவின் பெரும்பாலான உறுப்பினர்களும் பெண்ணாக இருப்பர். பாதிக்கப்பட்ட பெண்களை வேறு இடத்திற்கு மாற்றப் பரிந்துரைக்கவும் இக்குழுவிற்கு அதிகாரம் உண்டு. பாலியல் பாதிப்புக்காளான 3 மாதத்திற்குள் புகார் அளிக்க வேண்டும். குற்றவாளியின் ஊதியத்தை நிறுத்தி வைக்கப் பரிந்துரைக்கவும் இக்குழுவிற்கு அதிகாரம் […]

மேலும்....

போலிக் கையெழுத்துப் போட்ட ஜெயேந்திரர்!

  ஜெயேந்திரருக்கு எதிராக சாட்சி சொல்ல முன்வந்துள்ள இரவி சுப்பிரமணியன் தற்போது சங்கராச்சாரி ஜெயேந்திரர் செய்த ஒரு மோசடியை வெளியிட்டுள்ளார். பெங்களூருவில் ஜெயெந்திரருக்குச் சொந்தமான கல்வி நிறுவனம் உள்ளது. அதற்கு ஆவணங்களின்படி இரவி சுப்பிரமணியம் தான் நிர்வாகி _ அப்படியிருக்க அங்கு நியமனங்கள் நான்தான் செய்ய வேண்டும். ஆனால், ஜெயேந்திரர் என்னுடைய கையொப்பத்தை போலியாகப் போட்டு, ஒரு பெண்மணியை நியமனம் செய்துள்ளார். அந்தப் பெண்தான் ஜெயேந்திரர், சங்கரராமன் கொலை வழக்கில் விடுதலை பெற உதவியவர். இப்படி சட்டவிரோத […]

மேலும்....

சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்

மேக் இன் இந்தியாத் திட்டத்திற்கான முன் தயாரிப்பு ஆசிரியர் : அருண் நெடுஞ்செழியன்வெளியீடு : பூவுலகின் நண்பர்கள்எண் : 106/1, முதல் தளம்,கனகதுர்கா வணிக வளாகம்,கங்கையம்மன் கோயில் தெரு, வடபழனி,சென்னை – 600 026.தொலைபேசி : 044-4380 9132பக்கங்கள் : 136விலை ரூ 100 மோடி ஆட்சிக்கு வந்த கடந்த சொற்ப நாட்களில் மட்டும் பல ஏக்கர் காடுகளையும், உழைக்கும் மக்களையும் அழிக்கிற பல அழிவு வளர்ச்சித் திட்டங்களுக்கு சூழல் அனுமதியளித்தது அனைவருக்கும் நினைவிருக்கும். குறிப்பாக குசராத்தில் […]

மேலும்....

கண்டுபிடித்தது… கடவுள் அல்ல! – 9

– மதிமன்னன் ரோமன் கத்தோலிக மதத்தில் தீவிர நம்பிக்கையுள்ளவரான ஜான்ராக் எனும் மகப்பேறு மருத்துவர் கிரிகோரி பின்கஸ் எனும் உயிரியல் நிபுணருடன் இணைந்து ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்ததுதான் மகளிர்க்கான கருத்தடை மாத்திரைகள். கருத்தடையை எதிர்ப்பது கத்தோலிகம். கருத்தரிப்பதை மேம்படுத்த வேண்டும் என்று ஆய்வுகள் செய்தார் ஜான் ராக். அவர் கண்டுபிடித்த மாத்திரையை உட்கொண்ட பெண்ணுக்கு கருத்தரிப்பதற்கான ஹார்மோன்கள் பாதிப்புக்கு ஆளாகிவிட்டன. கருத்தடைக்கான மாத்திரை கிடைத்துவிட்டது. பிள்ளையார் பிடிக்கக் குரங்காகிவிட்டதோ? கிணறு தோண்ட பூதம் வெளிப்பட்டதோ? எப்படியோ மதத்திற்கு […]

மேலும்....