கண்டுபிடித்தது… கடவுள் அல்ல!

– மதிமன்னன்

சகலமானவற்றையும் படைத்தது கடவுள் எனும் நம்பிக்கை பலரிடத்தில் இருக்கிறது. உலகின் பலநாட்டு மக்களிடமும் இருக்கிறது. உலகின் பெரிய மதங்கள் எனப்படும் ஆறு மதத்தைச் சேர்ந்த மக்களிடமும் இந்த நம்பிக்கை இருக்கிறது.

நம்புங்கள் என்பதுதான் எல்லா மதங்களின் ஆரம்ப வாக்கியம். எதையும் நம்பி ஒருவன் தொடங்கினால் இறுதியில் அவனுக்குச் சந்தேகங்களே மிஞ்சும்; ஆனால் சந்தேகங்களுடன் தொடங்கினால், இறுதியில் உறுதியான கருத்து கிடைக்கும்.

மேலும்....

அன்னையாருடன் அந்த நாள்கள்

அன்னை மணியம்மையார் நினைவு நாள்: மார்ச் 16

மிசா காலத்தில் எனது இணையரையும்  (அ. இறையனார்) பிடிக்க உத்தரவு வந்துள்ள செய்தி காவல் நிலையத்தின் மூலமாக கிடைக்கப் பெற்றது. இவரோ அரசுப் பணியாளர்.

இவரின் பணிக்கு ஏதாவது தொல்லைகள் உண்டாகி விடும் என்ற எண்ணத்தில், இவரை வீட்டில் இருக்கவிடாமல் தெரிந்தவர் இல்லத்தில் தங்க வைத்துவிட்டு, திருப்பூரிலிருந்து அதிகாலையில் புறப்பட்டு மூன்று மணியளவில் திருச்சி பெரியார் மாளிகையை அடைந்தேன்.

மேலும்....

நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதி தேவை

சென்னை உயர்நீதி மன்றத்தில் நீதிபதிகளின் நியமனத்தில் சமூக நீதி கோரிய சிறப்புப் பொதுக் கூட்டம் ஆசிரியர் அவர்களின் தலைமையில் மார்ச் 3 அன்று பெரியார் திடலில் நடைபெற்றது.

வழக்குரைஞர் த. வீரசேகரன் வரவேற்புரையுடன் வழக்குரைஞர் அ. அருள்மொழி அறிமுக உரை ஆற்ற, வழக்குரைஞர் வீரமர்த்தினி இணைப்புரை வழங்கினார். பல்வேறு வழக்குரைஞர்கள் அமைப்புகளைச் சேர்ந்த ஆர்.எஸ்.பாரதி, எஸ்.பிரபாகரன்,ஆர்.சி.பால் கனகராஜ், கே.பாலு, பேராசிரியர் எஸ்.உதயபானு, வி.நளினி, எஸ்.ரஜினிகாந்த், ராஜா முகமது ஆகியோர் சிறப்புரையாற்றினர். ஆசிரியர் அவர்கள் ஆற்றிய தலைமையுரையில்,

 

மேலும்....

குழந்தை வளர்ப்பும் சுகாதாரமும்

– தந்தை பெரியார்

நமது நாட்டு மக்களில் 100-க்கு 95 பேர் சுகாதாரத்தின் பயனையறியாதவர்களாயும் அதையறிந்து கொள்ள வேண்டுமென்னும் அக்கறையில்லாதவர்களாயுமிருக்கின்றார்கள். காரணம், படிப்பின்மையும் பழக்க வழக்கமுமே-யாகும்.இதையனுசரித்தே மேல்நாட்டார் நம்மைச் சுகாதரமற்றவர்கள் என்றும், நாகரிகமற்றவர்கள் என்றும் நினைக்கிறார்கள். நம் நாட்டிலும் மேல் ஜாதிக்காரர்கள் என்போர், தங்களை நாகரிகத்தார் என்றும்,

மேலும்....

பெண்ணியப் புரட்சிக்கு யார் காரணம்?


பெண்ணியத்தின் முக்கியக் கூறுபாடுகளான,  பாலின சமத்துவம், பாலின சமவாய்ப்பு, சம படிப்புரிமை, உத்தியோக உரிமை, சம சொத்துரிமை எல்லாவற்றிற்கும் மேலான சம பிறப்புரிமை ஆகிய பலவற்றுக்கும் இன்னமும் போராடி வெற்றி பெறவேண்டிய இந்தப் பெண்  சமுதாயத்தில்,

மேலும்....