எச்சில் இலையில் உருளும் பக்தி

மூடநம்பிக்கையின் முடைநாற்றம்

எச்சில் இலையில் உருளும் பக்தி

அடுத்தவர் உண்ட இலையிலிருந்து ஒரு சோற்றுப் பருக்கை தன் உடலில் பட்டாலும் பலர் பதறுவதைப் பார்த்திருப்போம். எச்சில் இலையில் தப்பித்தவறிக் கைபட்டாலும் அருவருப்புக் கொள்வார்கள். ஆனால், பக்தி என்று வந்துவிட்டால் இவையெல்லாம் பறந்தோடிப் போய்விடுகின்றன.

இங்கு ஏராளமான மூடநம்பிக்கைத் திருவிழாக்கள் இந்தியா முழுக்க நடைபெறுகின்றன.

மேலும்....

திருநங்கைகளுக்குச் சம உரிமை

திருநங்கைகளின் உரிமைகளைப் பாதுகாக்க வகை செய்யும் தனிநபர் மசோதா மாநிலங்களவையில் ஏப்ரல் 24 அன்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த மசோதா நிறைவேற மூலகாரணமாக இருந்தவர் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா. திருநங்கைகளுக்குத் தேசிய ஆணையமும், மாநில அளவில் ஆணையமும் அமைக்க, வகை செய்யும் திருநங்கைகள் உரிமை மசோதா 2014 மாநிலங்களவையில் தி.மு.க. உறுப்பினர் திருச்சி சிவா அவர்களால் கொண்டுவரப்பட்டது.

மேலும்....

கண்ணதாசன் கூறுகிறார்: தமிழர்க்குத் தாலியில்லை

தந்தை பெரியார் அவர்கள் தன்மதிப்பு இயக்கத்தை உருவாக்கி, வளர்த்து, இந்த மண்ணில் புரட்சி செய்தவர். அவர் சீர்திருத்தக்காரர் அல்லர்; புரட்சிக்காரர்.

தன்மான உந்தலினால் உருவாக்கப்பட்டதே தன்மதிப்பு (சுயமரியாதை) இயக்கம். தன்மானம், தன்மதிப்பு ஒவ்வொரு மனிதனுக்கும் வேண்டும் என்பது அதன் பொருள்.

மேலும்....

இனி… சமுதாய-மான மீட்புப் பிரச்சாரம்தான்

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் 125ஆம் ஆண்டு பிறந்தநாள்விழா, சமஸ்கிருத ஆதிக்க எதிர்ப்புக் கருத்தரங்கம் ஆகியவை ஏப்ரல் 25, 26 ஆகிய இரண்டு நாள்கள் பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் சென்னை வேப்பேரி பெரியார் திடலில் உள்ள எம்.ஆர். ராதா மன்றத்தில் நடைபெற்றது.

முதல் நாள் நிகழ்வுகள் 25.4.2015  மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை வெகு சிறப்பாக ஏற்பாடுகள் செய்யப்பட்டு மூன்று அமர்வுகளாக நடைபெற்றன.

மேலும்....

இடிபாடுகளிலும் மூடநம்பிக்கை விதைக்கும் மதம்

நேபாளத்தில் நிலநடுக்கம்! ஆயிரக்கணக்கான மனிதர்கள் மண்ணுக்குள், இடிபாட்டிற்குள் சிக்கி மடிந்தனர். மனித நேயத்தோடு கவலை கொள்ளும், கண்ணீர் கசியும், இரங்கல் கொள்ளும் நிகழ்வு.

சுனாமியில் இறந்தாலும், சாலை விபத்தில் இறந்தாலும், நிலநடுக்கத்தில் அழிந்தாலும், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டாலும் நேயமுள்ள மனிதர்கள் நெஞ்சு நெகிழவே செய்வர். இறந்தவர் குடும்பத்தாருக்கு நம் கவலையைச் சொல்வோம், ஆறுதல் சொல்வோம், அவர்கள் துயரத்தில் பங்கு கொள்வோம்!

மேலும்....