கடலை மிட்டாய் கலாச்சாரத்தை கடைபிடிப்போம்!

50 ஆண்டுகளுக்கு முன் சிறுவர்கள் கடைகளில் வாங்கிச் சாப்பிடும் முதன்மையான தின்பண்டம் கடலை மிட்டாய். வேர்க்கடலையை வறுத்து, அதை வெல்லப்பாகில் கலந்து, உருண்டை பிடித்து விற்கப்படுவதே கடலை மிட்டாய். இன்றைக்கு உலகில் விற்கப்படும் அத்தனை நவீனத் தின்பண்டங்களையும் ஒரு பக்கம் வைத்து, கடலை உருண்டையை மறுபக்கம் வைத்து சத்துக்களைப் பட்டியல் இட்டாலும், உடலுக்குக் கேடில்லா நன்மையைப் பட்டியலிட்டாலும் முதலிடம் கடலை மிட்டாய்க்குத்தான்! யாராவது மறுக்க முடியுமா? வேர்க்கடலை உடலுக்கு நன்மை செய்யும் கொழுப்பை உள்ளடக்கியது. வெல்லம் இரும்புச் […]

மேலும்....

ஆசிரியர் பதில்கள்

கேள்வி : தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதும்,  பின்பு அவர்கள் விடுதலை செய்யப்படுவதும் வாடிக்கையாகிவிட்டது. தமிழக மீனவர் பிரச்சினைக்கு முடிவே கிடையாதா? – வ.க.கருப்பையா, பஞ்சம்பட்டி பதில் : மனம் இருந்தால் மார்க்கமுண்டே! எம் இனம் அல்லாதவர்கள் இதில் நடிப்புச் சுதேசிகளாக இருந்து பிரச்சினைக்குத் தீர்வு காணத் துடிப்பவர்களைப் போல் நடிக்கிறார்கள். மத்திய அரசு இலங்கையைத் தட்டிக் கேட்க வேண்டும். நேப்பாளத்தினை மிரட்ட, பொருளாதாரத் தடையை இந்திய அரசு காட்டுகிறதே; அதை இலங்கைக்குச் செய்தால் […]

மேலும்....

அமுக்குப் பேய் தூக்கத்தில் இறக்கும்? உண்மை என்ன?

நாம் உறங்கும்போது திடீரென நம்மை யாரோ அமுக்கிப் பிடிப்பது போலவும், நம்மால் புரள முடியாமல் பேச முடியாமல் தவிப்பது போலவும் ஒரு நிலை வரும். இது எல்லோருக்கும் எப்போதாவது ஒரு முறை வரும். எனக்கும் இதுபோன்ற அனுபவம் சில முறை வந்ததுண்டு. இவ்வாறு வருவது பேய் அமுக்குவது என்று பலரால் நம்பப்படுகிறது. அமுக்குறா பேய் என்று அதற்குப் பெயர் வைத்துவிடுகிறார்கள். இது முற்றிலும் தவறு. நம் உடலில் சில நேரங்களில் இரத்த ஓட்டம் திடீரென தடைப்படும்போது தற்காலிகமாக […]

மேலும்....

அய்ந்தாண்டு சட்டக் கல்வி எங்கு படிக்கலாம்?

1. நேஷனல் லா ஸ்கூல் ஆஃப் இந்தியா யுனிவர்சிட்டி, பெங்களூரு சர்வதேசப் புகழ்பெற்ற சட்டக் கல்வி நிறுவனமான பெங்களூருவில் உள்ள நேஷனல் லா ஸ்கூல் ஆஃப் இந்தியா யுனிவர்சிட்டி 1986ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இந்தக் கல்வி நிலையத்தில் பிஏஎல்எல்பி (ஆனர்ஸ்) என்ற ஒருங்கிணைந்த ஐந்து ஆண்டு சட்டப் படிப்பைப் படிக்கலாம். வர்த்தகச் சட்டங்கள், மனித உரிமைச் சட்டங்கள், பப்ளிக் பாலிசி உள்ளிட்ட பாடப் பிரிவுகளில் முதுகலைப் படிப்புகள் உள்ளன.  தொலைநிலைக் கல்வி மூலமும் பல்வேறு படிப்புகள் நடத்தப்-படுகின்றன. […]

மேலும்....

அய்யாவின் அடிச்சுவட்டில் -141

ஆரிய ஆதிக்கத்தை அடித்து நொறுக்கியது அய்யாவின் கைத்தடிதான்! 13.01.1979 மாலை புறப்பட்டு விமானம் மூலம் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரை வந்தடைந்தோம். என்னுடன் கழகப் பொருளாளர் கா.மா.குப்புசாமி, வடஆற்காடு மாவட்டச் செயலாளர் ஏ.டி.கோபால் ஆகியோர் உடன் வந்தனர். அன்று இரவு 7.30 மணியளவில் கோலாலம்பூர் சென்றடைந்த எங்களை மலேசிய திராவிடர் கழக முக்கிய பொறுப்பாளர்களும் தோழர்களும் திரண்டு வரவேற்பளித்தனர். 13.01.1979 அன்று மலேசியாவின் பூச்சோங் விழா நடைபெற்றது. விழாவில் கிளைக் கழகத் தலைவர் திரு.ராமன் அவர்கள் தலைமை தாங்கினார். […]

மேலும்....