கருவுற்ற நிலையிலும் களங்கண்ட வீராங்கனை!

– கி.வீரமணி சுயமரியாதை இயக்கத்தினை அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்கள் தொடங்கிய பின், அவரிடம் சிறந்த ஆய்வு அறிஞர்கள் _ சுவாமி கைவல்யம் போன்றோர், பொதுவுடைமைச் சிற்பி சிங்காரவேலு போன்றவர்களும், மேடைகளில் ஏறி கொள்கை முழக்கங்களைச் செய்து, பட்டிதொட்டி, காடுகழனியெல்லாம் அறிவுக் கொள்கையை நீர்ப்பாய்ச்சி, உரம்போட்ட பேச்சாளர்களாக, போட்மெயில் பொன்னம்பலனார் (இவர் சொந்த ஊர் லால்குடியை அடுத்த பூவாளூர். எனவே பூவாளூர் அ.பொன்னம்பலனார் என்று அழைக்கப்பட்டாலும்) பேச்சை வைத்து பலரால் அறியப்பட்டவர். அந்நாளில் அவ்வளவு வேகமாகப் […]

மேலும்....

புரட்சியை வரைந்த தூரிகை

“ஒப்பற்ற ஓவியர் புகழேந்தியின் சேகுவரா ஓவியக் கண்காட்சி கண்டேன் _ – உண்டேன். சேகுவரா _- புரட்சியின் பூபாளம். செயற்கரிய செய்த சரித்திரச் சாதனையாளர். அவரை நூல்களில் பல பக்கங்களில் தருவதற்குப் பதிலாக, ஓவியம் வரைந்து பேச வைத்துள்ளார் நம் ஓவியர் புகழேந்தி அவர்கள். இதை விரிவாக்கி, விளக்கக் குறிப்புகளுடன், ஒரு புத்தக வடிவில் கொண்டு வந்தால், அதைவிட இளைஞர்களுக்குப் புரட்சிப் பாடநூல் வேறு இருக்க முடியாது. அறவழியைப் புரியாதவர்கள், அவர் வழியைப் புரிந்துகொள்வார்களாக! என்று ஓவியக் […]

மேலும்....

குழந்தைகளுக்குச் சர்க்கரை நோய்! எப்படிச் சிகிச்சை செய்ய வேண்டும்?

– டாக்டர் வி.மோகன் (சர்க்கரை நோய் வல்லுநர்) எங்கள் மையத்தில் நூற்றுக்கும் அதிகமான பச்சிளங் குழந்தைகள் சர்க்கரை நோய் சிகிச்சை பெறுகிறார்கள். இவர்களுக்குத் தினமும் இன்சுலின் ஊசி போடுவதற்குப் பதிலாக மரபணுப் பரிசோதனை செய்து, வாய் வழியாக மருந்து தருகிறோம். ஒரு குறிப்பிட்ட மரபணுவில் ஏற்படும் மாற்றம் (வீஸீரீறீமீ ரீமீஸீமீ னீணீவீஷீஸீ) ஆறு மாதங்களுக்குட்பட்ட குழந்தைக்குச் சர்க்கரை நோய் வருவதற்கான காரணம். பிறந்த குழந்தைக்கு ரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருப்பதை டைப் 1 சர்க்கரை நோய் […]

மேலும்....

மக்கள் மனசு

வரலாற்றைத் தங்களுக்குச் சாதகமாகத் திரிக்க முயலும் இந்துத்வா வாதிகள் பற்றி உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்? சுரேஷ்குமார் பலராமன்: அடித்தட்டு இந்து சமுதாயத்தினரை மூளைச்சலவை செய்து திராவிட இயக்கங்களை பலவீனப்படுத்தலாம் என்ற முயற்சி முறியடிக்கப்பட வேண்டும். ராஜாராவ் ரவிசங்கர்: வரலாற்றை வெறுப்பு அரசியலுக்காகத் திரித்து கூறுபவர்களைப் பற்றி எழுதும் காலமும் வந்து விட்டது. ஸ்டாலின் ஸ்டாலின்: நடிகர் விவேக் சொன்னதுதான் 10,000 பெரியார், அம்பேட்கர் வந்தாலும் உங்களைத் திருத்த முடியாது டாடாடாடாடா. ரகுநாதன் குருசாமி: தமிழர் பற்றிய […]

மேலும்....