கண்டுபிடித்தது…. கடவுள் அல்ல! – 6

– மதிமன்னன் வயது ஆக ஆக, புத்தகங்களைக் கைக்கு எட்டிய தூரத்தில் பிடித்துக் கொண்டால்தான் படிக்க முடியும் என்கிற குறைபாடு (Presbyopia) ஏற்படுகிறது. கிட்டத்தில் இருக்கும் பொருள்களை அப்படிப் பார்த்தால்தான் மிகத் தெளிவாகக் காணமுடியும். ஒவ்வொரு கண்ணுக்கும் ஒவ்வொரு கண்ணாடி என்கிற வகையில் கிட்டப்பார்வைக்கு ஒன்றும், தூரப் பார்வைக்கு ஒன்றும் பயன்படுத்திய நிலை. இதை மாற்றி ஒரே கண்கண்ணாடியில் கிட்டப் பார்வைக்குப் பாதிக் கண்ணாடியும் தூரப் பார்வைக்குப் பாதிக் கண்ணாடியுமாக   இரு கண்களுக்குமாக ஒரே கண் கண்ணாடியை […]

மேலும்....

புதையல்

இந்தியா எங்கும் “தமிழ்” என்று தொடங்கும் ஊர்ப் பெயர்கள் ஆந்திராவில் – 29 ஊர்கள்அருணாசலப் பிரதேசத்தில் – 11 ஊர்கள்அசாமில் – 39 ஊர்கள்பீகாரில் – 53 ஊர்கள்குஜராத்தில் – 5 ஊர்கள்கோவாவில் – 5 ஊர்கள்அரியானாவில் – 3 ஊர்கள்இமாசலப்பிரதேசத்தில் – 34 ஊர்கள்கர்நாடகாவில் – 24 ஊர்கள்மகாராட்டிரத்தில் – 120 ஊர்கள்மேகாலயாவில் – 5 ஊர்கள்மணிப்பூரில் – 14 ஊர்கள்மத்தியப்பிரதேசத்தில் – 60 ஊர்கள் தமிழ் என்று தொடங்கும் ஊர்களுக்கு அருகே பழனி, தேக்கடி, […]

மேலும்....

மாட்டிறைச்சி உண்பதில் மக்களின் உணர்வு மதிக்கப்பட வேண்டும் மத்திய உள்துறை அமைச்சர் கருத்து

  மகாராட்டிராவில் மாட்டிறைச்சிக்குத் தடை விதித்தது குறித்து கருத்துக்கூறிய மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜு, மக்களின் உணர்வுகள் மதிக்கப்பட வேண்டும். இந்தியா போன்ற மதச்சார்பற்ற நாடுகளில் உணவுப் பழக்க வழக்கங்களுக்குக் கட்டுப்பாடோ தடையோ விதிக்கக் கூடாது என்றார். மாட்டிறைச்சியை உண்ண விரும்பக் கூடியவர்கள் பாகிஸ்தானுக்குச் சென்றுவிட வேண்டும் என்று அடாவடியான, ஆதிக்கப் போக்கிலான கருத்தைச் சொன்னவர் முக்தார் அப்பாஸ் நக்வி. இக்கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நான் மாட்டிறைச்சியை உண்பவன் என்னைத் தடுக்க யாராலும் முடியாது என்று […]

மேலும்....

தமிழ்ப் பாடலில் தமிழர் நாடுகளின் எல்லை!

சோழநாட்டு எல்லை கடல்கிழக்குத், தெற்குக் கரைபொரு வெள்ளாறு,குடதிசையில் கோட்டைக் கரையாம்; – வடதிசையில்ஏணாட்டுப் பண்ணை இருபத்து நாற்காதம்சோணாட்டு எல்லையெனச் செப்பு. சோழ நாட்டிற்கு எல்லையாகக் கிழக்குத் திசையில் கடலும், தெற்குத் திக்கில் நீர் நிரம்பிக் கரைகளைத் தாக்குகின்ற வெள்ளாறும், மேற்குத் திசையில் கோட்டைக் கரையும், வடக்குத் திக்கில் ஏணாட்டின் வயல்களும் உள்ளன. இவற்றிற்கு இடைப்பட்ட இருபத்து நான்கு காத தூரம் உள்ள நிலப் பரப்பே சோழநாடாகும் என்று சொல்வாயாக! வெள்ளாறு _ புதுக்கோட்டை நகருக்கு அருகில் ஓடும் […]

மேலும்....

அய்யாவின் அடிச்சுவட்டில்…. 132 ஆம் தொடர்

தமிழின மக்களை மனித இனத்தின் பட்டியலிலே இடம் பெறும் தகுதியை உண்டாக்கிய தமிழர்களின் இரட்சகர், உலக மானிடத்தின் ஒரு பெரும் வழிகாட்டி, தந்தை பெரியார் அவர்களின் நூற்றாண்டு விழாவை, திராவிடர் கழகம் சரியான அளவில் திட்டமிட்டு, பெரும் அளவில் செப்டம்பர் 16, 17, 18 (1978ஆம் ஆண்டு) நாட்களில் சென்னை மாநகரில் எடுத்து சரித்திரப் பெருமையைத் தேடிக் கொண்டுவிட்டது என்று சொல்லக்கூடிய நிலையில் சரித்திரத்தைப் படைத்தது. சென்னை, பெரியார் திடலில் பிரம்மாண்டமான பந்தல் போடப்பட்டு இருந்தது.

மேலும்....