உற்சாக சுற்றுலாத் தொடர் – 9

– மருத்துவர்கள் சோம & சரோ இளங்கோவன் ஆக்ரா – அய்.நா.அடையாளச் சின்னம் ஆக்ரா கோட்டை தாஜ்மகாலை விட்டுப் பிரிவது, காதலர்கள் சந்திப்பின் பின்னர் பிரிவது போலத்தான்! மீண்டும் வருகின்றோம் என்று சொல்லி விடை பெற்றோம். ஆக்ராவின் அடுத்த சிறப்பான இடம் ஆக்ரா கோட்டை. ஆக்ரா கோட்டை  பல வரலாற்று மிக்க இடம். மூன்று பானிப்பட்டுப் போர்கள் பற்றி வரலாற்றில் படித்திருப்போம். ராஜபுத்திரர்களுக்கும், முகமதியர்களுக்கும் நடந்த போர்கள். மாறி மாறி இந்தக் கோட்டையில் ஆண்டுள்ளனர்.அக்பர் கோட்டையைப் பெரிதாக்கி […]

மேலும்....

நாடாளுமன்றத்திலே பெண்ணுக்கு நா(நீ)தியில்லையா?

நாட்டையே பாதுகாக்கும் செயல்களை நிறைவேற்றும் நாடாளுமன்றத்தில் துப்புரவுப் பணியாளராக வேலை செய்யும் பெண் ஒருவர் அவரது மேலதிகாரியால் பாலியல் வன்முறைக்கு உள்ளாகியுள்ளார். நாடாளுமன்றம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களின் துப்புரவுப் பணியை ஒப்பந்த அடிப்படையில் பி.வி.ஜி. லிமிடெட் என்ற தனியார் நிறுவனம் செய்துவருகிறது. நாடாளுமன்ற இணைப்புக் கட்டிடத்தில் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளான பெண் 2013ஆம் ஆண்டு முதல் பணிபுரிந்து வருகிறார். 2014ஆம் ஆண்டு புதிய மேற்பார்வையாளராகப் பொறுப்பேற்ற நபரால் பாலியல் துன்புறுத்தலை அனுபவித்துள்ளார். கழிப்பறைகளைச் சுத்தம் செய்யும்போது, மேற்பார்வையாளர் பின்தொடர்ந்து […]

மேலும்....

தாலி பல்கோணப் பகுத்தாய்வு (2)

தாலி பல்கோணப் பகுத்தாய்வு (2) தமிழர்க்குத் தாலியில்லை! ம.பொ.சி.க்கு கண்ணதாசன் மறுப்பு – மஞ்சை வசந்தன் சாலியொருமீன் தகையாளைக் கோவலன்மாமுது பார்ப்பான் மறைவழிக் காட்டிடத்தீவலம் செய்வது காண்பார்….. என இளங்கோவடிகள் குறிப்பிடுகிறார். பார்ப்பான் மறைவழி காட்டியது, தீவலம் செய்தது, அருந்ததி பார்த்தது எல்லாம் குறிப்பிடுகிறார். தாலிகட்டியது அல்லது அரும்பத உரையாசிரியர் கருத்துப்படியும் அதைத்தழுவிய சிவஞானம் கருத்துப்படியும் மாங்கல்ய சூத்திரம் கட்டியது இதிலே இல்லை. இதிலிருந்து மங்கல அணி மாங்கல்ய சூத்திரம் ஆக முடியாது என்பது புலனாகும். அதுவுமன்றி, […]

மேலும்....

சிறுகதை : அணில் குஞ்சு

– டாக்டர் கலைஞர் கல் ஒன்று வீசப்பட்டவுடன் புறாக் கூட்டம் சிதறிப் பறப்பது போல புனித மேரிப் பள்ளியின் தண்டவாள மணி அடிக்கப்பட்டவுடன், இளம் பிள்ளைகள் தயாராகக் கட்டி வைத்திருந்த புத்தக மூட்டைகளைத் தோளில் தொங்கப் போட்டுக் கொண்டு வெளியே ஓடிவந்தனர். அவர்களைக் கேட்காமலே அவர்களின் கால்கள், அவர்களின் வீடுகளை நோக்கி ஓட்டமும் நடையுமாக விரைந்து கொண்டிருந்தன. புனித மேரிப் பள்ளியிலிருந்து சிறிது தொலைவில் கிளை கிளையாகப் பிரியும் தெருக்களில் அந்தப் பிள்ளைகளும் பிரிந்து சென்றனர். கூட்டமாகக் […]

மேலும்....

அறிவோம்! தெளிவோம்!

கோபுர தரிசனம் செய்வதால் மட்டுமே கோயிலுக்குச் சென்றுவந்த பலனைப் பெற முடியுமா? – இது 11.12.14 தினமலர் பக்தி மலரில் கேட்கப்பட்ட கேள்வி. அதற்கு, வேலைநிமித்தமாக கோவிலுக்குச் செல்ல முடியாதவர்களுக்கும், பயணம் செய்பவர்களுக்கும் பொருத்தமான விஷயம் இது. மற்றபடி கோவிலுக்குச் சென்று வழிபட்டு வந்தால்தான் சிறப்பு – என பதில் தரப்பட்டிருக்கிறது. ஆக, ஆரியக் கூத்தாடினாலும் ஆரியம், காசு காரியத்தில் கண்ணாயிருக்கும் என்பது இதன் வாயிலாக உறுதிப்படுத்தப்படுகிறது. பக்தர்கள் கோவிலுக்குப் போனால்தானே குருக்களுக்குத் தட்சணை கிடைக்கும். பக்தியின் […]

மேலும்....