பேரழகு பொலிவும் பெலீசு நாடு!

இரவு ஆட்ட பாட்டங்கள் முடிந்து உறங்கி எழுந்தால் கப்பல் தென் அமெரிக்காவின் பெலீசு  நாட்டில் நிற்கின்றது. காலை உணவை முடித்து (எத்தனை விதமான உணவுகள்?) பெலீசைப் பார்க்கக் கிளம்பினோம். தென் அமெரிக்காவில் அழகிய சிறிய நாடுகள் பல உள்ளன, அதில் பெலீசு ஒன்று. முன்னர் ஹாண்டுராசுடன் இருந்தது. மலை, காடு-, நீர்வளம் அமைதியும், புன்னகையும் புரியும் இசை விரும்பும் மக்கள் நிறைந்த இடம் .மாயன் நாகரீகத்தில் இருந்து ஜமாய்க்காவி-லிருந்து வந்து குடியேறியவர்கள் என்று பல இனக்கலப்பு இங்கே! […]

மேலும்....

கடவுள் வந்தது எப்படி இதோ ஓர் ஆதாரம்!

மைல்கல்லையே முனியசாமி கோயில் ஆக்கிய விருதுப்பட்டி மக்கள்! விருது நகரில் செந்திவினாயகர் தெருவில் விருதுப்பட்டி 1 மைல் என்று தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் எழுதப்பட்ட மைல் கல்லை முனியசாமி கோயிலாக்கியுள்ளனர். அக்கோயிலின் கடவுளே மைல்கல்தான். அப்பகுதி மக்கள் அதைப்பய பக்தியுடன் வணங்குகின்றனர். அக்கோயிலுக்கு உண்டியலும் வைக்கப்படுள்ளது. இன்றைய விருது நகர்தான் அன்றைய விருதுப்பட்டி. ஆக, கடவுள்கள் இப்படித்தான் வந்தன. படைவீரனுக்கும், பத்தினிப்பெண்களுக்கும் நினைவுக்கல் நட்டு வணங்கினர். அவையே பின்னாளில் வீரன் கோயிலாகவும், அம்மன் கோயிலாகவும் மாறின!

மேலும்....

அத்திப்பழத்தின் அரியபயன்கள்

1. மலச்சிக்கலைத் தடுக்கிறது: மூன்று அத்திப்பழங்களில் ஐந்து கிராம் நார்ச்சத்து அடங்கியுள்ளது. எனவே, குடல் இயக்கத்தைச் சீராக்கி மலச்சிக்கலைத் தடுக்கின்றது. 2. எடைக் குறைப்பு: உடல் பருமனால் அவதிப்படுவர்கள் தமது எடையை குறைத்துக் கொள்ள அத்திப் பழம் பரிந்துரைக்கப்படுகிறது. 3. கொழுப்பைக் குறைக்கிறது: அத்திப்-பழத்தில் அமைந்துள்ள பெக்டின ஒரு கரையக்கூடிய நார்ச்சத்து. எனவே இந்த நார்ச்சத்து செரிமானப் பாதையில் பயணிக்கும் போது தேவையற்ற கொழுப்புகளை உடலை விட்டு வெளியேற்றுகிறது. 4. இதயநோயைத் தடுக்கிறது: அத்திப்பழத்தில் அடங்கியுள்ள பினால், […]

மேலும்....

ஒரு வேளைக்கு யானை 200 லிட்டர் தண்ணீர் குடிக்கும்!

யானையின் எடை சராசரியாக 6,000 கிலோ (6 டன்) யானை குட்டியின் (பிறக்கும் போது) சராசரி எடை 115 கிலோ தந்தத்தின் எடை சராசரியாக 90, கிலோ யானை தனது தும்பிக்கையில் சேகரிக்கும் நீரின் அளவு நான்கு லிட்டர். ஒரு யானை நாள் ஒன்றுக்கு 200 லிட்டர் தண்ணீர் குடிக்கிறது. யானையின் கர்ப்பகாலம் 22 மாதங்கள் சராசரியாக ஒரு நாளைக்கு 150 கிலோ உணவு உண்கிறது. யானையின் சராசரி உயரம் 3 மீட்டர்.

மேலும்....

இஞ்சி இடுப்பழகு என்றால் என்ன? – ஒளிமதி

இஞ்சி இடுப்பழகு என்று பலரும் கூறுவர். திரைப்படப் பாடல்கூட பரவலாக அறியப்பட்டது. ஆனால், அதன் பொருள் என்ன? இஞ்சி போன்று இடுப்பா? இஞ்சி போன்ற அழகா? என்ன காரணத்தால் அப்படிச் சொல்லப்பட்டது? பலருக்கும் தெரியாது. அதன் உண்மைக் காரணத்தை இங்கே விளக்கியுள்ளோம். படியுங்கள்! பலருக்கும் பகிருங்கள்! இஞ்சி என்பது பித்தம் அகற்றக் கூடியது; கொழுப்பைக் குறைக்கக் கூடியது. அதனால்தான் ஆட்டுக்கறி போன்ற கொழுப்புமிக்க உணவு சாப்பிடும்போது இஞ்சி அதிக அளவில் சேர்க்கப்படுகிறது. இடுப்பு என்பது ஒடுங்கி இருந்தால்தான். […]

மேலும்....