கருத்து

மாட்டிறைச்சி உண்பது தனி நபரின் உரிமை. அதை அரசே தடுப்பது ஜனநாயகத்துக்கு எதிரானது. பொதுமக்கள் எதை உண்ண வேண்டும் என்பதை அரசு எப்படித் தீர்மானிக்க முடியும்? – கிரீஷ் கர்னாட், கன்னட எழுத்தாளர் சுதந்திர நாட்டில் ஒருவருக்கு விருப்பமான உணவை உண்பதற்கு முழு உரிமை உள்ளது. சைவம், அசைவம் என்பது அவரவரின் தனிப்பட்ட விருப்பம் சார்ந்தது. இதில் அரசு தலையிட முடியாது. – சித்தராமையா, முதல் அமைச்சர், கருநாடகா. அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவை நான்  மதிக்கிறேன். […]

மேலும்....

அதிர்வை ஏற்படுத்திய ஏப்ரல் 14 முன்னும் பின்னும்

– கவிஞர் கலி.பூங்குன்றன் திராவிடர் கழகத்தின் சார்பில்- _ அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 125ஆம் ஆண்டு  பிறந்த நாளன்று (14.4.2015) சென்னை பெரியார் திடலில், பெண்ணடிமைச் சின்னமாம் தாலி அகற்றிக் கொள்ளுதல் விழாவும், மாட்டுக்கறி விருந்தும் நடத்தப்படும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் அறிவித்தார்கள். அது தொடர்பான தடைகள் _ விமர்சனங்கள் _ கைது நடவடிக்கைகள் _ சர்ச்சைகள் தொடர்ந்து-கொண்டே இருக்கின்றன. இவைபற்றி என்றென்றும் பதிய வைக்கும் வகைகளில் விவரங்கள் இங்கே […]

மேலும்....

காவிரி பிரச்சினைக்குத் தீர்வு காணப்படாததற்குக் காரணம் மத்திய அரசின் தேர்தல் கண்ணோட்டமே!

  தமிழ்நாட்டின் உயிருக்கு நிகரான தொழில் விவசாயம் இதில் ஈடுபட்டுக் கொண்டு இருப்பவர்கள் பெரும்பாலும் தாழ்த்தப்பட்டவர்களும், பிற்படுத்தப்பட்டவர்களுமேயாவார்கள். அதிலும் குறிப்பாக ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த பெண்களே பெரும்பாலும் விவசாயத்தில் அடிப்படைப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த விவசாயம் மட்டும் உயர் ஜாதிக்கார்களின் தொழிலாக இருந்திருக்குமேயானால் இத்தொழில் இந்த அளவுக்கு நசிந்து போயிருக்காது என்பது தந்தை பெரியார் அவர்களின் கருத்துக் கணிப்பு! 1975ஆம் ஆண்டு முதலே தமிழ்நாடு பெரும் அளவுக்கு வஞ்சிக்கப்பட்டு வருகிறது.சட்டத்திற்கோ, நீதித்துறைக்கோ நியாயத்திற்கோ, மரபுகளுக்கோ _- […]

மேலும்....

கருப்புச்’சாட்டை ‘

தாலி பிரச்சினையில் திராவிடர் கழகத்துக்கும் பெரியாருக்கும் மக்கள் மத்தியில் எதிர்ப்பு இருப்பதாகக் கருதிக் கொண்ட காவிக்கும்பல், கருப்புச்சட்டையைக் கொளுத்துவோம்… கழற்றுவோம்… என்றெல்லாம் கூக்குரலிட, இந்தப் பாசிசத்திற்கு எதிர்ப்பை பதிவு செய்வோம்; ஏப்ரல் 22-ஆம் தேதி காலையில் அனைவரும் ஒரே நேரத்தில் கருப்புச்சட்டை அணிந்து முகநூலில் படத்தை மாற்றுங்கள் என்று எழுந்தது தமிழ் இளைஞர்களின் அறிவிப்பு. ஒரே நாள் தான்… அடேயப்பா…. 25000க்கும் மேற்பட்டோர் குடும்பம் குடும்பமாக கருப்புச் சட்டை அணிந்து முகநூலில் படத்தை மாற்றி பாசிசத்திற்கு எதிர்ப்பைப் […]

மேலும்....

உங்களுக்குத் தெரியுமா?

இராசாராம் மோகன்ராய் வேதங்களின் கருத்துகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த போது, தங்களைத் தவிர வேறுயாரும் அதைப் படிக்கக்கூடாது என்று காரணம்காட்டி, பார்ப்பனர்கள் அதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்தார்கள் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

மேலும்....