மோடியின் தூய்மை இந்தியா திட்டத்துக்கு இந்துத்வாவாதிகள் முட்டுகட்டை

  மோடியின் தூய்மை இந்தியா திட்டம் முதல் ஆண்டு நிறைவை நெருங்கும் தருணத்தில் அதற்கொரு பெரிய எதிர்ப்பு இராஜஸ்தான் மாநில மதவாதிகளிட-மிருந்து கிளம்பியுள்ளது.கழிப்பறைகள் தவிர்த்து வெட்ட-வெளியிலும், பொது இடங்களிலும், இயற்கை உபாதைகளைக் கழிப்பதைத் தடைசெய்யும் சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்த ஜெயின்சமுகத்தின் திகம்பரமுனிகள் ஆயத்தமாகின்றனர். ஜெயின் முனிகளின் தரம் பாச்சோ அந்தோலன் “(Dharam Bachao Andolan)’’ அமைப்பு திறந்த வெளியில் மலம் கழிப்பது எங்களின் மதப்பழக்கம். கழிவறைகளில் கழித்து நீர் பீச்சீ வெளியேற்றுவது நுண்ணுயிரிகளைக் கொல்வதாகும். They […]

மேலும்....

பீகார் தேர்தல் தமிழ்நாட்டின் எதிர்க்கட்சிகள் என்ன செய்யப் போகின்றன?

பிகாரில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் முடிவுகள், பலருக்கும் பல வகைப் பாடங்களைப் போதிக்கின்ற தேர்தல் முடிவுகளாகும்; பா.ஜ.க. கூட்டணியிலிருந்து வெளியேறிய நிதிஷ்குமார்பற்றி பிஜேபி தொடர்ந்து அவதூறு பரப்பியே வந்தது! அவரால் முதலமைச்சராக நியமிக்கப்பட்ட ஜித்தன்ராம் மாஞ்சி என்ற தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவரை நிதிஷுக்கே துரோகம் இழைக்கும்படிச் செய்து, அவரை மறைமுகமாகத் தூண்டிவிட்டு, அவரை ஒரு தனிக்கட்சி அமைக்கச் சொல்லி, அவரை விபீஷ்ணர் ஆக்கி,  தன் வசம் சேர்த்துக் கொண்டது பா.ஜ.க. என்ற உயர்ஜாதி நலப் பாதுகாப்புக் கட்சி. […]

மேலும்....

உங்களுக்குத் தெரியுமா?

நீதிக்கட்சி ஆட்சிக்கு முன்புவரை மருத்துவக் கல்லூரிப் பட்டப்படிப்பிற்கு சமஸ்கிருதம் தெரியவேண்டும் என்று இருந்ததைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா? இதன் பொருள் என்ன? பார்ப்பனர்கள் மட்டுமே டாக்டர்களாக வேண்டும் என்பது தானே! இக்கொடுமை பனகல் அரசர் கொண்டு வந்த தமிழ்நாடு பல்கலைகழகச் சட்டம் மூலம் நீக்கப்பட்டது.

மேலும்....

தீபாவளி கொண்டாடுவோரே இவற்றைச் சிந்தியுங்கள்

தீபாவளி “இந்துப் பண்டிகை” அல்ல!

தீபாவளி கொண்டாடுவோரே இவற்றைச் சிந்தியுங்கள்

– குடந்தய் வய்.மு.கும்பலிங்கம்

பூமியைப் பாயாகச் சுருட்டினான் என்கிற கதையை ஒத்துக் கொண்டு  நம்பிக் கடைப்பிடிக்கின்ற தமிழா! நீ உலகம் தட்டை என்கிற காட்டுமிராண்டிக் காலக் கற்பனைக் கதைகளோடு தொடர்பு கொண்டு ஏன் உன்னை இழிவுபடுத்திக் கேவலம் செய்து கொள்கிறாய்?

அச்சமும், அறியாமையும் சேர்ந்து பெற்றெடுத்த பிள்ளைகளே மதமும், கடவுளும் என்கிற நமது அறிவுப்பூர்வமான நாத்திக வாதத்தை தீபாவளி பற்றிய மூடக்கதை மெய்ப்பித்து விட்டதே!

மேலும்....

பசுவை புனிதமாக(?) மதித்த வரலாறு இல்லை!

பசு உணவுக்கே பயன்பட்டது!

(ஆதாரபூர்வ அலசல்)                                                          – சரவணா இராசேந்திரன்

மனிதன் பசுவை முதல் முதலாகப் பார்த்த போது அதை இன்றையப் பசுவாகப் பார்க்கவில்லை, மிகவும் கொடூர குணம் கொண்ட ஆவ்ரோச்ஸ் (aurochs) என்ற காட்டுவிலங்கினமாகத் தான் பார்த்தான், ஒரு ஆவ்ரோச்ஸ் விலங்கு சுமார் 500 கிலோவிற்கும் மேலாக பெரிய உருவமும், கடுமையாகத் தாக்கும் மனப்பான்மையும் கொண்டது, அதன் கொம்புகள் இன்றைய காளை மாடுகளின் நீண்ட கொம்புகளை விட இரண்டு மடங்கு அளவு இருந்தன.

மேலும்....