திராவிடமும் தேசியமும்
– புலவர் க.முருகேசன்
….நவம்பர் 01-15 இதழின் தொடர்ச்சி
கல்வெட்டில் நாடுகள்
சோழர் கல்வெட்டு முதற்பராந்தகச் சோழன் கி.பி.(907–957) ஆனைமலை நாசிங்கப்பெருமாள் சபையோர் சாசனம் — சோழ நாட்டுப் புறங்கரம்பை நாட்டு மருதூர்.
தென்னவன் மூவேந்தவேளான் சாசனம் 995–பொய்கைநாடு இராசேந்திரசிங்க வளநாடு, தியாக வல்லி வளநாடு, திரிபுவன முழுதுடைய வளநாடு, திருவாலி நாடு, நித்தவினோத வளநாடு, இராசராசக்கிணறு மன்னன் இராசராசன் (885–1014) வேங்கைநாடு, இராசிபுரத்து நகரத்தார் சாசனம் மன்னன் இராசராசன் வேங்கைநாடு, குடமலை நாடு, சாமுண்டப்பை நிபந்தம் மன்னன் முதலாம் இராசேந்திரன் (1012–1044) பங்கள நாடு, வகைமுகைநாடு இந்த கல்வெட்டில் மன்னனின் வெற்றிச்சிறப்பைக் கூறுமிடத்தில் வங்காள தேசம் ஆரியதேசம் வென்றதாகக் குறிப்பிடப்படுகிறது. தமிழ் நிலத்திற்குப் புறத்தே உள்ள நாடுகள் தேசமென்று வழங்கப்-பட்டதால் தன்னாட்டுப் பகுதியை நாடு என்று குறிப்பிடும் கல்வெட்டு பிறநாட்டை அவர்கள் வழங்கியபடியே தேசமென்று குறிப்பிடுகிறது. இதிலிருந்து தேசம் பிறமொழிச்சொல் பிறநாடுகளைக் குறித்து வழங்கிய சொல் என்பது தெளிவாகிறது.
மேலும்....