அய்யாவின் அடிச்சுவட்டில் – 143

அதிகாலை வரை அணியணியாய் வந்து வரவேற்றார்கள்! கேள்வி: திரு. வீரமணி அவர்களே தங்களுடைய இலக்கியத்துறை வாழ்க்கை பற்றி தெரிந்து கொள்ள விரும்புகிறோம். தாங்கள் இலக்கியத் துறையில் எந்த அளவு ஈடுபாடு கொண்டு இருக்கின்றீர்கள். பதில்: இலக்கியம் என்பது என்ன? என்பதில் பிறருக்கும் எங்களுக்கும் கருத்து வேறுபாடுகள்கூட இருக்கலாம். இலக்கியத்திற்காகத்தான் இலக்கியம் இருக்க வேண்டும் என்று சொல்லுகின்ற பண்டித மனப்பான்மை கொண்டவன் அல்ல நான். இலக்கியம் என்பது சமுதாயத்தினுடைய தேவைக்குப் பயன்பட வேண்டும். குடி இருப்பதற்குத்தான் வீடு கட்டுகின்றோம் […]

மேலும்....

பெரியார் தலைமுறையின் அடுத்த தூண்

– தவத்திரு குன்றக்குடி அடிகளார் உலகத்தின் தொன்மைமிக்க இனங்களுள் தமிழினமும் ஒன்று. வரலாற்றுக் காலத்துக்கு முன்பே தோன்றி வளர்ந்த இனம் தமிழினம். தமிழினம் மொழியால், நாகரிகத்தால் செழித்து வளர்ந்து வரலாற்றுச் சிறப்புடையதாக வாழ்ந்த காலம் இன்றைக்கு மூவாயிரம் ஆண்டுகளைக் கடந்து நிற்கிறது. இவ்வளவு பழைமையான காலத்தில் தமிழினத்தைப் போல் சிறப்புற்று வாழ்ந்த இனம் வேறு ஒன்றையும் வரலாற்றில் காணோம். தமிழ் இனத்தோடு ஒப்ப வைத்துப் பேசக் கூடிய நாட்டு மக்கள் கிரேக்கர், ரோமானியர், சீனர் எனலாம். இந்த […]

மேலும்....

வெல்லும் அணி உடையான் வீரமணி!

– உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் ஈரமணி நீர் விழியாள் இனிய தமிழ் அன்னைஆர் எழுவார் அணி திரள்வார் என அழும் நாள் இந்நாள்போரின் மணி கேட்டெழுந்து பொங்கும் அணி இடையேவீரமணி நடத்தும் அணி வெல்லும் அணியாகும்! செந்தழலின் விழியுடையான் சினவேங்கை நடையான்!தந்தை பெரியார் அமைத்த தனித் தமிழர் படையான்!எந்தமிழர் மறவேங்கை இனிய நினை விடையான்சிந்துவன தமிழ்ப்பூக்கள் அன்று! வெறிப்பாட்டே! வெட்டுவதும் கொல்லுவதும் பாவம் எனச் சொல்லிகெட்டழிந்தார் தமிழினத்தார்! கிடைத்த தெலாம் சாவே!தொட்டவனைத் தொலைத்திடுதல் வேண்டும்! எனத் […]

மேலும்....