’அறிஞர் அண்ணாவும் திராவிட இயக்கமும்’

ஆசிரியர்:      பேராசிரியர் அ.அய்யாசாமி     வெளியீடு :          அன்னை முத்தமிழ்ப்            பதிப்பகம்,      10 (ணி55), மூன்றாம்        குறுக்குத் தெரு,     திருவள்ளுவர் நகர், திருவான்மியூர் விரிவு, சென்னை- -_ 600041. விலை: ரூ.50 பக்கங்கள்: 72 அண்ணாவின் வாழ்வு என்பது தனிமனிதரின் சராசரி வாழ்வாகாது. அது வரலாற்றோடு பிணைந்தது. அதிலும் தந்தை பெரியாருடன் இணைந்தது என்னும்போது அந்த வரலாறு இன்னும் முதன்மைப் பெறுகிறது. அண்ணாவின் இளமைக் காலம் முதல் இந்நூலில் விளக்குகிறார். இந்நூலுக்கு திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் […]

மேலும்....

வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா?

– புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் ஆலயம் இதையும் வடசொல் என்று கூறுகின்றார்கள் பார்ப்பனரும் அவர் அடியார்க்கடியாரும். ஏன் கூறமாட்டார்கள். ஏமாந்தாரும் காட்டிக் கொடுத்தாரும் நிறைந்த தமிழகத்தில்? ஆல் என்பதனடியாகப் பிறந்தது இச்சொல். ஆல்+அ+அம் எனின் அவ்வும், அம்மும் சாரியைகள். அம் என்பது அகம் என்பதன் திரிபு எனினும் அமையும். ஆலயம் என்பன் நேர்பொருள் ஆலாகிய இடம் என்பதாம். முன்நாளில் ஆலின் அடியில் அமைந்த நிழல் மிக்க பேரிடத்தை வழக்குத் தீர்ப்பிடமாகவும், கல்வி பயிலிடமாகவும், விழா நடைபெறுமிடமாகவும் கொண்டு பெருமைப்படுத்தினார்கள். […]

மேலும்....

இவ்விடம் அரசியல் பேசலாம்

– கல்வெட்டான் தோழர் சந்தானத்தின் சலூனில் அப்போதுதான் சற்று கூட்டம் குறைந்தது. பெரும்பாலும் மொட்டை போட வந்தவர்களின் கூட்டம் தான். மொத்த வாடிக்கையாளர்களும் கிளம்பியபின் சற்று ஓய்வாக அரசியல் பேச்சைத் தொடங்கி வைத்தார் தோழர் மகேந்திரன். என்ன தோழர், உங்க சலூன் கடையை தடை பண்ணப் போற தா கேள்விப்பட்டேனே, உண்மையா? என தோழர் சந்தானத்திடம் கேட்க, அட நான் என்ன இந்தக் கடையில சலூன் தானே நடத்துறேன், இல்ல, வர்றவங்களுக்கு ஷேவிங்கோட பாடி மஸாஜும் பண்ணி […]

மேலும்....

திரைப்பார்வை : புறம்போக்கு

இயல்பாகவே தான் ஒரு முற்போக்குச் சிந்தனையாளர் என்று சொல்லாமல் தன் படங்களின் வாயிலாக அதனை வெளிப்படுத்தி வருபவர் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன். இவரின் படங்கள் அனைத்தும் அனைவராலும் அந்தந்த காலகட்டத்தில் பேசப்படுபவையாகவே அமையும், அதற்கு இந்த புறம்போக்கு என்கிற பொதுவுடைமை திரைப்படம் விதிவிலக்கல்ல. இந்த திரைப்படம் ஒரு வழக்கமான திரைப்படம் கிடையாது. ஆழமான சமூக கருத்தினை அடிப்படையாகக் கொண்டது. தேசத் துரோகக் குற்றச்சாட்டிற்காக மூன்று மரண தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டிய குற்றவாளி ஆர்யா. இந்த மரண […]

மேலும்....

கல்லூரி முதல்வரானார் திருநங்கை!

நாட்டில் முதல்முறையாக திருநங்கை ஒருவர் கல்லூரி முதல்வராகியுள்ளார். மேற்கு வங்க மாநிலம் மிதுனபுரி மாவட்டத்தில் உள்ள விவேகாநந்தர் நூற்றாண்டு நினைவுக் கல்லூரியில் வங்கமொழி ஆசிரியராகப் பணியாற்றிய மானபி பந்தோ பாத்தியாயா என்ற இவர் ஜூன் மாதம் (2015) 9ஆம் தேதி முதல் கிருஷ்ணா நகர் பெண்கள் கல்லூரியில் முதல்வராகப் பொறுப்பேற்கிறார். தற்போது கிடைத்துள்ள இந்த உயர்வு சிறப்பு வாய்ந்தது. வாழ்வில் சாதிக்க பாலினம் ஒரு தடையல்ல என்பதை இது உறுதிசெய்கிறது என்றார்.

மேலும்....