பார்ப்பனர்களே இந்த் நாட்டைவிட்டே ஓடிவிடுங்கள்! – விவேகாநந்தர்

பூணூல் என்பது கோவணம் கட்டும் கயிறே! சொன்னவர் சுவாமி விவேகாநந்தர்.

சிஷ்யனானவன் குருவினுடைய குடிலுக்கு செல்லும்போது குரு அவனுடைய தகுதியை அறிந்து, உள்ளம், சொல், செயல் ஆகிய மூன்றையும் அவன் அடக்கி வைத்திருப்பதற்கு அடையாளமாக முப்புரியாகிய முஞ்சா என்னும் புல்லினை அவனுடைய இடுப்பிலே கட்டி அவனுக்கு தீட்சை செய்து வேதங்களை போதிப்பார். இடுப்பில் கட்டிய அந்த முப்புரி கயிற்றில் சிஷ்யன் கோவணம் கட்டிக்-கொள்வான்.

மேலும்....

பத்து டன் எடைகொண்ட லாரியைப் பகலிரவு பாராது ஓட்டும் பெண்

துணிவு மற்றும் சாகச செயலுக்கான தமிழக அரசின் உயரிய விருதான கல்பனா சாவ்லா விருது பெற்றிருக்கிறார், லாரி ஒட்டுநர் ஜோதிமணி. ஆறாவது வரை மட்டுமே படித்த இந்த கிராமத்துப் பெண்ணுக்கு, கடந்த சுதந்திர தினத்தன்று, விருதுடன் தங்கப் பதக்கம் மற்றும் ரூபாய் ஐந்து லட்சம் ரொக்கப் பரிசையும் அளித்துள்ளார் தமிழக முதல்வர் ஜெயலலிதா. விருதுக்காகவெல்லாம் இல்லைங்க… வாழ்க்கைக்காக செஞ்சது எல்லாம்! –

மேலும்....

அயல்நாட்டாரும் மதிக்கும் அரும்பெருந்தலைவர் பெரியார்! – – கவிஞர் கண்ணதாசன்


(சிதம்பரம் கார் அளிப்பு விழாவில் கண்ணதாசன் பேசியதன் விவரம்)

இந்த விழாவின் வெற்றி கண்டு மகிழ்ச்சியடைகிறேன். தந்தை பெரியாருக்கு நல்லதொரு காரை அன்பளிப்பாகத் தர நாம் கூடியுள்ளோம்.

ஐயா அவர்களுக்கு ஒரு நாளாவது பேசா விட்டால் உடல்நிலை குறைந்து விடும் என்ற நிலையிலுள்ளது. ஆனால் அக்காலத்தில் கோடிக்கணக்கான மக்கள், கோயில், குளம், தலைவிதி போன்றவற்றை நம்பித் திரிந்தனர். ஒற்றைப் பார்ப்பான் வந்தால் ஒதுங்குவதும், எண்ணெய் வருகிறதா, எனப் பார்ப்பதும், பல்லியின் குரலுக்கும் பயந்தும் இருந்தனர். அந்நாளில் முதன் முதலாக ஒலித்த குரல் தந்தை பெரியாரின் குரல்தான்.

மேலும்....

கொள்கை எதிராளியைக் கொல்வதுதான் தீர்வா?

– சிகரம்


ஆரிய பார்ப்பன அணுகுமுறை அன்றுமுதல் இன்று வரை கொள்கை எதிராளியைக் கொன்று தீர்ப்பதைக் கொள்கையாய் கொண்டுள்ளது.

சைவத்தை ஏற்காது சமணத்தை பின்பற்றியதால், பேசியதால் மன்னன் உதவியோடு 8000 சமணர்களைக் கழுவேற்றிக் கொன்றான் திருஞானசம்பந்தன் என்ற ஆர்ய பார்ப்பான்.

மேலும்....

உலகெங்கும் ஒலிக்கிறது பெரியார் குரல்!

– மஞ்சை வசந்தன்


மண்டைச் சுரப்பை உலகு தொழும் என்ற புரட்சிக்கவிஞரின் புகழ்பெற்ற வரி நூற்றுக்கு நூறு மெய்யாகி வருகிறது! பெரியார் சொல்லாததில்லை என்ற அளவிற்கு குவிந்து கிடக்கும் அவரது பல்துறைச் சிந்தனைகள் உலகெங்கும் இன்று பரவி வருகின்றன. பெரியார் உலகமயமாகிறார் என்ற தமிழர் தலைவரின் கணிப்பு கண்முன்னே மெய்யாகிறது.

மேலும்....