அய்யாவின் அடிச்சுவட்டில்…. 128 ஆம் தொடர்

ஒப்பற்ற தலைவருக்கு நூற்றாண்டு விழா! 07.06.1978 அன்று தஞ்சையில் நடைபெற்ற வாழ்க்கை ஒப்பந்த விழாவில் (கரந்தை தமிழ் மன்றத்தில்) நான் கலந்துகொண்டு சுயமரியாதைத் திருமண அடிப்படை _- எஜமானன் அல்ல ஆண்; அடிமை அல்ல பெண்! என்று குறிப்பிட்டு விழாவில் நீண்டதோர் உரை நிகழ்த்தினேன். அந்த உரையின் சில பகுதிகளை மட்டும் இங்கு குறிப்பிடுகிறேன். இந்தத் திருமணத்தை நடத்துவதில் எங்களுக்கு வேண்டுமானால் கொஞ்சம் அவசரம் இருக்கலாமே தவிர உங்களுக்கு வேலை இல்லை. ஏனென்று சொன்னால் அவர்கள் போட்டிருக்கின்ற […]

மேலும்....

ஊன்றிப் படிக்க உண்மையை உணருக!

ஊன்றிப் படிக்க உண்மையை உணருக! வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா? – புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தெய்வம் தெய்என் கிளவி கொள்ளலும் கோறலும் என்பதொரு நூற்பா பிங்கலந்தைப் பழம் பதிப்பில் காணப்பட்டது. இதே நூற்பா தெய்யென் கிளவி கோறலும் தெய்வமும் என்று வேற்றுமையுடன் வேறு பதிப்பில் காணப்படுகின்றது. ஆதலின், தெய் என்பதற்குக் கொல்லுதல், தெய்வம் என்பன பொருளாகக் கொண்டால் இழுக்கில்லை. இதனால் நாம் அறியக் கிடக்கும் செய்தி என்ன எனில் கூறுவோம். அறிவு நிரம்பாத பண்டை நாளில், பெருங் […]

மேலும்....

தாலி கட்டுதல் என்னும் சடங்கு ஒழிந்தது

– தந்தை பெரியார்   இத்திருமணமானது மணமக்கள் மனமொத்து மெய்க்காதல் கொண்டு தாங்களாகவே தைரியமாய் முன்வந்து சீர்திருத்த முறையில் ஆண் பெண் இருவரும் சம உரிமையோடு வாழ்க்கையை நடத்துவதற்கேற்றதோர் சுயமரியாதைத் திருமணமாகும். இதைப் பலர் அதிசயமாக நினைக்கலாம். இதில் ஒன்றும் அதிசயமில்லை. ஒரு ஆணும் ஒரு பெண்ணும் சேர்ந்து செய்து கொள்ளும் திருமணம்தான் இது. ஆனால் நம் நாட்டில் வெகுகாலமாக வேரூன்றிக் கிடக்கும் அர்த்தமற்ற சடங்குகள் இல்லாமலும், பெண்ணை ஆண் அடிமையாக்குவதற்கு அறிகுறியாகிய தாலி கட்டுதல் என்னும் […]

மேலும்....

துளிச் செய்திகள்

மிசோராம் ஆளுநர் அஜீஸ் குரேஷி மார்ச் 28 அன்று பதவி நீக்கம் செய்யப்பட்டார். ஒன்றாம் வகுப்பு முதல் அய்ந்தாம் வகுப்பு வரை தாய்மொழி கன்னடம்தான் பயிற்றுமொழி, 10ஆம் வகுப்புவரை கன்னடம் கட்டாயம் மொழிப் பாடம் என்ற சட்டத்திருத்தத்தை கர்நாடக அரசு ஏப்ரல் 2 அன்று நிறைவேற்றியுள்ளது. போலியான ஆவணங்கள் மூலம் நிலத்தை அபகரிக்க முயற்சி செய்பவர்கள்மீது குற்றவியல் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிடுவதற்கான அதிகாரத்தை உரிமையியல் நீதிமன்றங்கள் பயன்படுத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் கருத்துத் […]

மேலும்....

கருத்து

நம் நாட்டில் அறிவியல் துறை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. அதன் தரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். இதற்காக சிறந்த கட்டமைப்பு வசதிகளை உருவாக்க வேண்டும். நாட்டின் எதிர்காலம் கருதி அரசு இதைச் செய்ய வேண்டும். – சி.என்.ஆர்.ராவ், அறிவியலறிஞர் முஸ்லிம்கள், கிறித்தவர்கள், தலித்துகள், ஆதிவாசிகள் இவர்கள் யாருக்கும் இந்திய சுதந்திர வரலாற்றில் இடமே இல்லையா? அம்பேத்கர், பெரியார், நாராயண குரு, கான் அப்துல் கஃபார் கான், சந்தால் இன மக்கள் எல்லாம் இந்திய […]

மேலும்....