தமிழரின் தனித்திறன்

வந்ததனால் வரவில்லை வராவிட்டால் வந்திருப்பேன்! செத்ததனால் சாகவில்லை சாகாட்டி செத்திருப்பேன்! இது என்ன உளறல் என்கிறீர்களா? இல்லை இது அக்கால தமிழ்க் காதலியின் நுட்பமான வார்த்தை விளையாட்டு! அக்கால தமிழரிடம் ஜாதியில்லை, கர்வக் கொலையில்லை, வயதுவந்த ஆணும் பெண்ணும் தனிமையில் சந்தித்து காதல் வளர்த்து பின் இல்வாழ்வு ஏற்பர். அப்படி காதல் கொண்டு பழகிய காதலியைப் பார்த்து காதலன் முழுநிலவில்  வருவதாய்ச் சொன்னாயே ஏன் வரவில்லை என்கிறான், அதற்கு அவள், வந்ததனால் வரவில்லை வராவிட்டால் வந்திருப்பேன்! என்கிறாள். […]

மேலும்....

நுகர்வோர் பெறும் ஒவ்வொரு சிலிண்டருக்கும் காப்பீடு உண்டு

பொதுமக்கள் பெரும்பான்மையோருக்கு, காஸ் சிலிண்டர் வெடித்தால் ஏற்படும் துர்பாக்கிய சம்பவங்களான மரணம், காயம் போன்றவைகளுக்காக காப்பீடு கிடைக்கும் என்ற உண்மையே தெரியாது. சில பத்திரிக்கைகளில் இது தொடர்பான கட்டுரைகள் பிரசுரிக்கப்பட்டுள்ளன. தற்காலங்களில், சமூக வலைத்தளங்களில் (Facebook, Whatsapp) இந்த காப்பீடு குறித்த அறிக்கைகள் வெளியிடப்படுகின்றன. காஸ் சிலிண்டர் வெடித்து, அதனால் மரணம் சம்பவித்தால், நுகர்வோர் ரூ.40 லட்சம் வரையிலும் காப்பீட்டுத் தொகை பெறலாம் என்று அறிக்கை கூறுகிறது. இது முழுவதும் உண்மையல்ல. இந்த விபத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காப்பீட்டுத் […]

மேலும்....

சொன்னதை மறுக்கலாமா சுஷ்மா?

  லலித் மோடியின் மனைவிக்கு போர்ச்சுகல் நாட்டில் வைத்து சிகிச்சை தரப்படவுள்ளதாம். இதற்காக இங்கிலாந்தை விட்டு வெளியேற விரும்புகிறார் லலித் மோடி. இதற்காக அவர் சுஷ்மாவின் உதவியை நாடியதாகத் தெரிகிறது. இதையடுத்து இங்கிலாந்து எம்.பி. கீத் வெய்ஸுடன் பேசிய சுஷ்மா, லலித் மோடி இங்கிலாந்தை விட்டு வெளியேற விரும்பினால் அதை இங்கிலாந்து அரசு தாராளமாக அனுமதிக்கலாம். அதற்கு இந்திய அரசு எதிர்ப்பு தெரிவிக்காது என்று கூறியுள்ளார். இந்த விவகாரம் வெளியாகி தற்போது சலசலப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து […]

மேலும்....

நூல் அறிமுகம் : இனமானப் பேராசிரியர் வாழ்வும் – தொண்டும்

இனமானப் பேராசிரியர் வாழ்வும் – தொண்டும் இனமானப் பேராசிரியர் க.அன்பழகன் அவர்கள் கொள்கையிலும் சரி தோற்றத்திலும் சரி நிமிர்ந்து நிற்கக் கூடியவர். உள்ளத்திற்கு ஏற்பவே உடல் செயல்படும். அவர் உள்ளம் என்றும் உறுதியானது நேரானது. அதற்கேற்பவே அவர் உடலின் தோற்றமும், மிடுக்கும் இருக்கும். கொள்கையில் உறுதி, தலைமையை மதித்தல், நல்லொழுக்கம், குற்றம் குற்றமே எனல், மாற்றாரை மதிக்கும் மாண்பு, செருக்கின்மை, சான்றாண்மை, ஆய்வு நுட்பம், சொல்வன்மை என்று பல்வேறு சிறப்புக்களின் நிலைக்கலன் அவர். அவர் வாழ்வு என்பது […]

மேலும்....

அரிய செய்தி : எம்.ஜி.ஆர். போட்டுக்கொண்ட நாமம்

  முதலில் திருப்பதியில் இருந்த கடவுள் சிலை சிவனுடையதாக இருந்ததாம். ஒரு வைணவ மதத்தவரும், ஒரு சைவ மதத்தவரும் திருப்பதி கோயிலின் வாயிலில் தங்கினார்களாம். கோயில் சாத்திய பிறகு இருவருக்கும் வாக்குவாதம் உண்டாயிற்றாம். வைணவர் சொன்னாராம், உள்ளே இருப்பது வைணவக் கடவுள்தான் என்று. சைவ மதத்தினர் சொன்னாராம் உள்ளே இருப்பது சைவக் கடவுள்தான் என்று. இருவருக்கும் வாக்குவாதம் அதிகமாகியதாம். சச்சரவு மோசமான கட்டத்தை நெருங்கியபோது, அங்கே தங்கியிருந்த சிலர், காலையில் சிலையைப் பார்த்து யாருடைய சொல் உண்மையென்பதை […]

மேலும்....