மத மூடநம்பிக்கைகளை மாணவர்கள் மீது திணிப்பது மாபெரும் குற்றம்!- மஞ்சை வசந்தன்

மாணவர்களுக்குக் கற்பிக்கப்படும் கல்வியானாலும், செய்திகள் ஆனாலும், செயல்முறைகள் ஆனாலும் அவை அறிவுக்கு (அறிவியலுக்கு) ஏற்புடையதாக இருக்க வேண்டும். அறிவுக்கு ஒவ்வாத எதுவும் மாணவர்களுக்குக் கற்பிக்கப்படக் கூடாது. அறிவுக்கு உகந்தது எது? சிலர் வினா எழுப்புகின்றனர். உறுதி செய்யப்படக்கூடியவை (நிரூபிக்கப்பட்டவை) மட்டுமே அறிவுக்கு உகந்தவை. நமது நம்பிக்கைகள் எல்லாம் அறிவியல் அல்ல. ‘காந்தம் இரும்பைக் கவரும்’, ’தீ சுடும்’, ‘மின்சாரம் தாக்கும்’ இதுபோன்ற கருத்துகள் உறுதி செய்யப்பட்டவை. “கடவுள் நம்மைப் படைத்தார்; நம் வாழ்வு எப்படி இருக்கும் என்பதை […]

மேலும்....

எனது ஆதரவு இதன் அடிப்படையில்தான் – தந்தை பெரியார்

நான் 1920இல் காங்கிரசில் சேர்ந்தேன். அதற்கு முன்பு 1900 முதல் பார்ப்பனரல்லாதவர் நல உணர்ச்சி கொண்டவனாக இருந்து வந்தேன். நான் 1900-க்கு முன்னே கடவுள், மத, ஜாதி விஷயங்களின் நம்பிக்கை இல்லாதவனாகவே இருந்து வந்தேன். நான் அக்காலத்தில் சிறிது செல்வாக்குள்ள குடும்பத்தவனாகவும் வியாபார விஷயத்தில் ஈடுபடுபவனாகவும் இருந்து வந்ததால் யாரிடமும் தர்க்கமும், விவகாரமும் பேசுவதில் பிரியமும் உற்சாகமும் உடையவனாக இருந்து வந்தேன்; மாடு – எருமை கன்று போட்ட நேரங்களைக் குறித்து வைத்துக்கொண்டு ஜோசியர்களிடம் கொடுத்து ஜோசியம் […]

மேலும்....

கல்விக் கூடங்களில் மூடநம்பிக்கைப் பிரச்சாரமா?

உடனடி நடவடிக்கை எடுத்த கல்வி அமைச்சருக்குப் பாராட்டு! சென்னை அசோக் நகர் அரசு பெண்கள் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் ஊக்க உரை (Motivational Speech) என்ற பெயரில் ‘‘பரம்பொருள் பவுண்டேஷன் மகாவிஷ்ணு’’ என்பவர் மூடநம்பிக்கைகளை விதைக்கும் வகையில் ஆற்றிய உரையும், அது மாணவிகளிடம் ஏற்படுத்திய தாக்கமும் அந்த நிறுவனமே வெளியிட்ட காணொளியால் நேற்று (5.9.2024) சமூக ஊடகங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்குச் சில நாள்களுக்கு முன்பே சைதாப்பேட்டை மாதிரி மேல்நிலைப்பள்ளியில் நடந்த இதே போன்ற நிகழ்விலும், […]

மேலும்....

தந்தை பெரியார் 146ஆம் ஆண்டு பிறந்த நாள்

பகுத்தறிவுப் பகலவனாகவும் பார் வியக்கும் சுயமரியாதைச் சிங்கமாகவும் விளங்கியவர் அறிவு ஆசான் தந்தை பெரியார் ஆவார். ஒப்பாரும் மிக்காரும் இல்லாத புரட்சியாளர். மக்களைச் சிந்திக்க வைக்க வேண்டும்; மக்கள் அஞ்சி நடுங்கி தமது ஆறாவது அறிவை அடகு வைத்து மாக்களைப் போல வாழக்கூடாது என்பதற்காகவே கடவுள் மறுப்பைத் தனது பகுத்தறிவுப் பிரச்சாரத்தில் தீவிரமாக முன்னெடுத்தார். அது ஒரு தேவையான சமூக விஞ்ஞானமாகும். – கி. வீரமணி

மேலும்....

உங்களுக்குத் தெரியுமா?

1951இல் தந்தை பெரியார் நடத்திய வகுப்புரிமைப் போரின் காரணமாகத்தான் இந்திய அரசியல் சட்டம் முதன்முதலில் திருத்தப்பட்டது என்பது உங்களுக்குத் தெரியுமா?

மேலும்....