அயோத்தி அகாடா – சரவணா ராஜேந்திரன்

அயோத்தியில் அகாடா என்னும் பெயரில் பல மடங்கள் உள்ளன. இந்த மடங்கள் அனைத்தும் இந்தியாவின் எந்த மூலையில் இருந்தும் வரும் பார்ப்பனர்களுக்குச் சிறப்புக் கவனம் செய்து அவர்களை கவனித்துக் கொள்கின்றன. அங்கு எத்தனை நாள் வேண்டுமென்றாலும் தங்கலாம். பார்ப்பனர் அல்லாத சாமியார்களுக்கு அவரவர் ஜாதிகளுக்கு என்றே அங்கு அகாடாக்கள் உள்ளன. எடுத்துக்காட்டாக உத்தரப்பிரதேச முதலமைச்சர் ரமேஷ் பிஸ்ட் என்ற ஆதித்யநாத் உத்தரகாண்ட் தாக்கூர் என்ற உயர் ஜாதிப் பிரிவைச் சேர்ந்தவர். இவர் நாத் பிரிவைச் சேர்ந்த பார்ப்பனர் […]

மேலும்....

நீதிக்கட்சி அமைச்சரவையும் தாழ்த்தப்பட்டோரும்!-கி. தளபதிராஜ்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை அவர்கள் அண்மையில் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில் தாழ்த்தப்பட்டோருக்கு அமைச்சரவையில் இடம் அளித்தது காங்கிரஸ்தான் என்று கூறியுள்ளார். அதே வேளையில் நீதிக்கட்சி ஆட்சியில் கூட அமைச்சரவையில் தாழ்த்தப்பட்டவர்கள் இடம்பெற முடியவில்லை என்றும் கூறியிருக்கிறார். இது ம.பொ.சி வகையறாக்களால் திட்டமிட்டு பரப்பப்பட்ட புளித்துப்போன ஒரு குற்றச்சாட்டு. தாழ்த்தப்பட்ட மக்களின் அன்றைய நிலை என்ன? 1935ஆம் ஆண்டு வரை தமிழ்நாட்டுப் பேருந்துகளில் பஞ்சமருக்கு இடமில்லை என்று சொன்னதோடு பயணச் சீட்டுகளிலும் அப்படி அச்சிடப்பட்டிருந்ததே! […]

மேலும்....

மணக்கும் தமிழ் – பெரு. இளங்கோ, திருவொற்றியூர்.

நூல் : மணக்கும் தமிழ் ஆசிரியர் : முனைவர் கடவூர் மணிமாறன் வெளியீடு : விடியல் வெளியீட்டகம் பக்கங்கள் : 112 விலை : ரூ.120/–_ எழுத்தாள்வோர்- தனித்தமிழை எடுத்தாள்வோர் அருகி வரும் இக்காலத்தில் தனித்துவமாய் தமிழில் பல நூல்கள் படைத்து, தாம் ஓர் எழுத்தாளர் என்பது மட்டுமின்றி, தமிழ் இலக்கண மரபு வழிக் கவிதைகள் யாப்பதில் வல்லவர் என்பதையும் ஒரு சேரப் பெற்று விளங்குபவர் கடவூர் மணிமாறன். பாவளம் சேர்த்தும் நாவளம் கொண்டும் பல்வேறு நாடுகளுக்கும் […]

மேலும்....

பெரியாரின் பெருந்தொண்டர் கலைஞர்!-முனைவர் கடவூர் மணிமாறன்

பெரியாரின் பெருந்தொண்டர்; உலகம் போற்றும் பேரறிஞர் அண்ணாவின் அருமைத் தம்பி! சரியாக அரசியலைத் தேர்ந்தே, பொல்லாச் சழக்கினரை மிகச்சாடி மாநி லத்தின் உரிமைக்குக் குரல்கொடுத்த தமிழ்ப்போ ராளி! உதவாத சாதிமத மடமைப் போக்கை விரிவாக எடுத்துரைத்தே குமுக நீதி வென்றிடவே பாடுபட்ட உழைப்புத் தேனீ! முத்தமிழைக் கற்றுணர்ந்த மு.க! நல்லார் முத்துவேலர் அஞ்சுகத்தாய் ஈன்ற ஏந்தல்! முத்தனைய சொற்கொண்டல்! வாழ்நாள் எல்லாம் முரசொலியில் எழுத்துவிதை ஊன்றி வந்த வித்தகராம்! அய்ந்துமுறை தமிழர் நாட்டில் வீறார்ந்த முதலமைச்சர் பொறுப்பை […]

மேலும்....

வரலாறும் தனிமனிதர்களும் !- குமரன்தாஸ்

தனி மனிதர்களால் வரலாறு படைக்கப் படுவதில்லை! மக்களே வரலாற்றைப் படைக்கிறார்கள் என்பது உண்மைதான். ஆனால், தனிமனிதர்களால் மனிதகுலத்தின் முன்னேற்றத்தைச் சீரழிக்க முடியும் என்பதற்கு இங்கு முன்னுதாரணங்கள் நிறைய உள்ளன. அதைப்போலவே மனிதகுலத்தை முன்னேற்றுவதற்குப் பாடுபட்ட மாமனிதர்கள் வரலாற்றில் நிலைக்கிறார்கள் என்பதற்கும் சான்றுகளாகப் பலர் உள்ளனர். அந்த அடிப்படையில்தான் நாம், கடந்த காலத்தில் மக்களின் நல்வாழ்க்கைக்குப் பாடுபட்ட மாமனிதர்களையும் தலைவர்களையும் சிந்தனையாளர்களையும் போற்றுவதோடு நில்லாமல் நிகழ்காலத்திலும் மக்கள் நலனைக் காக்கும், எதிர்காலச் சந்ததியினரின் முன்னேற்றத்திற்குப் பாடுபடும் தலைவர்களையும் போற்றுகின்றோம். […]

மேலும்....