திசை காட்டி, விசை ஏற்றும் திராவிடர் தலைவர்!- மஞ்சை வசந்தன்

அயல்நாட்டிலிருந்து வந்து தமிழர் பகுதியில் ஆரியர் நுழைந்த காலம் முதலே ஆரிய திராவிடப் போர் தொடங்கியது. ஆனால், அப்போர் உடல்பலம் காட்டி வெல்வதாய் இல்லாமல், சூழ்ச்சிகளின் வடிவில் வந்தது. இதற்கு சாஸ்திரங்களும், புராணங்களும், கடவுள் நம்பிக்கையும் உதவின. அதனால், கல்வி பறிக்கப்பட்ட திராவிட இனம் விழிப்பின்றி வீழ்ந்து கிடந்தது. வீழ்ந்த இனத்தை விழிப்படையச் செய்து, மானமும் அறிவும் உள்ளதாக மாற்ற தந்தை பெரியார் முயன்றார். எனவே, பெரியார் காலத்தில் ஆரிய திராவிடப் போர் என்பது கடவுள் மறுப்பு, […]

மேலும்....

கல்வி அறிவு, தொழில் ஆற்றல், பொறுப்புணர்வு உள்ளவர் வீரமணி!- தந்தை பெரியார்

நமது ‘விடுதலை’ ஆசிரியர் அவர்கள் மலாயாநாடு சென்று சுற்றுப்பயணம் செய்து அங்குள்ள மக்களால் நல்லவண்ணம் பாராட்டப்பட்டு வெற்றிகரமாக உடல்நலத்தோடு திரும்பிவந்ததை முன்னிட்டு நமது ‘விடுதலை’ அலுவலகத்தில் பணியாற்றக் கூடியவர்கள் இந்த வரவேற்பினை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இது மிக்க மகிழ்ச்சிக்குரிய காரியமாகும். இந்த வரவேற்பு விழாவானது ‘விடுதலை’ அலுவலகத்திலுள்ளவர்களால் நடத்தப்படுகிற விழாவானதால் இந்த விழாவில் நானும் மணியம்மையும் பங்கேற்றுக் கொள்கிறோம். ஆசிரியர் அவர்கள் மலாயா நாட்டுக்குப் புறப்பட்டுச் செல்லும் போதும் அவரை வழி அனுப்ப முடியாது பெரிதும் ஏமாற்றமடைந்தேன். […]

மேலும்....

விக்டோரியா மாளிகைக்கு ‘‘சமூகநீதி மாளிகை’’ என்று பெயர் சூட்டுக!

‘நீதிக்கட்சி’ என்று எளிய மக்களால், வாஞ்சையோடு அழைக்கப்பட்ட தென்னிந்தியர் நல உரிமைக் கழகம் (South Indian Liberal Federation) என்ற அமைப்பு பிறந்த நாள் 20.11.1916. பார்ப்பனரல்லாதார் இயக்கம் – The Non-Brahmin Movement என்று பரவலாக அழைக்கப்பட்டதும், அறியப்பட்டதுமான சமூகநீதிக்கான இயக்கம் அது. பஞ்சம, சூத்திர, கீழ்ஜாதிகள் என்று ஆரிய வருண தர்மத்தால் பிரிக்கப்பட்டு, கல்வி, வேலைவாய்ப்புகள், சொத்துரிமை, திருமண உரிமை உள்பட அனைத்து உரிமைகளும் மறுக்கப்பட்ட நாட்டின் பெரும்பாலான மக்களாகிய ஒடுக்கப்பட்ட, பழங்குடியினர், ஆதிதிராவிடர்கள், […]

மேலும்....

அண்ணல் அம்பேத்கர் நினைவு நாள் : 06.12.1956

“ஜாதி ஒழிப்பு என்ற விஷயத்தில் மாத்திரமே நாங்கள் ஒத்த கருத்துடையவர்கள் என்பது அல்ல. இந்து மதம், இந்து சாஸ்திரங்கள், இந்துக் கடவுள்கள், தேவர்கள் என்பவர்கள் பற்றிய இந்துமதப் புராணங்கள் இவைகளைக் குறித்தும் கூட எங்கள் இரண்டு பேர்களின் கருத்தும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். டாக்டர் அம்பேத்கர் அவர்களுக்குச் சமமாக இந்தியாவில் யாரையும் சொல்ல முடியாது. முப்பது ஆண்டுகளுக்கு முன்பாகவே இதை நான் கூறியிருக்கிறேன்.” – தந்தை பெரியார் (‘விடுதலை’ 20.6.1972)

மேலும்....

உங்களுக்குத் தெரியுமா?

பகத்சிங் தூக்கிலிடப்பட்டபோது ஆங்கிலேய அடக்குமுறைக்கு அஞ்சி “தேசபக்தர்கள்” வாய்மூடிக் கிடந்தபோது, பகத்சிங் செயலைப் பகிரங்கமாக ஆதரித்து 1931இல் கட்டுரை தீட்டிய தலைவர் பெரியார் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

மேலும்....