ஜாதி என்பது சான்றிதழன்று- வாசுகி பாஸ்கர்

2. கோவில் என்பது ஆண் / பெண் / திருநங்கை என்கிற எந்தப் பாலின பேதமுமற்ற இடமாக அறிவிக்கப்பட வேண்டும். அதன் மூலம் பெண்களை மாதவிடாய் தீட்டு என காரணம் சொல்லிப் புறக்கணிப்பது (Untouchability Offence) தீண்டாமைக் குற்ற2மாக ஆக்கப்பட வேண்டும். சமத்துவம் பேசும் ஆண்கள்கூடப் பரவலாக இறை ஊழியத்தில் பெண்கள் / திருநங்கைகளுக்கான உரிமைகளைப் பெற்றுத்தருவது குறித்தோ, சில கோவில்களில் வழிபாட்டுக்கே உரிமை மறுக்கப்படும் கொடுமைகள் குறித்தோ பேசுவதில்லை. சமத்துவம் என்பது ஆணுக்கு மட்டும் அதிகாரப் […]

மேலும்....

ஊடகங்கள் மூட நம்பிக்கைகளைப் பரப்புவது அறமும் அல்ல, அறிவியலும் அல்ல! – மஞ்சை வசந்தன்

பல நூற்றாண்டுகளாக மூடநம்பிக்கைகளை முதலீடாகக் கொண்டு வாழ்ந்து வந்த ஆரியப் பார்ப்பனர்கள், அச்சு ஊடகங்கள், காட்சி ஊடகங்கள், சமூக ஊடகங்கள் என நடைமுறைக்குவர, அவை அனைத்தையும் தங்கள் கைக்குள் வைத்துக்கொண்டு, அவற்றை முழுக்க முழுக்க மூடநம்பிக்கைகளைப் பரப்பப் பெரிதும் பயன்படுத்தி வருகின்றனர். அறிவியல் வளர்ந்து உச்சம் பெற்றுள்ள இந்தக் காலத்தில், அதே அறிவியலைக் கொண்டு மூடநம்பிக்கைகளையும் உச்சம் பெறச் செய்துவருகின்றனர் என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். அச்சு ஊடகங்கள் கல்வியைத் தங்களுக்கு மட்டுமே உரித்தாக்கிக்கொண்டு, பல […]

மேலும்....

பார்ப்பான் பிழைப்புக்கு – உயர்வுக்கே இந்து மதச் சடங்குகள்- தந்தை பெரியார்

எங்கள் கருத்து நம் மக்களுக்குப் புதுமையாகவும் தோன்றும்; சில சமயங்களில் கசப்பாகவும் இருக்கலாம். காதணி விழா என்பது காது குத்தி நகை போடுவதாகும். இந்தக் காதணி விழாவானது உலகிலேயே இந்துக்கள் என்று சொல்லப்படும் நமக்குத்தான் ஆகும். எந்த முறையில் நமக்கு இது சம்பந்தப்பட்டு உள்ளது என்றால், மத சம்பந்தமான கருத்தில்தான் ஆகும். உலகில் ஒவ்வொரு மதக்காரர்களுக்கும் ஒவ்வொரு அடையாளமுண்டு. ஆனால், கிறித்துவ மதக்காரர்களுக்குப் பார்த்ததும் கண்டுகொள்ளும் படியான அடையாளம் இருக்காது. இஸ்லாமியர்களுக்குச் சில அடையாளம் இருக்கின்றது. அதுபோலத்தான் […]

மேலும்....

ஆதிவாசி என்போர் மண்ணின் மக்கள்! காட்டுவாசி என்பது ஆர்.எஸ்.எஸ். சூழ்ச்சி!

ஒடுக்கப்பட்டு பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்நாட்டில் உரிமைகள் பறிக்கப்பட்ட மக்களான பழங்குடியினர், தாழ்த்தப்பட்டோர் என்ற பிரிவினர் பெரும்பகுதி மக்கள் மட்டுமல்ல; நாட்டின் ஆதிக் குடியினரும்கூட! அதனால்தான் அவர்களுக்குரிய வரலாற்றுப் பெயராக ‘ஆதிதிராவிடர்கள்’ என்ற பெயர் தென்னாட்டில் நிலவி, தமிழ்நாடு அரசில் சுமார் 40 ஆண்டுகளாக அதிகாரப்பூர்வ பெயராகவே நீடிக்கிறது! இந்த ஒடுக்கப்பட்ட மக்களை பிரிட்டிஷ் ஆட்சியில் 1935 ஆம் ஆண்டு ஒரு சர்வே மூலம் அடையாளம் கண்டே, ‘பழங்குடியினர்’, ‘தாழ்த்தப்பட்டோர்’ ஆகியோரின் உரிமைக்காக ஓர் அட்டவணை (Schedule) தயாரிக்கப்பட்டு, […]

மேலும்....

செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார் மறைவு : 18.11.1936

தண்டனை, சிறை என்பவைகள் மகா அவமானகரமாகவும், மகா இழிவாகவும், மகாக் கொடுமையாகவும், துன்பமாகவும் இருந்த காலத்தில் தென்னாட்டில் முதன்முதல் வெளிவந்து அரசனை எதிர்த்து, அரசியலை இகழ்ந்து துச்சமாய்க் கருதி தண்டனையை அடைந்து சிறைக் கொடுமையை இன்பமாய் ஏற்றுக் கலங்காமல் மனம் மாறாமல் வெளிவந்த வீரர்களில் முதன்மை லக்கத்தில் இருந்தவராவார் நமது சிதம்பரம். – தந்தை பெரியார்

மேலும்....