மதுரை எழுத்துப் பயிற்சிப் பட்டறை !-திருப்பத்தூர் ம.கவிதா

எதை எழுதுவது? எப்படி எழுதுவது? அதற்கான முன் தயாரிப்புகள் எவை? எழுத்தின் நோக்கம் என்ன? தாக்கம் என்ன? தரவுகள் என்ன? புதுமையைக் கொண்டு வருவது எப்படி? என்பனவற்றை வளரிளம் எழுத்தாளர்களுக்குக் கற்பிக்க, பகுத்தறிவு எழுத்தாளர் மன்றமும் வாருங்கள் படைப்போம் குழுவும் இணைந்து பல்வேறு ஊர்களில் பயிற்சிப் பட்டறைகளைத் தொடர்ச்சியாக நடத்தி வருகிறது. அந்த வகையில் 10.8.2024 அன்று மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தோடு இணைந்து ஒருநாள் நிகழ்வாக நடத்தப்பட்டது. ‘‘நீங்கள் பணத்துக்காக எழுதுகிறீர்களா? சக மனிதன் துன்பப்படுகிறானே […]

மேலும்....

நிதீஷ்குமாரின் பேச்சு நீரின் மேல் எழுத்து !

1. கே: ஒருமித்த கருத்து கொண்டவர்களுடன் கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும் என எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ள நிலையில் பி.ஜே.பி.யுடன் எக்காலத்திலும் கூட்டணி கிடையாது என ஜெயக்குமார் கூறியிருப்பது குறித்து தங்கள் கருத்து என்ன? – அ.தியாகு, புதுச்சேரி. ப : குழப்பம்தான் அங்கேயே என்பதும் அதனால் ’முன்னே பார்த்தால் நாயக்கர் குதிரை; பின்னே பார்த்தால் ராவுத்தர் குதிரை’ என்று சாட்சியம் சொன்ன கதைதான்! அய்யோ- பதவி அரசியலே! 2. கே: ‘‘விடுதலைச் சிறுத்தைகள் […]

மேலும்....

பெர்ட்ரண்ட் ரசல் – பெரியார் சிந்தனைகள் ஒரு கண்ணோட்டம்.

கற்பு என்ற பெயரில் உலவும் பொய்ம்மைகள் அ) கற்பு என்பதையும் திருமண உறவு என்பதையும் கேலிக்கூத்தாக்கும் வகையில் உயர்வர்க்கத்தினரும் மதகுருமார்களும், எவ்வாறு சமூக ஒழுக்கக்கேட்டிற்கு வழிவகுக்கும் முறையற்ற பாலியல் உறவுகளில் திளைக்கிறார்கள் என்பதை ரசல் அவர்கள் தனது திருமணமும் ஒழுக்கமும் எனும் நூலின் ஆறாவது அத்தியாயத்தில் வீரமும் காதலும் (Romantic Love) என்ற தலைப்பில் பின்வருமாறு சுட்டிக்காட்டுகிறார் :- 1. பிஷப்புகள் தம் புத்திரிகளுடனேயே வெளிப்படையாக பாவமான வாழ்க்கை நடத்தினர்.(69) 2. மணஉறவில்லாமலேயே பாலியல் உறவு வைத்திருந்தார் […]

மேலும்....

மனமின்றி அமையாது உலகு! (9) ‘மெலன்கோலியா’

மருத்துவர் சிவபாலன் இளங்கோவன், மனநல மருத்துவர் கி.மு.அய்ந்தாம் நூற்றாண்டில் ‘மெலன்கோலியா’ என்ற வார்த்தையை  ஹிப்போகிரேட்ஸ் முதன்முதலில் பயன்படுத்துகிறார். அதாவது மனிதனின் பண்புகளை நான்காக அவர் வகைப்படுத்தும் போது, அதில் ஒரு வகையை ‘மெலன்கோலியா’ என்று அழைக்கிறார். ‘மெலன்கோலிக் பண்புகளைக் கொண்ட மனிதர்கள் எப்போதும் உற்சாகம் குறைந்தவர்களாக, ஏதேனும் ஒரு சோகத்தைச் சுமந்து திரிபவர்களாக, வாழ்க்கையின் மீது எப்போதும் எதிர்மறை எண்ணங்கள் கொண்டவர்களாக, மிகச் சில நெருங்கிய நண்பர்களையே கொண்டவர்களாக, எப்போதும் தனிமையையே விரும்புபவர்களாக, எதன் மீதும் நாட்டம் […]

மேலும்....

பெரியாரின் மனித நேயத்தை எதிர்த்து வீதிக்கு வந்த பார்ப்பனர்கள்!- வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி

ஆதிக்கக் கூட்டத்தின் மோசடிச் செயல்பாடுகளை விவரிக்கும் நேரத்தில், அவர்கள் மீது எதிர்ப்புணர்வை மட்டுமின்றி, வெறுப்பு உணர்ச்சியையும் சிலர் ஏற்படுத்தியிருக்கக்கூடும். அத்தகைய வெறுப்புணர்ச்சி, காலப்போக்கில் இரு பிரிவினருக்கான மோதலாக, வன்முறையாகக் கூட முடிந்திருக்கிறது. வரலாற்றில் அத்தகைய சம்பவங்கள் நிகழ்ந்திருந்தாலும்கூட, தந்தை பெரியாரின் பார்ப்பனிய எதிர்ப்பில், ஆரிய இனத்தின் மீதான வெறுப்புணர்ச்சியை நம்மால் காண முடியவில்லை. மாறாக, ‘நான் தான் மேல்’ என்று நினைத்து, அதனையே பார்ப்பனரல்லாத மக்களின் மனங்களிலும் நிறுவி, நம்மையெல்லாம் அடிமைப்படுத்த, ஆரியக் கூட்டம் நிகழ்த்திய அடக்குமுறைகளைக்கூட […]

மேலும்....