சாதனை நாயகர்!-கவிதை

தமிழ்மொழி தமிழினம் தமிழ்நா டென்றும் அமிழா நெடும்புகழ் அடைந்திட வாழ்வில் பெரியார் அண்ணா பீடுசால் நெறியில் சரியாய் அய்ந்து முறையாய் ஆண்டவர் தரணி புகழும் தமிழினத் தலைவர்! பரணி இலக்கணப் பாட்டுடைக் குரிசில்! அஞ்சுகம் முத்து வேலரின் செல்வன் நெஞ்சில் உரமும் நேர்மைத் திறமும் உயரிய குணமும் ஒருங்கே சான்ற அயரா உழைப்பினர்; ஆளுமை மிக்கவர்; குறளோ வியமும் வள்ளுவர் கோட்டமும் குறளார் தமக்கே குமரியில் சிலையும் படைத்த முதல்வர்; பகைவர் விளைத்த தடைகள் யாவையும் தகர்த்த […]

மேலும்....

கலைஞரின் ‘குடிஅரசு’ குருகுலம் – கோவி.லெனின், இதழாளர்

‘வாழ்வின் வசந்தம்‘ என்று பேரறிஞர் அண்ணா சொன்னது, தந்தை பெரியாருடன் அவர் இருந்த காலத்தைத்தான். முத்தமிழறிஞர் கலைஞர் ‘பசுமையான காலம்’ என்று குறிப்பிடுவது ஈரோட்டில் பெரியாரின் ‘குடிஅரசு’ ஏட்டில் பணியாற்றிய காலத்தைத்தான். கலைஞரின் நூற்றாண்டு நிறைவடையும் நேரத்தில், ‘குடிஅரசு’ ஏட்டின் நூற்றாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. திராவிட இயக்கத்தின் முதல் அரசியல் அமைப்பான தென்னிந்திய நல உரிமைச் சங்கம் தனது கொள்கைகளை மக்களிடம் தெரிவிக்க ‘ஜஸ்டிஸ்’ என்ற பத்திரிகையை நடத்தியது. அதனால் அந்த அரசியல் அமைப்பை ஜஸ்டிஸ் கட்சி […]

மேலும்....

மென்மனக் கீறல்கள்! – திருப்பத்தூர் ம.கவிதா

“மாமன் சொன்னாங்க, அத்தை சொன்னாங்க, உறவுக்காரங்க சொன்னாங்கன்னு அவசரமா ஒரு கல்யாணத்தைப் பண்ணி பிள்ளை வாழ்க்கையை இப்படி நாமே சீரழித்து விட்டோமே” என்று நினைத்து நினைத்துத் துக்கம் தொண்டையடைத்துக் கண்கள் கசியத் தொடங்கியது சந்திரனுக்கு! “கல்லூரியில் சேர்ந்து, ஓராண்டுகூட முடியல; அதற்குள் படிப்பைப் பாதியில் நிறுத்தி எனக்குக் கல்யாணம் பண்ணாதீங்கன்னு எவ்வளவு கெஞ்சினேன் உங்க ரெண்டு பேரிடம்? படிக்கும் இடத்தில காதல் கீதல்னு சொல்லி ஜாதி விட்டு ஜாதி யாரையோ கூட்டிட்டு வந்து நின்னா என்ன பண்ணுவன்னு […]

மேலும்....

நெருக்கடிகள் வந்தபோதும் கருப்புச் சட்டையைக் கழற்றாத பாரதிதாசன்!

இலங்கைத் தலைநகர் கொழும்பு நகரில் வாழ்ந்த ஒருவர் தன் மகனுக்கு பாரதிதாசன் எனப் பெயர் வைக்கிறார், அதுவும் 70 ஆண்டுகளுக்கு முன்னர்! திராவிடர் இயக்கம் உண்டாக்கிய இன உணர்வு, மொழி உணர்வு என்பது உலகம் முழுக்கப் பரந்து விரிந்தது! அப்படியான பாரதிதாசன் அவர்கள் இந்த இயக்கத்திற்கு ஆற்றிய பணிகள் என்ன என்பது குறித்துப் பார்க்கலாம்! அய்யா வணக்கம்! தங்கள் குடும்பம் குறித்து அறிமுகம் செய்து கொள்ளுங்கள்? என்னுடைய தாத்தா வேலை தேடி கொழும்பு சென்றார். அதேபோல் என் […]

மேலும்....

சுனாமியால் பாதிக்கப்பட்டோருக்கு உதவிகள்…

நாகை அரசு பொது மருத்துவமனைக்கு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை வழங்குகிறார் ஆசிரியர் தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவை 1.3.2005 அன்று தலைமைச் செயலகத்தில் நாம் நேரில் சந்தித்து தந்தை பெரியாரின் இறுதி விருப்பமான அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை வழங்கும் நிலையை அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய விண்ணப்பத்தை அளித்தோம். அவ்வமயம், சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வு அளிக்க ரூ.3,05,000/- தொகையை பொதுமக்களிடமிருந்தும் நம் பெரியார் நிறுவனங்களில் பணியாற்றுவோரிடமிருந்தும் மாணவர்களிடமிருந்தும் மற்றும் […]

மேலும்....