அன்றுதான் நாமும் மனிதனாகலாம்!- வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி

தந்தை பெரியார் அவர்கள் தனது வாழ்நாள் முழுவதும் பார்ப்பனர்களின் ஆதிக்கம் எந்தத் துறையில் மேலோங்கி இருந்தாலும் அதனை மாற்றி , அவை அனைத்தும் அனைவருக்குமான துறையாக மாற அனைத்து வகையிலான பிரச்சாரங்களையும், போராட்டங்களையும் முன்னெடுத்தார். அந்த வகையில், பார்ப்பனர்கள் தங்களது ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொள்ளவும், பார்ப்பனரல்லாத மக்களை மூடத்தனத்தில் மூழ்கச் செய்யவும், பார்ப்பனரல்லாத மக்களின் கவனத்தை தேவையற்ற நிகழ்வுகள் மூலம் திசை திருப்பவும், மத நம்பிக்கை என்ற பெயரிலும் பக்தி என்ற போர்வையிலும் பார்ப்பனர்களைத் தமிழர்கள் […]

மேலும்....

சுயமரியாதை இயக்கம் தோன்றியது ஏன்? எப்படி? எப்போது?- கி.தளபதிராஜ்

சுயமரியாதை இயக்க நூற்றாண்டு தொடக்க விழா தமிழ்நாடு முழுவதும் மிகுந்த எழுச்சியோடு நடந்து முடிந்திருக்கிறது. தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் அறிவுறுத்தலின்படி திராவிடர் கழகத்தின் சார்பில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுக்கூட்டங்கள் கொள்கை விளக்க நிகழ்ச்சிகளாக நடத்தப்பட்டிருக்கின்றன. சுயமரியாதை இயக்கம் தோன்றிய நாள் முதலாய் திராவிட இயக்க ஆய்வாளர்கள் பல்வேறு கருத்துகளை முன்வைக்கின்றனர். அதற்குக் காரணம் தந்தை பெரியார் அவர்கள் காங்கிரசில் இருந்தபோதோ, அதிலிருந்து வெளியேறியபோதோ ‘சுயமரியாதை இயக்கம்’ என்பதாக ஒன்றைத் தொடங்க […]

மேலும்....

முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் முயற்சி !

1.  கே :  ஓர் ஆணை ஒரு பெண், திருமணம் செய்துகொள்ள மறுத்தால் அவள் கொலை செய்யப்படுவாள் என்பதை கர்நாடகாவில் அண்மையில் நடந்த மூன்று கொலைகள் உறுதி செய்கின்ற நடப்பை “இந்து தமிழ்திசை” (17.05.2024) தலையங்கம் வன்மையாகக் கண்டித்துள்ளதைப் பற்றி தங்கள் கருத்து என்ன? – சு.சாந்தி, ஆவடி. ப  :  மிகவும் வெட்கப்பட்டுத் தலைகுனிய வேண்டிய தறுதலைத்தனத்தின் அப்பட்டமான  வெளிப்பாடு. அனைவரும் கண்டிக்கவேண்டும். எந்த யுகத்தில் நாம் வாழுகிறோம் என்பதே புரியவில்லை! 2. கே : […]

மேலும்....

வியன்னா பிரகடனமும் நடவடிக்கைத் திட்டமும்-(சென்ற இதழ் தொடர்ச்சி…)

19. சிறுபான்மையினர், உரிமைகளைப் பேணுவது-பாதுகாப்பது ஆகியவற்றின் முக்கியத்துவம், அப்படிப் பேணுவதும் பாதுகாப்பதும் அவர்கள் வாழும் நாடுகளின் சமூக – அரசியல் உறுதிப்பாட்டுக்குச் செய்யும் பங்களிப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, அத்தகைய சிறுபான்மையினர் சகலவித மனித உரிமைகளையும் அடிப்படை சுதந்திரங்களையும் எவ்விதப் பாகுபாடுமின்றியும் சட்டத்தின் முன் முழு சமத்துவ அடிப்படையிலும் முழுமையாகவும் பயனுள்ள வகையிலும் அனுபவிப்பதை உறுதிசெய்ய வேண்டிய கடப்பாடு அரசுகளுக்கு இருப்பதை இம்மாநாடு உறுதியிட்டுரைக்கிறது. தம்முள்ளும், வெளியிலும், சுதந்திரமாகவும், குறுக்கீடோ, எந்த வகையான பாகுபாடுகள் இன்றியும் தமது […]

மேலும்....

கலைஞரின் பேனா வரைந்த திரைச் சித்திரங்கள்… – குமரன்தாஸ்

கலைஞரின் பேனா தொட்டு எழுதாத கருத்துகளே இல்லை என்பது உலகறிந்த ஒன்று. ஆம் தமிழ்ச் சமூகம்,அரசியல்,பொருளாதாரம், பண்பாடு, கலை இலக்கியங்கள் ஆகியவை பற்றி பல ஆயிரம் பக்கங்கள் அவர் எழுதியுள்ளார். அவற்றில் இருந்து அவரது பேனா படைத்திட்ட திரைக் காவியங்கள் பற்றி மட்டும் சுருக்கமாக இங்குக் காணலாம். தலைவர் கலைஞர் 1924 ஜூன் 3ஆம் தேதி திருக்குவளையில் அஞ்சுகம்-முத்துவேலர் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார் என்பதை நாம் அறிவோம். அவர் தனது 23 ஆம் வயதில் அதாவது 1947 […]

மேலும்....