ஒழுக்கத்தின் இலக்கணம் யாரெனக் கேட்டால்….- வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி

ஏறக்குறைய 69 ஆண்டுகளுக்கு முன்பு, தனது 22 ஆம் வயதில் இளைஞர் ஒருவர் ‘தோழன்’ என்ற இதழில், “தலைவரென்போர் யாரெனக் கேட்டால்” என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதுகிறார். ஆந்துரு மராய் (Andre Mourois) என்ற பிரெஞ்சு எழுத்தாளரின் ‘The Art of Living’ என்ற நூலில் இடம்பெற்ற 9 அத்தியாயங்களில் கொடுக்கப்பட்டிருந்த தலைமைப் பண்புக்கான இலக்கணத்தைப் படித்து, தன் வாழ்வில் தான் ஏற்றுக்கொண்ட தலைவருடன் அவ்விலக்கணத்தைப் பொருத்திப் பார்த்து, தனது தலைவரின் வியக்கத்தக்க பண்புகளுடன் ஒப்பிட்டு […]

மேலும்....

பெரியாரின் பெருந்தன்மை

தமிழ்த் தென்றல் திரு.வி.க. அவர்கள், தான் இறந்தால் பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தன், மு.வரதராசன் இருவரையும் கொள்ளி வைக்கச் சொல்லி யிருந்தார். சொல்லி சிறிது காலத்திற்குள் திரு.வி.க. இறந்துவிட்டார். அவர் இறந்தபிறகு சிதையில் அவர் உடல் வைக்கப்பட்டிருந்தது. சுடுகாட்டில் தந்தை பெரியார் தடியோடு நின்று கொண்டிருந்தார். அவரது தொண்டர் படை இறுதி நிகழ்வுகளைச் செய்வதற்காக சிறுசிறு பந்தங்களோடு நின்று கொண்டிருந்தனர். ஞானசம்பந்தன் அவர்களுக்கும், வரதராசன் அவர்களுக்கும் என்ன செய்வ தென்றே தெரியவில்லை. தயங்கியபடியே பெரியாரிடம் வந்து, ‘‘திரு.வி.க. அவர்கள் எங்களை […]

மேலும்....

துவளா தொண்டு நெஞ்சம்!- கவிஞர் கண்ணிமை

ஒரு தலைவருக்குரிய சில தன்மைகளும் இருக்க வேண்டும் என்று – மில்லர், நாபே என்னும் அறிஞர்கள் கூறியுள்ளனர். தன்னடக்கம், செயல்படும் திறம், போராடும் குணம், பகுத்துப் பார்க்கும் அறிவு, எப்பொழுதும் மகிழ்ச்சி, விடாமுயற்சி, மிகுந்த திறமை, அறிவுக்குட்பட்ட தைரியம், அழியாத நம்பிக்கை, நேர்மை, கொள்கை உறுதி, காலத்துக்கேற்ற அரசியல் அறிவு, உண்மையைக் கடைப்பிடித்தல், ஒழுக்கமாக நடந்துகொள்ளுதல், எளிய வாழ்க்கை, தொண்டு செய்யும் ஆர்வம், – இவை தலைவருக்கு இருக்க வேண்டிய தனித் தன்மைகள். தலைவராக வருகிறவர்களுக்குத் தங்களிடத்தில் […]

மேலும்....

வரலாற்றில் மிளிரு வைர வரிகள்!- திருப்பத்தூர் ம.கவிதா

ஆற அமர்ந்து சிந்தித்துப் பார்த்தால் மேலோட்டமாகத் தெரியும் – பல செய்திகளுக்கு உள்ளே இருக்கும் மிகக் கடினங்கள். ஒருவர் போட்ட பாதையில் பின்வருபவர் பயணம் செய்வது எளிதானதுதானே என்று தெரிந்தாலும் முதலில் பயணம் தொடங்கியவருக்கு இருக்கும் சுதந்திரம் அடிச்சுவட்டில் பயணம் செய்பவருக்கு இருக்க வாய்ப்பில்லை. முதலில் பயணம் செய்பவருக்கான அனுபவங்களும் காலச்சூழலும் வேறாக இருக்கும். மாற்றமடைந்திருக்கும் காலச் சூழலிலும் வழுக்காமல் முன்னவரின் அடிச்சுவட்டில் முன்னேறுவது என்பது அத்துணை எளிதல்ல. அய்யாவின் அடிச்சுவட்டில் தன் வாழ்நாள் முழுவதும் பயணம் […]

மேலும்....

ஆற்றலோடு படை நடத்தும் தளபதி!- முனைவர் வா.நேரு

டிசம்பர் 2,2024 – சுயமரியாதை நாள். திராவிடர் கழகத் தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 92ஆம் பிறந்தநாள். நாமெல்லாம் மகிழ்ச்சியோடும் உற்சாகத்தோடும் கொண்டாடக் கூடிய திருநாள். அய்யா ஆசிரியர் அவர்களை வணங்கி வாழ்த்தி மகிழ்கின்றோம். ‘‘மற்றவர்கள் பலரும் பெரியாரை வாசிப்பவர்கள்; நேசிப்பவர்கள்.அவரது தொண்டர்களுக்குத் தொண்டனான யானோ பெரியாரைச் சுவாசிப்பவன்;பெரியார் தத்துவங்களை உலகமயமாக்க யோசிப்பவன் மட்டுமல்ல;அதற்காகவே மக்களை யாசிப்பவன்’’ என்று தன்னைப் பற்றி அய்யா ஆசிரியர் அவர்கள் குறிப்பிடுகின்றார். சிறுகனூரில் அமையவிருக்கும் ‘பெரியார் உலகம்’ என்பது அய்யா […]

மேலும்....