மனிதம் வளர்த்த மாபெரும் புரட்சியாளர் பெரியார்!

உலகில் உள்ள உயரிய கருத்துகளின் ஒற்றைக் குறியீடுதான் மனிதம். அந்த மனிதத்தின் மறுபெயர்தான் பெரியார். ஆம் பெரியாருக்கென்று தனிப்பட்ட கருத்துகள், நோக்கங்கள் எதுவும் இல்லை. எதுவெல்லாம் மனிதமோ அதுவெல்லாம் பெரியார் கொள்கைகள். மனிதம் என்பது நம்மைப் போல் பிறரையும் நினைத்தல். நமக்குள்ள உணர்வுகள் பிறருக்கும் உண்டு என்று உணர்தல். இந்த உணர்வு வந்தால் சமத்துவ எண்ணம் தானே மலரும். சமத்துவம் மனிதத்தின் மலர்ச்சி; ஆதிக்கம் மனிதத்தின் எதிர்நிலை. எனவே, மனிதத்தை நிலைநாட்ட விரும்புகின்றவர்கள் ஆதிக்கத்தை அழிக்கப் போராடுவர்; […]

மேலும்....

நான் எப்போதும் கொள்கைக்காரன்! – தந்தை பெரியார்

நான் எனக்குத் தோன்றிய, எனக்குச் சரியென்றுபடுகிற கருத்துகளை மறைக்காமல் அப்படியே சொல்லு கின்றேன். இது சிலருக்குச் சங்கடமாகக் கூட இருக்கலாம்; சிலருக்கு அருவருப்பாக இருக்கலாம்; சிலருக்குக் கோபத்தையும் உண்டாக்கலாம் என்றாலும், நான் சொல்வது அத்தனையும் ஆதாரத்தோடு கூடிய உண்மைக் கருத்துகளே தவிர, பொய்யல்ல. (‘விடுதலை’, 15.7.1968) எந்தக் காரியம் எப்படி இருந்தாலும் அரசியலில், பொது வாழ்க்கையில் கண்டிப்பாக மனித தர்மம் தவிர, வேறு எந்தக் கால தர்மமோ, சமய தர்மமோ புகுத்தப்படக்கூடாது என்பதுதான் எனது ஆசையே ஒழிய, […]

மேலும்....

EWS இடஒதுக்கீடு குறித்து உச்சநீதிமன்றத் தீர்ப்பு சமூகநீதிக்கு எதிரானது!

நீதிபதி (ஓய்வு) நாரிமன் கூற்று சரியானது! கேரள உயர்நீதிமன்றத்தில், ஜஸ்டிஸ் வி.ஆர்.கிருஷ்ணய்யரின் 10ஆவது நினைவுச் சொற்பொழிவாக மேனாள் உச்சநீதிமன்ற நீதிபதி ஜஸ்டிஸ் ரோகிந்தன் நாரிமன் அவர்கள் ஆற்றிய ஒரு பேருரையில் EWS குறித்து முக்கியமாகக் குறிப்பிட்டு, ஆதங்கப்பட்டு எடுத்து வைத்துள்ள கருத்து மிகவும் அதிர்ச்சிக்குரியதாக பலருக்கும் இருக்கக் கூடும். உண்மை நியாயங்களும் இப்போதாவது இவர்மூலம் துணிச்சலாக வெளி வருகிறதே என்று சமூகப் போராளிகளுக்கும் மகிழ்ச்சிக்குரியதாக இருக்கிறது என்பதில் அய்யமில்லை. 7.12.2024 அன்று ஜஸ்டிஸ் ரோகிந்தன் நாரிமன் அவர்கள், […]

மேலும்....

பானகல் அரசர் நினைவு நாள் : 16.12.1928

“தீண்டாதார், கீழ்ஜாதியார், ஈன ஜாதியார், சூத்திரர் என்பனவாகிய பிறவி இழிவும் பிறவி அடிமைத்தனமும் சுமத்தப்பட்ட சுமார் 20 கோடி இந்திய மக்களின் சுயமரியாதைக்கும் விடுதலைக்கும் சமத்துவத்திற்கும் மனிதத் தன்மைக்குமாக வேண்டி பிரவாகமும் வேகமும் கொண்ட வெள்ளத்தில் எதிர் நீச்சு செய்வது போன்ற கஷ்டமான காரியத்தைக் கைக்கொண்டு அதில் இறங்கி வேலை செய்தவர் பானகல் அரசர்” – தந்தை பெரியார் (‘குடிஅரசு’ 23.12.1928)

மேலும்....

உங்களுக்குத் தெரியுமா?

ருசியாவிற்குச் செல்லுவதற்கு முன்பே இந்தியாவிலேயே முதன்முதலாக மார்க்ஸ் – ஏங்கெல்ஸ் கம்யூனிஸ்ட் அறிக்கையை மொழிபெயர்த்துத் தமிழில் வெளியிட்டவர் தந்தை பெரியார் என்ற வரலாற்றுச் செய்தி உங்களுக்குத் தெரியுமா?

மேலும்....