மக்கள் மன்றமே இறுதி மாற்றத்தை ஏற்படுத்தும்!

1. கே: ‘சிட்டி குரூப்’ என்னும் உலக வங்கி அறிக்கை- இந்தியாவில் வேலையின்மை அதிகரித்து வருவதாகக் கூறியுள்ளது. ஆனால், மோடி தம் ஆட்சிக் காலத்தில் பொருளாதாரம் வளர்ச்சியடைந்துள்ளது என்றும், வேலைவாய்ப்பும் அதிகரித்துள்ளது என்றும் கூறுகிறாரே, இது ஏமாற்றுதானே?  – கி. ராஜவேல், அம்பத்தூர். ப : பெரும் ஏமாற்றுப் பதில் ஆகும். அண்மையில் ரஷ்யாவுக்குப் போய் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் கைகுலுக்கி விருந்துண்டு உரையாடியபோது, ரஷ்ய – உக்கிரைன் போருக்கு, (ரஷ்ய இராணுவத்திற்கு ஆள் பற்றாக்குறையோ […]

மேலும்....

மனித சுதந்திரத்திற்கு எதிரானது ஜாதி!- குமரன்தாஸ்

நீங்களும் கூட பார்த்திருப்பீர்கள் – சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த பெண் பிள்ளை கோபமாகப் பேசிய அந்தக் காணொளியை! “இவர்கள் யார், எனது வாழ்க்கையில் குறுக்கிட? நான் யாரைக் காதலிக்க வேண்டும், யாரைத் திருமணம் செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்வதற்கு இவர்கள் யார்? எனது பெற்றோர்களும் சம்மதித்துவிட்ட பிறகு இவர்கள் ஏன் தடுக்க வேண்டும்? என்று வயது வந்த (Major) அந்தப் பெண் பிள்ளை எழுப்பிய கேள்விகள் மிகவும் நியாயமானவை. ஆனால், ரத்த உறவையும் தாண்டி அப்பெண்ணின் […]

மேலும்....

ஆசியாவில் இக்கல்லூரியில் மட்டுமே இருக்கின்ற BRSc படிப்பு

திருச்சி ஹோலிகிராஸ் தன்னாட்சிக் கல்லூரியில் மட்டுமே புனர்வாழ்வியல் துறை (BRSc – Bachelor of Rehabilitation Science) பாடப்பிரிவு இருக்கிறது, பாரதிதாசன் பல்கலைக்கழக அங்கீகாரம் பெற்ற பாடப்பிரிவு இது. சிறப்புத் தேவை உள்ள மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்காகவே 1983இல் இந்தப் படிப்பு இங்கு தொடங்கப்பட்டு கடந்த 40 ஆண்டுகளாகவே செயல்பட்டு வருகிறது. ‘‘மாற்றுத்திறனாளி குழந்தைகளின் ஆரம்ப கால கண்டறிதலில் தொடங்கி, அவர்களுக்கு நல்ல ஒரு வேலை வாய்ப்பு கிடைக்கிற வரைக்குமான அனைத்துவிதமான பயிற்சியும் பிராக்டிக்கலாகவும், தியரியாகவும் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. […]

மேலும்....

உலக மக்கள் புரிந்து கொள்ளும் குறியீடுகள்…

மனித குல வரலாற்றில் தகவல் தொடர்பு என்பது மிக மிக முக்கியமானது. குரங்கு இனத்திலிருந்து மனித இனமாகப் பரிணாம வளர்ச்சி அடைந்த பொழுது மனிதன் வெறும் ஒலிகளை மட்டுமே பயன்படுத்தி இருக்கிறான்-இன்றைக்கு விலங்குகளும் பறவைகளும் பயன்படுத்துவது போல. அது ஆபத்திலிருந்து தப்பிக்கவும், உணவுக்கும் இனப்பெருக்கத்திற்கும் பயன்பட்ட ஒலிகள். அதற்குப் பின்பு ஒரு குழுவாக ஓரிடத்தில் நிலையாக வாழ ஆரம்பித்த பிறகு மொழிகள் தோன்றியிருக்கின்றன. இன்றைக்கு உலகத்தில் ஆயிரக்கணக்கான மொழிகள் இருக்கின்றன. சில மொழிகள் வளர்ந்து கொண்டு இருக்கின்றன. […]

மேலும்....

பெரியாரின் மனித உரிமைப் போராட்டங்களும் பலன்களும்

1955ஆம் ஆண்டு இந்தித் திணிப்பை எதிர்த்து இந்திய தேசியக் கொடியை ஆகஸ்ட் 1ஆம் தேதியில் எரிப்பது எனத் தீர்மானித்தார். இந்தி, தேர்வுக்கான பாடமாக இராது என மத்திய மாநில அரசுகள் உறுதி அளித்ததன் பேரில் கொடி எரிப்புக் கிளர்ச்சியை ஒத்தி வைத்தார். 1956ஆம் ஆண்டு நாடெங்கும் இராமன் உருவப்படத்தை எரிக்கச் செய்தார். தமிழர்களைச் சிறுபான்மையினராக்கும் வகையில் உருவாக்கப்பட்ட தட்சணப்பிரதேசம் என்ற கேடான அமைப்பை எதிர்த்து அதனை இந்திய அரசு கைவிடச் செய்தார். மொழிவாரிப் பிரிவுக்குப் பின் தமிழ்நாடே […]

மேலும்....