என்னைக் கவர்ந்த புத்தகம் ‘பெரியார் களஞ்சியம்’தான் ! – கவிஞர் நா.முத்துக்குமார்

எனது தந்தையாருக்கும், எனக்கும் உள்ள பொதுவான குணாம்சமே, புத்தகங்கள் வாங்கிக் குவிப்பது தான். “புத்தகம் வாங்கியே நீ பாதி ஏழையாகி விட்டாய்” என்று என் நண்பர்கள் செல்லமாகக் கடிந்து கொள்வதுண்டு. ஆனாலும், அந்தப் பழக்கத்தை என்னால் மாற்றிக் கொள்ளவே முடியவில்லை. கிட்டத்தட்ட அறுபதாயிரம் புத்தகங்கள் எனது வீட்டில் இருக்கின்றன. ஆனாலும் அவற்றில் என்னைக் கவர்ந்த புத்தகம் பெரியார் களஞ்சியம்தான். எப்போது எடுத்துப் படித்தாலும் சலிப்பைத் தராத புதிய, புதிய வாழ்வியல் சிந்தனைகளைத் தோற்றுவிக்கும் வலிமை வாய்ந்தது அந்தப் […]

மேலும்....

வாழ்க்கை மாற்றங்களும் நோய்களும் – தீர்வுகளும்- குமரன்தாஸ்

அண்மைய ஆண்டுகளில் தமிழ்நாட்டில் தொற்றா நோய்களால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதுடன் மிகக்குறைந்த வயதினர் மரணங்களும் அதிகரித்து வருவதைக் காண்கிறோம். 50 வயதினர் மாரடைப்பினால் பாதிக்கப்படுவது அதிகரித்துள்ளது. அதாவது நீரிழிவு, ரத்த அழுத்தம், கொழுப்பு, பக்கவாதம், மாரடைப்பு போன்ற தொற்றா நோய்கள் அதிகரித்துள்ளதை நாம் காண்கிறோம். அதேசமயம் காச நோய், மலேரியா அம்மைநோய், காலரா போன்ற தொற்றும் நோய்கள் பெருமளவு குறைந்துள்ளதையும், அவை கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளதையும் நாம் பார்க்கிறோம். ஏன் இந்த மாற்றம்? இவையனைத்திற்கும் காரணம் கடந்த […]

மேலும்....

பசு, எருமை என்று விலங்கிலும் வர்ணம் பிரித்த பார்ப்பனியம் -சுமன்கவி

ஆரியப் பார்ப்பனர்களின் கலாச்சாரக் கூறுகளும், பார்ப்பனரல்லாத பிற மக்களின் பண்பாட்டுக் கூறுகளும் அடிப்படையில் வேறு வேறானவை. அதற்கான பல சான்றுகள் உள்ளன. அவற்றுள் ஒன்று பசுவைப் புனிதம் என்று போற்றுவது. பசு மாடு பாப்பார மாடு, காளை மாடுதான் நம்ம மாடு என்று வழக்குரைஞர் அருள் மொழி அவர்கள் பேசிய காணொளி யூடியூப்பில் ரொம்ப பிரபலம். உண்மை என்ன? சற்று ஆராய்வோம். பசுமாட்டை ஏன் பார்ப்பனர்கள் போற்றினார்கள்? அடிப்படையில் ஆரியர்கள் ஒரு நாடோடிக் கூட்டத்தினர். கால்நடைகளை மேய்த்து […]

மேலும்....

ஆன்மிகக் காலம் அல்ல; ‘Artificial Intelligence’ காலம் !வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி

உலகில் எந்தத் தொழில் தொடங்குவதற்கும் முதலீடு மிக அவசியம். கையில் பணம் இல்லாமலோ, முதலீடு செய்வதற்கு எந்த வாய்ப்பும் இல்லாமலோ எவ்விதத் தொழிலையும் தொடங்குவது சிரமமான காரியம். ஆனால், மிகவும் எளிதாக, ஒரு ரூபாய்கூட செலவின்றி தொழிலைத் தொடங்கி, பல கோடி ரூபாய் இலாபம் ஈட்ட முடிகின்ற வாய்ப்பினைப் பெற்ற ஒரே தொழில் “சாமியார் தொழில்” மட்டுமே! யாரும் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு லாபத்தை ஈட்டித் தரும் இவ்வகை சாமியார் தொழிலுக்கு மிக முக்கியமான இரண்டு […]

மேலும்....

இயக்க வரலாறான தன் வரலாறு (347)

காமலாபுரத்தில்  பெரியார் சிலை திறப்பு – கி.வீரமணி மருதூர் சிதம்பரம மருதூரில் தந்தை பெரியார் சிலை திறப்பு விழாவிற்கு 1.10.2005 அன்று சென்ற நாம், மறைந்த பெரியார் பெருந்தொண்டர் சிதம்பரம் அவர்களின் இல்லம் சென்று, அவருடைய துணைவியார் திருமதி. செண்பக இலக்குமி அவர்களைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்தோம். பின்னர் அந்த வளாகத்தில் அமைந்துள்ள தந்தை பெரியார் முழுஉருவச் சிலையைத் திறந்து வைத்தோம்.அருகில் அமைக்கப்பட்டுள்ள கல்வெட்டையும் திறந்து வைத்து, கழகக் கொடியையும் ஏற்றினோம். திறந்து வைக்கப்பட்ட தந்தை பெரியார் […]

மேலும்....