குமரிக்கண்டம் பற்றிய வரைபடங்களும் குற்றம் சுமத்தும் கூட்டமும்

நூல் குறிப்பு நூல் பெயர் : கடலடியில் தமிழர் நாகரிகம் ஆசிரியர் : என். நந்திவர்மன் வெளியீடு :உலகத் தமிழாராய்ச்சி  நிறுவனம், தரமணி, சென்னை. பக்கங்கள் : 116; விலை : ரூ.55/- உருசிய ஆய்வறிஞர் அலைக்சாண்டர் கொந்திராதோவ் எழுதிய The Riddle of Three Oceans (1974) நூலின் தமிழாக்கம் 1981இல் நடந்த உலகத் தமிழ் மாநாட்டில் வெளியிடப்பட்டது. தமிழின் தாயகம் கடல் கொண்ட குமரிக்கண்டமே என மொழி நூலறிஞர் தேவநேயப் பாவாணர் முழங்கினார். பொள்ளாச்சி […]

மேலும்....

மூத்திரப்பை கைசுமந்து மூடத்தைக் களைந்தாய் வாழி !தந்தை பெரியார் பிறந்த நாள் வாழ்த்து!

– பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் காப்பில்லாக் கனிமரமாய்க் காய்த்த தெல்லாம் கயவர்கை பறித்தெடுத்தும் மகிழ்ந்தி ருந்தோம்! தோப்பென்று கூடாமல் தனித்தி ருந்து துயர்ச்சாதி மயக்கத்தில் அமிழ்ந்தி ருந்தோம்! கூப்புதற்கே கைகளுற்றோம்! பணிந்து நிற்கக் கூன்முதுகில் குலப்பெருமை ஏற்றி வைத்தோம்! பூப்பறியா மலர்ச்செடியாய்க் கல்வி யற்றும் புத்தனெங்கள் பாட்டனென்று பெருமை கொண்டோம்! இருள்செரிக்கும் கதிரொளியாய் நின்கண் பட்டே இழிவிருளை ஓட்டியெம்மின் விடியல் கண்டோம்! மருளூட்டும் மதஞ்சாதி சாத்தி ரங்கள் மறுதலித்து மனிதந்தான் முதன்மை யென்னும் தெருளூட்டத் தெருவெல்லாம் வடம்பி […]

மேலும்....

பிஞ்சு நெஞ்சில் நஞ்சா?- திருப்பத்தூர் ம.கவிதா

செயற்கை நுண்ணறிவுக் காலமிதில் ஜீ(சீ)பூம்பா காட்டும் ஒருவன் சொத்தைக் கருத்துகளைச் சொல்லி வித்தை காட்டும் (மகா)விஷ்ணு! மந்திரங்கள் உச்சரிக்க மழையே நெருப்பாய்ப் பொழியுமாம்! உளறுகிறான் இவ்வாறாய் ஊருக்குள் இக்கிறுக்கன்! ஆகாய விமானத்தில் ஆஸ்திரேலியா போனானா? அஞ்சனை மைந்தனைப் போல் ஆகாயத்தில் பறந்தானா? பாவமாம் புண்ணியமாம் பிறவிப்பலன் கல்வியே ஞானமாம் பெரியார் பிறந்த மண்ணில் பிதற்றுகிறான் என்ன துணிச்சல்? வீறுகொள் மாணவப் பருவத்தைச் சேறுபூசிச் சிதைக்கப் பார்க்கிறான்! ஆன்மிகப் பேச்சென்று அளந்து கொட்டுவோர் வரிசையில் இப்போது இவன் புதுவரவு! […]

மேலும்....

மனமின்றி அமையாது உலகு (4)

மருத்துவர் சிவபாலன் இளங்கோவன் மனநல மருத்துவர் இரண்டு வகையான உளவியல் பிரச்சினையில் சிக்கி நான் ஊசலாடியிருக்கிறேன். கேள்வி: 1. அறிஞர் அண்ணா எழுதிய ‘சாது’ சிறுகதையில் வருவது போல முதலாளியிடம் திட்டு வாங்கியதில் உள்ளத்தில் எழுந்த கோபத்தை அடக்கிக் கொண்டு, அதைத் தன் மனைவியிடம் காட்டி ஆசுவாசப்படும் தோட்டக்காரனின் மனைவி அவன் செய்யும் கொடுமைகளைப் பொறுத்துக் கொண்டு தன் கோபத்துக்கு வடிகாலாய் குழாயடிச்சண்டையில் ஈடுபடுவாள். உள்ளத்தில் உணர்வெழுச்சிகளைப் புதைத்து அடக்கி வைத்து அதனை சம்பந்தமற்றவர்களிடம் அல்லது கோபம் […]

மேலும்....

சிறுகதை

“என்னடா பிரபு, என்ன தீவிரமா படிச்சிகிட்டு இருக்க? என்ன புத்தகம்? புதுசா இருக்கே,” மரத்தடியில் உட்கார்ந்து கொண்டு புத்தகம் படித்துக் கொண்டிருந்த தனது நண்பன் பிரபுவைப் பார்த்துக் கேட்டான் தற்செயலாக அங்கு வந்த சேரன். “என்னோட உறவுக்காரர் ஒருவர் புதியதாக ஒரு மாத இதழ் தொடங்கியுள்ளார். அதன் முதல் இதழ்தான் இது”, என்று பதில் சொன்னான் பிரபு. “அப்படியா! புத்தகத்தின் பெயர் என்ன?” என்று கேட்டபடியே அவன் அருகில் உட்கார்ந்தான் சேரன். “டெம்பிள் விசிட்” என்று பெயர் […]

மேலும்....