கேட்டுத் தொலைப்பாயா ? ! – திருப்பத்தூர் ம. கவிதா

குழந்தை சுமந்தாள் பத்தியமிரு என்றனர் பத்து மாதம் இருந்தாள் முடித்தாளில்லை… குழந்தை வளர்க்க வாய்மூடி மவுனியாய் பத்தியம் தொடர்ந்தாள் முடித்தாளில்லை… பிள்ளைகள் படிக்க இருபத்து ஆண்டுகள் பத்தியம் தொடர்ந்தாள் முடித்தாளா? இல்லை! மகளுக்கு மகனுக்கு நல்லபடி மணம் முடிக்க வாய்ப்பூட்டுப் போட்டு பத்தியம் தொடர்ந்தாள்! பத்தியத்திற்குள் இருந்திருந்து பழகிப் போய்விட்டது அவளுக்கு! விருப்பையும் காட்டாமல் வெறுப்பையும் காட்டாமல் வெறுமனே கடக்கிறது கிடைத்தற்கரிய ஒரே வாழ்வு! இளமை இப்போது வற்றி இறுக்கி அண்டும் நோயால் மீண்டும் பத்தியக்காரியாய் மருத்துவர்கள் […]

மேலும்....

இலக்கியத்தரம் மிக்க இணையிலா இரங்கலுரை – சிகரம்

1933ஆம் ஆண்டு மே மாதம் 11ஆம் தேதி உடல் நலம் பாதிக்கப்பட்டு – சிறப்பான சிகிச்சையளிக்கப்பட்டும் பலனின்றி இரவு 7:45 மணியளவில் நாகம்மையார் மரணமடைந்தார். அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த ஆயிரக்கணக்கானோர் வந்தனர். கையில் தடியுடன் வாசலில் நின்ற பெரியார் யாரும் அழக்கூடாது; அழுவதானால் உள்ளே போகக்கூடாது என்று கேட்டுக்கொண்டார். அடுத்த நாள் காலை நாகம்மையார் உடல் எரியூட்டப்பட்டது. அன்று மாலையே ஈ.வெ.ரா. பிரச்சாரத்திற்காக வெளியூர் சென்றுவிட்டார். அதனால் பாசம் இல்லையென்று பொருள் அல்ல. பகுத்தறிவு வழிச்சென்றார். […]

மேலும்....

அயோத்தி தாச பண்டிதர் ! – முனைவர் கடவூர் மணிமாறன்

உயரிய குறிக்கோள், கொள்கை உடையார் அயோத்தி தாச பண்டிதர்; போற்றும் ஆய்வு நாட்டம் அறிந்த மருத்துவர் ஓய்வே இன்றி இனநலன் காத்தவர்; சுயமரி யாதை உணர்வை ஊட்டிய நயத்தகு எழுச்சி மறவர்! நாட்டில் இந்து மதத்தைச் சார்ந்த மொழியாம் இந்தியோ பொதுமொழி ஆகா என்றவர்! வேதப் புரட்டுகள் விதைத்து வந்தோர் ஆதிக் கத்தைத் தகர்க்கத் துணிந்தவர்! ஒடுக்கப் பட்டோர் உயர்நிலை எய்திடப் படிக்கப் பள்ளிகள் திறக்கவும் பள்ளியில் நண்பகல் உணவை நல்கவும் அந்நாள் எண்ணிய சிந்தனை யாளர்! […]

மேலும்....

என்னை உருவாக்கிய பெரியாரின் சிந்தனைகள்… – விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை

சென்ற இதழ் தொடர்ச்சி…. நிலவில் நீர் கண்டுபிடித்துவிட்டோம், நிலவில் எப்படி பத்திரமாக இறங்கலாம் என்றும் காண்பித்துவிட்டோம். இந்த நிலையில் சர்வதேச விண்வெளி மய்யத்தை ஏன் பூமியைச் சுற்றி அமைக்கவேண்டும்? நிலவிலேயே அமைத்தால் என்ன? அந்தக் கேள்விக்கான பதில் – சர்வதேச விண்வெளி மய்யம் பூமியைச் சுற்றி அமைக்கவேண்டிய அவசியமில்லை. நிலவில் அமைக்க முடியும். ஏனென்றால், பூமிக்கு அருகில் புதிய சர்வதேச விண்வெளி மய்யம் அமைத்தாலும், இன்னும் 10, 15 ஆண்டுகளில் அதனுடைய ஆயுட்காலமும் முடியும். ஆனால், நிலவில் […]

மேலும்....

இந்தியாவா ? பாரதமா ? – ஓர் ஆய்வு – பேராசிரியர் இரவிசங்கர் கண்ணபிரான் இணைப் பேராசிரியர், பாரிஸ் பல்கலைக்கழகம், பிரான்ஸ்.

(‘திராவிடப் பொழில்’ அக்டோபர்  – டிசம்பர் 2023 ஆய்விதழில் “Names of the Nation – A Comparative Study’ என்னும் தலைப்பில் வெளிவந்த பாரிஸ் பல்கலைக்கழகப் பேராசிரியர் கண்ணபிரான் இரவிசங்கர் அவர்களின் ஆங்கிலக் கட்டுரையின் தமிழ்ப் பெயர்ப்பின் சுருக்கம். -தமிழ்ப் பெயர்ப்பு : பாவலர் செல்வ மீனாட்சிசுந்தரம்.) சென்ற இதழ் தொடர்ச்சி… ஹத்திக்கும்பா கல்வெட்டு சொல்வதென்ன? இன்றைய ஒரிசா மாநிலத்தின் உதயகிரி மலைப்பகுதியில் பிராக்ருதி மொழியில் பிராமி எழுத்துருவால் வெட்டப்பட்டுள்ள ஹத்திக்கும்பா கல்வெட்டு, அந்தப் பகுதியைக் […]

மேலும்....