சமூக நீதியின் வெற்றி ! நீதிபதி சிறீபதி !

தமிழ்நாட்டில் நடைபெற்ற பெண்ணுரிமை, சமூகநீதிக்கான சுயமரியாதை இயக்கத்தின் போராட்டங்களின் விளைவாக பெண்கள் கல்வி கற்று முன்னேறி வருகின்றார்கள். தந்தை பெரியார் காண விரும்பிய புரட்சிப் பெண்கள், ஒடுக்கு முறைகளை உடைத்து எழுச்சி பெற்று வருகின்றனர். அத்தகைய சாதனையைப் புரிந்த சாதனையாளர்களில் ஒருவர்தான் சிறீபதி. திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலையை அடுத்த புலியூர் கிராமத்தைச் சேர்ந்த 23 வயதான சிறீபதி எனும் பழங்குடி வகுப்பைச் சார்ந்த பெண், அண்மையில் நடைபெற்ற சிவில் நீதிமன்ற நீதிபதிகள் தேர்வில் வெற்றி பெற்று […]

மேலும்....

“ஹிந்தி தேவையில்லை!” சுந்தர்பிச்சை அறிவிப்பு…

தமிழர் ‘சுந்தர்பிச்சை’யின் ஆண்டு வருமானம் 176 கோடி ரூபாய்… அவருக்குத் தமிழும் ஆங்கிலமும் மட்டுமே தெரியும்… ஹிந்தி மருந்துக்கும் தெரியாது… ஹிந்தி தெரிந்திருந்தால் மும்பையில் அதிகபட்சமாக மாதம் இரண்டு லட்சம் ரூபாய் சம்பளத்தில் -_ ஏதோ ஒரு ஏனோ -தானோ அடிமை வேலையில் இருந்து கொண்டு பட்ஜெட் வாழ்க்கை வாழ்ந்திருப்பார் என்பதே உண்மை… ஹிந்தியில் கேள்வி கேட்ட ஒரு செய்தியாளரைப் பார்த்து, சுந்தர்பிச்சை கூறுகிறார்: “எனக்கு ஹிந்தி தெரியாது; கேள்வியைத் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் மட்டுமே கேளுங்கள்” […]

மேலும்....

அறிவு கொண்டு சிந்திப்பதே நாத்திகம்!

பகுத்தறிவு என்பது மனிதனுக்கு ஜீவநாடி-; உயிர்நாடி ஆகும். ஜீவராசிகளில் மனிதனுக்குத்தான் பகுத்தறிவு உண்டு. இதில் மனிதன் எவ்வளவுக்கு எவ்வளவு தாழ்ந்த நிலையில் இருக்கின்றானோ அவ்வளவுக்கு அவ்வளவு காட்டுமிராண்டி என்பது பொருள். மனிதன் எவ்வளவுக்கு எவ்வளவு பகுத்தறிவில் தெளிவு பெறுகின்றானோ அவ்வளவுக்கு அவ்வளவு பக்குவமானவன் என்பது பொருள். பகுத்தறிவு பெறும்படியான சாதனம் நமக்கு நீண்ட நாளாகவே தடைபடுத்தப்பட்டு வந்துள்ளது. நம்மை அடிமைப்படுத்தி ஆதிக்கம் செலுத்திய பார்ப்பனர்கள் நாம் பகுத்தறிவு வளர்ச்சியடைய ஒட்டாமல் தடை செய்து கொண்டே வந்து உள்ளார்கள். […]

மேலும்....

இந்தியா கூட்டணி சிதறாது ! பி.ஜே.பி.யை வீழ்த்தி பெரு வெற்றி பெறும் !

இந்தியா’ கூட்டணி சரியான திசையில் சென்று, ஜனநாயக மீட்புப் பணியில் வெற்றியின் உதயத்தை நோக்கிய பயணத்தைச் சரியான உத்வேகத்துடன் செய்து வருகிறது! சில ‘சருகுகள்’ அதில் உதிர்ந்தன; சில சுயநலமிகள் தங்களது இடத்தைத் தற்காலிகமாகவேனும் பாதுகாக்கும் பொருட்டு காவிகள் பக்கம் சாய்ந்து, அவர்களது ‘மயக்க பிஸ்கெட்டுகளுக்கு’ பலியானார்கள். எதிர்கட்சிக் கூட்டணியிலிருந்து இவ்வாறு சென்றதையும் அதனால் கூட்டணி முழுமையாய்ச் சிதையும் என்று மிக மகிழ்ச்சியோடு சொன்னவர்களுக்கும், எதிர்பார்த்தவர்களுக்கும் ஏமாற்றமே மிஞ்சி வருகிறது! தொடக்கத்தில் தமிழ்நாட்டின் ஒப்பற்ற முதலமைச்சர் – […]

மேலும்....

அன்னை மணியம்மையார் பிறப்பு : 10.3.1920

“மகளிர் குல மணிவிளக்காகவும் அறிவியக்கத்தின் ஒளிச்சுடராகவும் தெளிந்த சிந்தனையும் திடமான நெஞ்சமும் கொண்ட வீராங்கனையாகவும் விளங்கியவர்கள் அன்னை மணியம்மையார் அவர்கள். பெரியாருக்குத் துணையாக இருந்து தன்மான இயக்கத்தையும், திராவிடர் கழகத்தையும், வளர்த்தார்கள் என்பது மட்டுமல்ல, பெரியாருக்குப் பிறகு அவரது கொள்கைகளைக் காக்க ஓயாது உழைத்தார்கள். ஓய்வில்லாத பணிதான் அவரது உயிரையும் கொள்ளை கொண்டுவிட்டது என்று சொன்னால் அது மிகையாகாது.” – டாக்டர் கலைஞர் (முரசொலி 19.3.1978)

மேலும்....