வில் வித்தையில் சாதனை புரிந்துவரும் விளையாட்டு வீராங்கனை சஞ்சனா!

சென்னையைச் சேர்ந்த ஆறு வயதான மாணவி சஞ்சனா வில் அம்பு எய்தல் விளையாட்டில் சர்வதேச அளவில் பல சாதனைகள் புரிந்து வருகிறார். பி.சஞ்சனா தன் மூன்று வயதிலேயே வில் அம்பு எய்தல் விளையாட்டில் 8 மீட்டர் தொலைவு இலக்காக வைத்து 1,111 அம்புகளை எய்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்று சாதனை படைத்துள்ளார். அவர் மூன்றரை மணி நேரத்தில் இந்தச் சாதனையை செய்தார். சஞ்சனா 5 முறை வில்வித்தை விளையாட்டில் கின்னஸ் சாதனை படைத்துள்ளார். கின்னஸ் சாதனை […]

மேலும்....

என்னை உருவாக்கிய பெரியாரின் சிந்தனைகள் – விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை

எதற்காக இதைச் சொல்கிறேன் என்றால், நான் மட்டுமல்ல, என்னுடைய சக விஞ்ஞானிகளை வைத்துத்தான் கொண்டு வருகிறோம். அதேபோன்று, சிங்கப்பூரில் நேற்று என்ன நடந்தது? என்பதைப்பற்றி, நான் பெங்களூருவில் இருந்தாலும், தமிழ்நாட்டில் இருந்தாலும் என்னால் தெரிந்துகொள்ள முடிகிறது. அதேபோன்று, அறிவியல் உலகில், இன்றைக்கு என்ன நடக்கிறது என்பதை, நாளைக்குத் தமிழன் தெரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காக ‘அறிவியல் பலகை’. அன்று ‘சங்கப் பலகை’ இருந்திருக்கலாம்; இப்பொழுது தேவைப்படுவது அறிவியல் பலகை. அதை நோக்கி நாம் எடுத்துச் செல்ல முயற்சி செய்கிறோம். பெரியார் […]

மேலும்....

வரலாற்றுச் சுவடுகள் – பம்பாயில் பார்ப்பனர் கொடுமை

“மூர்க்கனும் முதலையும் கொண்டது விடா” என்பது ஓர் பழமொழி. அத்தகையதே நமது பார்ப்பனர்களின் தன்மையாகும். பல நூறு ஆயிரம் ஆண்டுகளாக பார்ப்பனரல்லாத பெருங்குடி மக்களை, தூர்த்தர்களான பார்ப்பனர்கள் தங்களின் வயிற்றுப் பிழைப்பைக் கருதி உண்டாக்கிய சாஸ்திரங்களை ஆதாரமாக வைத்துக்கொண்டு அட்டை போல் உறிஞ்சி வந்தனர் – வருகின்றனர். எத்தகைய கேவலத் தொழிலையும் செய்யப் பின்வாங்காத இழிதகைமை படைத்த இப்பார்ப்பனக் கூட்டம் இந்துக்களின், அதாவது பார்ப்பனரல்லாதாரின் மதகுருவென்றும், சுபாசுப காரியங்களை நடத்தி வைக்கும் புரோகிதர்களென்றும் மக்களை ஏமாற்றி ஆதிக்கஞ் […]

மேலும்....

தொண்டறச் செம்மல் மணியம்மையார் ! – முனைவர் கடவூர் மணிமாறன்

பெரியாரின் அறிவியக்கத் தொண்டுக் கெல்லாம் பின்புலமாய் அடித்தளமாய்த் திகழ்ந்தார் அன்னை! அருங்கொள்கை உரம்பெற்றார்! தமக்குப் பின்னர் அய்யாவும் இவர்தலைமை முடிவைச் சொன்னார்! பெருமைமிகு பெற்றோரை இழந்தோர் தம்மைப் பேணிடவே நாகம்மை இல்லம் கண்டார்; விரிந்தமனம் கொண்டோராய் ஒடுக்கப் பட்டோர் விடுதலைக்குக் களம்நின்றே உழைக்க லானார்! மணியம்மை விளம்பரத்தை விரும்பார் வாழ்வில் மவுனத்தால் அவமானம் இகழ்ச்சி வென்றார் பிணிசூழ்ந்த சமுதாயக் கட்டு மானப் பின்னடைவை முறியடிக்கும் உறுதி பூண்டார்! துணிவோடு கேடுகளை, இழிவைச் சாடித் துணையான அய்யாவை உயிராய்க் […]

மேலும்....

தாயினும் சாலச் சிறந்த தமிழ்நாடு முதல்வர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின்! – மஞ்சை வசந்தன்

தாய்ப்பாசத்திற்கு இணையில்லை என்பர். ஆனால், அதையும் விஞ்சி நிற்கிறது தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாட்டு மக்கள்மீது கொண்டுள்ள பாசம், பற்று, அக்கறை! இது இயற்கையாய் வந்த உணர்வு. கலைஞர் குருதியில் பிறந்தவர் என்பதால், அவருக்கு இருந்த அந்த உணர்வுகள் பன்மடங்காய்ப் பெருகி, இவருக்குள் எழுச்சி கொண்டு வெளிப்படுகிறது; வினையாற்றுகிறது. இப்படிக் கூறுவது மிகையல்ல, இம்மி அளவு கூட மிகைப்படுத்தப்படாத அப்பட்டமான உண்மை. விருப்பு, வெறுப்பு இன்றி, முதல்வராய் அவர் பொறுப்பேற்ற நாள் முதல் அவரின் செயல்பாடுகளைப் […]

மேலும்....