இளைய சமுதாயமே!எச்சரிக்கை! விழிப்போடு இரு!! – மஞ்சை வசந்தன்

இளைய சமுதாயம்தான் எதிர்கால உலகைக் கட்டமைத்து அடுத்தத் தலைமுறைக்குக் கொடுக்கும் பொறுப்புடையது. இளைய சமுதாயம் என்பதில் ஆண், பெண், கற்றவர்கள், கல்லாதவர்கள் எல்லாம் அடக்கம். நூறு ஆண்டுகளுக்குமுன் 30 வயது வரையில் கூட ஏதும் அறியாதவர்களாக வாழ்ந்தனர். தீய, கெட்ட வழக்கங்கள் அப்போது அதிகம் இல்லை. பெற்றோர், ஆசிரியர்கள், பெரியவர்கள் கூறுவதை ஏற்று நடந்தனர். பாலுறவு, போதை, களவு, பொய், ஏமாற்று என்று அதிகம் இல்லாமல் அப்போதைய இளைய சமுதாயம் இருந்தது. 50 ஆண்டுகளுக்கு முன் கல்வி, […]

மேலும்....

இந்த வள்ளுவருக்கா காவி ? – சிகரம்

தமிழர்கள் மட்டுமே வாழ்ந்த இந்த பரந்த நிலப்பரப்பில் ஆரியர்கள் அண்டிப் பிழைக்க நுழைந்தார்கள். முதலில் தமிழர்களிடம் பிச்சையெடுத்துப் பிழைத்தார்கள். பின் சடங்கு செய்து அதற்குத் தட்சணை பெற்றுப் பிழைத்தார்கள். ஆக, அவர்கள் உழைத்துப் பிழைத்தவர்கள் அல்ல. அதேபோல், தமிழர்களிடமிருந்து எல்லாவற்றையும் அவர்கள் கைப்பற்றி, திரித்து, மாற்றி, தனதாக்கிக் கொண்டார்கள். அவர்களுடைய இந்தக் கைப்பற்றும் முயற்சி இன்றளவும் நடந்துவருகிறது. முதலில் தமிழர் நிலத்தைக் கைப்பற்றினர், பின்பு தமிழ் மொழியைக் களவாடிச் சமஸ்கிருதத்தை உருவாக்கினர்; தமிழ்மொழியைச் சிதைத்தனர். அடுத்து நம் […]

மேலும்....

விஞ்ஞானமும் சனாதனமும்… தந்தை பெரியார் …

இன்றைய கூட்டம் வெளியில் மைதானத்தில் நடந்து இருக்கவேண்டும். பல காரணங்களால் அனுமதி கிடைக்காததனால் இங்கு ஏற்பாடு செய்து உள்ளார்கள். கன்னடத்தில் பேசவேண்டும் என்று சிலரும், தமிழில் பேசவேண்டும் என்று கோருபவர் பலரும் அவர்கள் ஆசைப்படுகின்றார்கள். இது பெரிதும் தமிழ் மக்கள் அழைப்பின் பேரில் வந்துள்ளதால் தமிழில் பேசுகின்றேன். தலைப்பு “விஞ்ஞானமும் சனாதனமும்” என்று தலைப்பு கொடுத்துள்ளார்கள். இதற்கு தமிழில் ஏற்ற சொல் இல்லை. இதற்கு தமிழில் நான் உணர்ந்தவரை “அறிவும், அறியாமையும்” என்று சொல்லலாம். பகுத்தறிவும் மூடநம்பிக்கையும் […]

மேலும்....

‘விஸ்வகர்மா யோஜனா’ என்பது ஜாதி அடிப்படையிலான குலத்தொழிலே! தமிழ்நாடு அரசு இதனை நிராகரிக்க வேண்டும்!

13.02.2024 ‘தினமலர்’ இதழில், ‘‘தமிழகத்தில், மத்திய அரசின், ‘விஸ்வகர்மா’ திட்டத்தை அமல்படுத்துமாறு, பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதையடுத்து, அத்திட்டத்திற்கான வயது வரம்பை, 18-க்கு பதிலாக, 35 ஆக உயர்த்தி அமல்படுத்த, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. சிற்பி, தச்சர், பொற்கொல்லர் உட்பட, 18 பாரம்பரிய கைவினை கலைஞர்கள் பயன்பெற, பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை, மத்திய அரசு, 2023 செப்டம்பரில் துவக்கியது. இத்திட்டத்தை, மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை செயல்படுத்துகிறது. திட்டத்திற்கு […]

மேலும்....

டாக்டர் சி.நடேசன் மறைவு – 18.2.1937

    டாக்டர் சி. நடேசனார் மறைந்தார் என்ற செய்தி கேட்டு நம் நாட்டில் திடுக்கிடாத பார்ப்பனரல்லாத தமிழ் மக்கள் எவரும் இருக்க மாட்டார்கள். அவரது சேவையைப் பாராட்டி அவருக்கு நன்றி, விசுவாசம் காட்டக் கடமைப்படாத தமிழ் மகன் எவனும் எந்நாட்டிலிருக்கமாட்டான். நடேசன் மறைவால் சென்னை நகரத்தில் பார்ப்பனரல்லாதார் மக்கள் முன்னேற்ற விஷயத்தில் உண்மையான பற்றும் கவலையும் இருந்த மக்களில் தலைவர் குழாத்தில் முதன்மையானவர் மறைந்துவிட்டார் என்று சொல்கிறோம். நடேசன் மறைவால் தமிழ் மக்கள் உள்ளத்தில் துக்க […]

மேலும்....