தீட்சிதர் பிடியிலிருந்து கோயிலை அரசு மீட்க வேண்டும்!

1. கே: பெங்களூரில் இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதியை பாகிஸ்தான் என்று இஸ்லாமியர்களுக்கு எதிராகக் கருத்துக் கூறிய கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி ஸ்ரீசானந்தாவை உச்சநீதிமன்றம் கண்டித்து நடவடிக்கை எடுத்திருப்பதை எப்படிப் பார்க்கிறீர்கள்? – வெ. கோபி, காஞ்சிபுரம். ப : பகிரங்கமாக, பச்சையாக – தான் ஒரு ஹிந்துத்துவவாதி – RSS கருத்தியலைக் கொண்டவர் என்பதையும், அதன்மூலம் – தரம் தாழ்ந்தவர் – நீதிபதி பதவி வகிக்க இலாயக்கற்றவர் என்பதையும் பிரகடனப்படுத்திக் கொண்டார்; இப்படிப்பட்டவர்கள் தொடர்ந்து பதவியில் […]

மேலும்....

பொருளியல்

உலக வாழ்க்கையில் பொருளின்றி பொருளில்லை. எனவே, பொருள் என்பது வாழ்வின் அடிப்படை, பொருளாதாரச் சிந்தனைகள் வளர்ந்து விரிந்து நிற்கின்ற இன்றைய நாளில்கூட பழமொழிகள் வழங்குகின்ற பொருள்சார்ந்த சிந்தனைகள் மிகவும் ஏற்புடையதாயும், பயனுடையதாயும் உள்ளன. “பணம் பத்தும் செய்யும்” “பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும்” “ஈட்டி எட்டிய மட்டும் பாயும்” “பணம் பாதாளம் வரை பாயும்!” என்ற பழமொழிகள் பொருளின் கட்டாயத் தேவையையும், பொருள் எத்தகு வலிமையுடையது என்பதையும், பொருளைக் கொண்டு எதையும் செய்யலாம் என்பதையும் விளக்கி, […]

மேலும்....

ஏழைப் பங்காளர் காமராசர் !

குலத்தொழில் செய்யச் சொன்ன கொடியரின் இழிவைச் சாடி நலம்தரும் திட்டம் நல்கி நற்றமிழ் இனத்தைக் காத்தார்! இலக்குடன் ஆட்சித் தேரை இயக்கினார் காம ராசர்! பலதொழிற் சாலை கண்டார் பள்ளிகள் திறந்தார் மீண்டும்! பள்ளியில் படிப்போர்க் கெல்லாம் பசித்துயர் பறந்தே ஓட நல்லவர் போற்றும் வண்ணம் நண்பகல் உணவுத் திட்டம் பல்வள அணைக்கட் டுக்கள் பாங்குறக் கொணர்ந்தார்! இல்லார் இல்லமோ இன்பம் எய்த ஏழைப்பங் காளர் ஆனார்! விடுதலைப் போரில் அந்நாள் வெஞ்சிறை ஒன்ப தாண்டாய்ப் படுதுயர் […]

மேலும்....

பெர்ட்ரண்ட் ரசல் – பெரியார் சிந்தனைகள் – ஒரு கண்ணோட்டம்…

ஆத்மா எனும் இல்பொருள் அ) ஆன்மா எனும் சொல்லுக்கு, தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள “வாழ்வியற் களஞ்சியம்” (பக்கம் 767) எனும் நூல் கீழ்க்கண்டவாறு ஆறு வகையான விளக்கங்களை அளித்துள்ளது:_ 1. உடலினின்றும் வேறுபட்டதும் உடல் இறந்த பிறகும் உள்ளதும், உடல் போனபின் பூமியில் செய்த செயலின் பலன்களைத் துய்ப்பதுமான மனித ஆவி. 2. சில வேளைகளில் இது பிரம்மம் என்பதற்கு மாற்றுச் சொல்லாக வந்துள்ளது. அப்போது இதன் பொருள் உலகத்தின் மூலத்துவம். 3. சாருவாகர்கள், உடலினின்றும் […]

மேலும்....

இயக்க வரலாறான தன் வரலாறு (348) இந்தோனேஷியாவில் சுயமரியாதைத் திருமணம்! – கி.வீரமணி

சட்ட எரிப்புப் போராட்ட வீரரும் பெரியார் பெருந்தொண்டரும் திருத்துறைப்பூண்டி ஒன்றிய திராவிடர் கழகச் செயலாளர் சித்தார்த்தன் அவர்களின் தந்தையுமான ஈ.சுந்தர் (வயது 80) அவர்கள் 25.10.2005 அன்று மறைவுற்ற செய்தியறிந்து வருந்தினோம். அவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி இரங்கல் செய்தி அனுப்பி வைத்தோம். கருநாடக மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத் தலைவர் சித்த கங்கையா மற்றும் உறுப்பினர்கள் 26.10.2005 அன்று சென்னை பெரியார் திடலில் எம்மைச் சந்தித்து இந்திய அளவில் சமூகநீதிக்கு இன்றைய தினம் […]

மேலும்....