பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

தமிழ்நாடு மாநிலம் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள செங்கப்படுத்தான்காடு என்னும் சிற்றூரில் அருணாச்சலனார் _ விசாலாட்சி இணையருக்கு இளைய மகனாக 13.4.1930இல் எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். உள்ளூர் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் 2ஆம் வகுப்போடு பள்ளிப் படிப்பை முடித்துக்கொண்ட கல்யாணசுந்தரம் சுயமரியாதை இயக்கத்திலும் கம்யூனிசத்திலும் ஈடுபாடு கொண்டிருந்தார். பத்தொன்பது வயதிலேயே கவி புனைவதில் அதீத ஆற்றல் பெற்றிருந்தார். கருத்துச் செறிவும் கற்பனை வளமும் படைத்த இவரது பாடல்களில் கிராமிய மணம் கமழ்ந்தது. தமிழ்த் திரைவானில் கருத்துச் […]

மேலும்....

பேச வேண்டியதைப் பேசும் ‘அஞ்சாமை’!- திருப்பத்தூர் ம.கவிதா

“அப்பா எக்ஸாம் எழுத முடியாதாப்பா…” “ச்சே ச்சே…அப்பா இருக்கேன் பா… நீ ஏன்பா கவலைப்படுற… நாம போவோம் பா…” இந்த உரையாடல்களில் உள்ளிருக்கும் சிக்கல்களுக்குள் சிக்கிக் கொண்டது பூக்கள் பயிரிடும் ஓர் எளிய விவசாயக் குடும்பம். கூத்துக் கட்டும் தந்தை போல மகனும் வந்து விடக்கூடாது, கல்வி கற்க வேண்டும் என்று கவனமாக இருந்த துணைவி… அரசுப் பள்ளியில் பயின்று மாவட்டத்திலேயே முதல் மதிப்பெண் எடுத்த மகன்… அண்ணனின் படிப்பிற்காக தொலைக்காட்சியைச் சற்றுத் தள்ளி வைக்கக் கேட்டுக்கொள்ளப்பட்ட […]

மேலும்....

பெண் குழந்தைகளைக் கொண்டாடுவோம்- முனைவர் வா.நேரு

சர்வதேச பெண் குழந்தைகள் தினம் 2012ஆம் ஆண்டு முதல் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. 2011ஆம் ஆண்டு டிசம்பர் 11ஆம் தேதி அய்க்கிய நாடுகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி இந்த நாள் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான சர்வதேசப் பெண் குழந்தைகள் தினத்தின் கருப்பொருள் ‘பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்கான பார்வை’ என்பதாகும். (The theme of this year’s International Day of the Girl is ‘Girls’ vision for the future’.) அக்டோபர் 11, பெண் […]

மேலும்....

சீனா தயாரிக்கும் செயற்கைச் சூரியன்

தற்போது உலகம் முழுவதும் எரிசக்திக்கான தேவைகள் அதிகம் இருப்பதால் பலவிதமான மாற்று முன்னேற்பாடுகளை உலக நாடுகள் செய்து வருகின்றன. அதிலும் குறிப்பாக இயற்கை ஆற்றலைப் பயன்படுத்தி எரிசக்தி உருவாக்கும் தொழில்நுட்பங்களுக்கு உலக நாடுகள் மாறி வருகின்றன. அந்த வகையில் சீனா தற்போது செயற்கைச் சூரியனை உருவாக்கும் முயற்சியில் தீவிரமாகக் களம் இறங்கியுள்ளது. இதில் வியக்கத்தக்க செய்தி என்னவென்றால், சீனா உருவாக்கத் திட்டமிட்டுள்ள இந்தச் செயற்கைச் சூரியன் இயற்கைச் சூரியனைவிட 7 மடங்கு அதிக வெப்பத்தை வெளியிடும் எனக் […]

மேலும்....

திராவிட மாடல் ஆட்சியில் கல்விப் புரட்சி!- சரவணா இராஜேந்திரன்

திராவிட மாடல் ஆட்சி தமிழ்நாட்டு இளம் தலைமுறைகளுக்கான பொற்காலம். 15ஆம் நூற்றாண்டில் அறிவியல் ரீதியாக உலகம் ஒரு புதிய பாதையை அமைக்கும் என்ற முற்போக்குச் சிந்தனையோடு அய்ரோப்பிய நாடுகள் குறிப்பாக பிரான்ஸ், ஜெர்மன், ஸ்வீடன், போர்ச்சுகல், பிரிட்டன், உள்ளிட்ட நாடுகள் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கத் துவங்கின இதனால், குறிப்பாக இத்தாலியைத் தவிர்த்து மேற்கு அய்ரோப்பாவில் கல்வி வீட்டுக்குவீடு சென்று சேர்ந்தது, அந்தக் காலகட்டத்தில் அய்ரோப்பாவில் காகிதப் பயன்பாடும் உச்சத்தைத் தொட்டுக்கொண்டு இருந்த காலகட்டம். குறிப்பாக, அப்போது இந்தியாவிற்கான […]

மேலும்....