மனமின்றி அமையாது உலகு!(2) மருத்துவர் சிவபாலன் இளங்கோவன், மனநல மருத்துவர்

நலமான வாழ்க்கைக்கு உடல் நலன் மட்டுமே போதுமானதல்ல, மனநலன் தான் அதற்கு அடிப்படையானது. என்ன தான் உடல் நலமாக இருந்தாலும் மனம் சரியில்லையென்றால் நம்மால் அதன் பலன்களை அனுபவிக்க முடியாது. அதனால் மனநலமில்லாமல் நல்வாழ்க்கையை அடைய முடியாது . “மனதளவில் நலமாக இருப்பது என்றால் என்ன?” மனதை எப்படி நலமாக வைத்துக் கொள்வது?” போன்ற கேள்விகளுக்குப் பதில் தெரியாத காரணத்தினால் மனதைப் பற்றிய புரிதல்கள் தவறானதாகவே இருக்கின்றன. மனம் என்பதை நம் உடலின் ஓர் அங்கம் என்றே […]

மேலும்....

ஆணையரான தூய்மைப் பணியாளரின் மகள் !

மன்னார்குடி நகராட்சியில் தூய்மைப் பணியாளராக வேலை செய்தவரின் மகள் அந்த நகராட்சிக்கே ஆணையாளராகி நெகிழ வைத்துள்ளார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி சத்தியமூர்த்தி மேட்டு தெருவைச் சேர்ந்தவர் சேகர். மன்னார்குடி நகராட்சியில் தூய்மைப் பணியாளராக வேலை செய்து வந்தார். இவரது இணையர் செல்வி. இவர்களது மகள் துர்கா, வயது 30. இளங்கலைப் பட்டதாரியான துர்கா பலமுறை TNPSC தேர்வு எழுதியும் வெற்றி பெற முடியவில்லை. ஆனாலும் விடாமுயற்சி மேற்கொண்டு தன்னம்பிக்கையுடன் தேர்வு எழுதி வெற்றி பெற்று தந்தை பணியாற்றிய […]

மேலும்....

அமெரிக்காவின் முதல் தீவிரவாதி… -முனைவர் வா.நேரு

இன்றைக்குச் சந்திரனில் சென்று வாழலாமா? செவ்வாய் கிரகத்தில் சென்று வாழலாமா? என்று மனிதர்கள் முடிவு செய்யும் அளவிற்கு அறிவியல் வளர்ந்திருக்கிறது. இன்றைய அறிவியல், நாகரிக மேம்பாடு என்பன பற்றியெல்லாம் அறியாத மக்கள், இன்றைக்கும் மலைகளில் – காடுகளில் வேட்டையாடி, இயற்கையோடு இயைந்து வாழும் வாழ்க்கையை மேற்கொண்டிருக்கின்றனர். தங்களுக்கென ஒரு வாழ்க்கை முறையை – மொழியை – பண்பாட்டை அவர்கள் கடைப்பிடிக்கின்றனர். அப்படிப்பட்ட மக்களை உலகம் பழங்குடி இன மக்கள் என அழைக்கிறது. அவர்களில் சிலர் நாகரிக வாழ்க்கைக்குள் […]

மேலும்....

சாகசத்திற்காக அல்ல; சமூகநீதி காக்க!*வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி

இன்றைய தலைமுறை இளைஞர்கள் பெரிதளவில் சமூக அக்கறையுடன் காணப்படுவதில்லை என்ற முணுமுணுப்புகள் ஒருபுறம்; இந்தக் காலத்து மாணவர்கள் வன்முறையாளர்களாக உருவாகிக் கொண்டுள்ளார்கள் என்ற குற்றச்சாட்டு மறுபுறம் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. இந்த இரண்டு வாதங்களையும் முறியடித்து, கொள்கை வழியில் வென்று நிற்கிறது தந்தை பெரியாரின் கருஞ்சட்டை மாணவர் – இளைஞர் படை! ‘நீட்’ எனும் மோசடியை ஒழிக்க, ‘நீட்’டை ஒழிப்போம்! சமூகநீதி காப்போம்!! என்ற முழக்கத்தினை முன்வைத்து 2017 ஆம் ஆண்டு மார்ச் 18 முதல் மார்ச் […]

மேலும்....

பாரீசில், உலக மனித நேய, பகுத்தறிவு மாநாடு…- கி.வீரமணி

ராயபுரம் கோபால் அவர்களின் மாமா கோ.பிச்சையன் அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து வருந்தினோம். 27.6.2005 அன்று அவரின் இல்லத்திற்குச் சென்று அவருடைய படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம். பின்னர் அவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி விடை பெற்றோம். பட்டுக்கோட்டை மாவட்டம் ராயபுரத்தில் 28.6.2005 அன்று மாலை தந்தை பெரியார் சிலை திறப்பு விழா மிகச் சிறப்பாகக் நடைபெற்றது. மாலை 4 மணியளவில் கழக இளைஞரணித் தோழர்கள் சார்பில் ராயபுரம் தெற்குத் தெருவிலிருந்து வடக்குத் தெரு வரை நடத்திய […]

மேலும்....