பிறப்புரிமை சுயராஜ்யமா ? சுயமரியாதையா ? – … தந்தை பெரியார் …

நமது நாட்டில் உள்ள பொதுமக்கள் ஒருவருக்கொருவர் தங்கள் சூழ்ச்சிகளாலும் தந்திரங்களினாலும் ஒருவரையொருவர் இழிவுபடுத்தியும் அடிமைப்படுத்தியும் கொடுமை செய்து வருவதன் பலனாய், அந்நிய அரசாங்கத்தின் கீழ் ஆளப்பட்டு துன்பமடைந்து வருகிறோம். இத்துன்பம் நமக்கு ஒழிய வேண்டுமானால் நாம் பிறரைச் செய்யும் துன்பம் ஒழிய வேண்டும். அந்நிய அரசாங்கத்தார் நம்மைச் செய்யும் கொடுமையை ஒரு தட்டில் வைத்து, நம் நாட்டில் சிலர் நமக்குச் செய்யும் கொடுமையையும் நம்மைக் கொண்டு மற்றவர்களைச் செய்யச் செய்யும் கொடுமையையும் ஒரு தட்டில் வைத்துத் தூக்கிப் […]

மேலும்....

பெண்கள் புரட்சி செய்ய வேண்டும்! _ தந்தை பெரியார்

தோழர் நீலாவதி அம்மையார் சொன்னதுபோல் முதலாளி தொழிலாளிக் கொடுமை ஒழிய வேண்டும் என்பதில் ஆண், பெண் கொடுமையும் ஒழிய வேண்டியதவசியமாகும். ஆண்கள் முதலாளிகளாகவும், பெண்கள் தொழிலாளிகளாகவும், அடிமைகளாகவும்தான் நடத்தப்பட்டு வருகிறார்கள். இதுவும் வெறும் பிறவி காரணமாகவே ஒழிய, மற்றபடி இதில் வேறு காரணம் ஒன்றுமே இல்லை. ஆண், பெண் என்பதற்கு பிறவி காரணமாய்க் கற்பிக்கப்பட்டிருக்கிற பேதங்கள், நிபந்தனைகள் அடியோடு ஒழிக்கப்பட்டாக வேண்டும். இதற்கும் பெண் மக்கள் பெரியதொரு புரட்சிக்குக் கிளர்ச்சி செய்யவேண்டும். ஆண் மக்களோடு தைரியமாய்ப் போர் […]

மேலும்....

சுயமரியாதை வெற்றி உலா – இதோ ! வாருங்கள் தோழர்களே! வாருங்கள்!!

‘‘1. உத்தமமான தலைவர்களையும்,   2. உண்மையான தொண்டர்களையும்,   3. உறுதியான கொள்கையையும், 4. யோக்கியமான பிரச்சாரங்களையும்,      கொண்டு சரியானபடி ஒரு வருஷத்திற்கு  வேலை செய்தால், நமது சமூகம் சுயமரியாதையும் சுதந்திரத்தையும் அடைந்து விடலாம்’’                                                  _ தந்தை பெரியார் எழுதிய  26.12.1926 […]

மேலும்....

எஸ். தவமணிராசன் மறைவு : 19.05.2001

திராவிட மாணவர் கழகத்தைத் தோற்றுவித்தவர் என்று ஒருவரைக் குறிப்பிட வேண்டுமென்றால் தவமணிராசன் அவர்களைத்தான் குறிப்பிட்டாக வேண்டும். குடந்தை அரசினர் கல்லூரியில் பார்ப்பனருக்கென்று வைக்கப்பட்ட தண்ணீர் பானையிலிருந்து பார்ப்பனர் அல்லாத மாணவன் ஒருவன் தண்ணீர் குடித்துவிட்டான் என்பதற்காக பார்ப்பன வார்டன் ஒரு ரூபாய் அபராதம் போட்டார். அவ்வளவுதான், பிடித்தது நெருப்பு; பற்ற வைத்தவர் தவமணிராசன், இதன்மூலம் ஓர் இயக்கம் பிறப்பெடுத்து திராவிடர் மாணவர் கழகமாக உருப்பெற்றது. இதற்கான விதையை ஊன்றியவர் தவமணி ராசன் அவர்களேயாவார்.

மேலும்....

உங்களுக்குத் தெரியுமா?

வைக்கம் போராட்டம் வெற்றி பெறும் நிலையில் அந்தப் புகழ் தந்தை பெரியாருக்குக் கிடைத்து விடக்கூடாது என்பதால்தான் கடைசிநேரத்தில் இதில் காந்தியார் நுழைக்கப் பட்டார் என்ற சூழ்ச்சி உங்களுக்குத் தெரியுமா?  

மேலும்....