தகிக்கும் தாய்மனப் புழுக்கங்கள்!

… திருப்பத்தூர் ம.கவிதா … மனநலம் எவ்வழியோ அவ்வழியே உடல்நலம் என்பதை ஊரில் எத்தனை பேர் உணர்ந்தோம் என்பது விளங்கவில்லை! தலை வலி, வயிறு வலி என்று தனித்தனியே அந்தந்த மருத்துவர்களிடம் மருத்துவம் பார்க்க ஓடும் நாம், “எனக்கென்ன பைத்தியமா?” என்று வீம்பு காட்டாமல் மனநல மருத்துவர்களிடம் சென்று மனம் விட்டுப் பேசி தீர்வு காணுதலையும் இயல்பாக்கிக் கொள்ள வேண்டும். நிற்க, இப்போது சொல்ல வருவது இன்னொன்று! அதிகமாகப் படம் பார்க்கும் பழக்கம் இல்லாவிட்டாலும் ஆழமான தாக்கங்களை […]

மேலும்....

வெளிச்சம்… ஆறு. கலைச்செல்வன் …

“தாத்தா, நான் மாநில அளவில் நடைபெற இருக்கும் கபடி போட்டியில் கலந்துகொள்ள அடுத்த மாதம் சென்னை போகிறேன்.” கட்டிலில் படுத்திருந்த செல்வம் மெதுவாகத் தலையைத் திருப்பி குரல் வந்த திசையைப் பார்த்தார். கதவருகே அவரின் பெயர்த்தி இதழ்யா புன்னகையுடன் நின்றுகொண்டிருந்தாள். “என்னம்மா சொன்னே, சரியா கேட்கல. திரும்பவும் சொல்லு” என்றார். “மாநில அளவில் கபடி போட்டி சென்னையில் அடுத்த மாதம் நடக்க இருக்கு. நான் அதில் கலந்துகொள்ளப் போகிறேன்” என்று சொல்ல வந்த செய்தியை மீண்டும் சொன்னாள் […]

மேலும்....

வடமொழி மயக்கறுத்த பல்கலைப் புலவர்- பேராசிரியர் க. அன்பழகன் எம்.ஏ.,

தமிழர்களின் உள்ளம், உரை, செயல் அனைத்திலும் உறையத் தொடங்கிய தாழ்வு மனப்பான்மையை அகற்றவும், பண்டை நாட்களிலே தமிழர் தம் அறிவு பல்வேறு துறையிலும் மேலோங்கிச் சிறந்திருந்தது என்பதைத் தமிழர்கள் உணர்ந்து, தாய்மொழியைக் குறித்து ஒரு பெருமித எண்ணத்தோடு தலைநிமிர்ந்து வாழவும் உறுதுணையாக நின்றவர் பல்கலைப் புலவர் கா.சுப்பிரமணிய பிள்ளை அவர்களாவார். அவர் இளமையிலேயே தெளியக் கற்று தமிழுடன் ஆங்கிலத்திலும் முது கலைஞராய்த் தேர்ந்து, சட்டத்துறையிலும் பேரறிஞராய்ச் சிறப்புப் பெற்று தாகூர் சட்ட விரிவுரையாளர் என்னும் பெருமையுடன் விளங்கினார். […]

மேலும்....

இயக்க வரலாறான தன் வரலாறு ( 339 ) புதுக்கோட்டையில் தந்தை பெரியார் சிலை திறப்பு

… கி. வீரமணி … தஞ்சாவூர் – வல்லம் பெரியார் மணியம்மை மகளிர் பொறியியல் கல்லூரியில் பணிபுரியும் இணையர்களான இராசேந்திரன்- பகுத்தறிவு ஆகியோரால் பிள்ளையார்பட்டி டாக்டர் எம்.ஜி.ஆர். நகரில் கட்டப்பட்ட புதிய இல்லத்தை 16.2.2005ஆம் தேதி புதன்கிழமை மாலை 5:30 மணியளவில் மோகனா வீரமணி அவர்கள் தலைமையில் கல்லூரி முதல்வர்கள் டாக்டர் நல். இராமச்சந்திரன், டாக்டர் ச.இராசசேகரன் ஆகியோர் முன்னிலையில் நாம் திறந்து வைத்தோம். உரிமையாளர்களின் விருப்பப்படி இல்லத்திற்கு “மோகனா இல்லம்“ என்று பெயர் சூட்டப்பட்டது. காஞ்சிபுரம் […]

மேலும்....

திருமணம் செல்லுபடியாகத் தேவை சட்ட நடைமுறைகளா ? சடங்கு நடைமுறைகளா ?

சில வாரங்களுக்கு முன் உச்சநீதிமன்றத்தில் சடங்குகள் இல்லாத இந்து திருமணங்களை அங்கீகரிக்க முடியாது என்று விசாரணைக்கு வந்த வழக்கொன்றில் இரு நீதிபதிகள் – நீதிபதி பி.வி.நாகரத்னா, அகஸ்டின் ஜார்ஜ் மசி – ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பு அளித்துள்ளது. இத்தீர்ப்பு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு என்பதால் அதை ஏற்கவேண்டும் என்ற கட்டாயம் உள்ளது என்றாலும், வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு, அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள மனித உரிமைகளுக்கும், மனித நேயத்திற்கும், பெண்ணுரிமைக்கும், பகுத்தறிவிற்கும், உலக மாற்றத்திற்கும் உகந்ததாக இல்லாத காரணத்தாலும், பல்வேறு […]

மேலும்....