மனச்சிதைவு நோய் (Schizophrenia)

மனமின்றி அமையாது உலகு! (8) எண்ணங்களில் வரும் நோய்களில் முதன்மையானது மனச்சிதைவு நோய். மேலும் அனைத்து மனநோய்களை விட தீவிரத் தன்மை வாய்ந்ததும் இந்த மனச்சிதைவு நோயே. சாலைகளில் ஆதரவின்றிச் சுற்றித் திரிபவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம். மனநோய் என நாம் நினைத்துக்கொண்டிருக்கும் தனியாகப் பேசுவது, சிரிப்பது போன்ற தன்மைகளெல்லாம் இந்த நோயின் குணாதிசயங்களே. எமில் கிரெப்பலின் என்ற ஃபிரெஞ்ச் நரம்பியல் நோய் நிபுணர் 1800களிலேயே இந்த நோய் தொடர்பான குறிப்பொன்றை எழுதியிருக்கிறார். ‘Dementia Precox’ […]

மேலும்....

‘‘சனாதனம்’’ என்ற சொல்லாட்சி ! ஆய்வாளர் R. பாலகிருஷ்ணன்

சங்க இலக்கியம் முதல் சிற்றிலக்கியங்கள் வரை தமிழ் இலக்கியப் பெருவெளி அறியாத சொற்பதம் “சனாதனம்”! என்பது மிகச் சரியானது. “எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே” (தொல்.சொல். 157) என்பது தொல்காப்பிய இலக்கணம். எல்லாச் சொல்லும் என்று கூறியதில் பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் என்னும் நால்வகைச் சொற்களும் அடங்கும். “இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொல் என்று அனைத்தே செய்யுள் ஈட்டச் சொல்லே.’ (தொல். எச்ச.‌‌1,) என்று பிறமொழிச் சொற்கள் தமிழில் பயின்று வரும் முறை பற்றியும் தொல்காப்பியர் […]

மேலும்....

மூடச் செயல்களை முற்றாக ஒழிப்போம்!

கண்ணிருந்தும் பார்வையிலார் போல வாழ்வார் கற்கால மாந்தரென அலைவார்! பொய்யை உண்மையென நம்பிடுவார்! தலையில் தேங்காய் உடைத்திடுவார்! செய்நேர்த்திக் கடனே என்பார்! எண்ணத்தில் பிறழ்ந்தாராய் இராகு காலம், எமகண்டம், விதியென்றே இயம்பிப் பாவ, புண்ணியத்தை இனம்கண்டு தெளிந்தார் போலும் பூசைகளால் பரிகாரப் புளுகை ஏற்பார்! மந்திரத்தை, சோதிடத்தை முழுதும் நம்பி மனம்போன போக்கினிலே உழல்வார்! ஏய்ப்போர் தந்திரத்தை உணராமல் கழுத்தில், கையில் தாயத்து, கயிறுபல கட்டிக் கொள்வார்! சிந்திக்க மறுப்போராய்ப் பேய்கள் ஓட்டிச் சிறுபிள்ளைத் தனமாக நடந்து […]

மேலும்....

சுயமரியாதை இயக்க 80ஆம் ஆண்டு விழா – கி.வீரமணி

இயக்க வரலாறான தன் வரலாறு (350) மலேசியக் காங்கிரசின் தேசியத் தலைவரும் மலேசியப் பொதுப்பணித்துறை அமைச்சரும் மலேசியத் தமிழர்களின் தலைவருமான டத்தோ ஸ்ரீ சாமிவேலு அவர்களை சென்னையில் நாம் 2.1.2006 அன்று சந்தித்து, தஞ்சை வல்லம், பெரியார் மணியம்மை பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழாவிற்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்தோம். பெரியார் பற்றிய (ஆங்கிலம், தமிழ்) நூல்களை அவருக்குப் பரிசாக அளித்தோம். சுயமரியாதை இயக்க 80ஆம் ஆண்டு நிறைவுப் பெருவிழா (1925-2005), பகுத்தறிவாளர் கழக மாநில மாநாடு […]

மேலும்....

திராவிடம் தமிழர்க்கு எதிரானதா?- மஞ்சை வசந்தன்

திராவிடம் தமிழர்க்கு எதிரானது என்று மோசடிப் பிரச்சாரம் செய்யும் போக்கு ம.பொ.சி. காலத்திலேயே தொடங்கிவிட்டது. திராவிடத்தை எதிர்ப்பவர் இருவகை. ஒன்று, ஆரியத்திற்கு சேவகம் செய்யும் தமிழர்கள். அவர்கள் உண்மை நன்கு தெரிந்தும் ஆரியத்தை ஆதரிக்க வேண்டும், அதன் மூலம் அவர்களின் விசுவாசியாகக் காட்டிக்கொள்ள வேண்டும் என்று திட்டமிட்டுச் செயல்படுகின்றவர்கள். இரண்டு, திராவிடம் என்றால் என்ன, அதன் வரலாறு என்ன என்று அறியாது, ஆரிய அடிவருடிகள் பரப்பும் பொய்க் குற்றச்சாட்டுகளை நம்பிச் செயல்படுகிறவர்கள். முதலில் தமிழர், திராவிடர் என்ற […]

மேலும்....