ஜாதி என்பது சான்றிதழன்று- வாசுகி பாஸ்கர்

“இந்துக்கள் இந்தியாவின் நோயாளிகள்; அவர்களின் நோய் பிற இந்தியர்களின் நலத்திற்கும் மகிழ்ச்சிக்கும் தீங்கு விளைவிப்பதாக இருக்கிறது என்பதை அவர்கள் உணரும்படி செய்துவிட்டால், அதுவே எனக்கு போதும்.” – டாக்டர். பி.ஆர்.அம்பேத்கர் ஜாதி ஒழிப்பு என்னுமொரு கட்டுரைத் தொகுப்புக்கு (ஆய்வுரைக்கு) டாக்டர். அம்பேத்கர் எழுதிய முன்னுரையின் இறுதி வரிகள் இவை. அம்பேத்கரின் ஆய்வுக் கட்டுரைகளையும், எழுத்தையும் மேற்கோள் காட்டாமல் இந்தியாவில் ஜாதியத்தைப் பற்றிய எந்த விவாதத்தையும் முன்னெடுக்க முடியாது. வரலாற்று ரீதியாகவும், இந்திய மக்களின் பண்பாட்டு ரீதியாகவும் ஜாதியை […]

மேலும்....

திருமண வீடு, வீதி முதல் நீதிமன்றக் கூண்டுகள் வரை…..வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி

சமூகத்தில் நிலவும் அநீதிகளைக் கண்டு அமைதியாக இருப்பது சுலபமான காரியம்; அநீதிகளுக்கு துணை போவது என்பதும் எளிமையான காரியம். அநீதிகளை எதிர்த்து நிற்பதுதான் கடினம். அதிலும், அநீதிகளின் தன்மையை உரக்கப் பேசி, எழுதி, பிரச்சாரம் செய்து, இவை அனைத்தும் மாற்றப்பட்டால் ஒழிய நீதி கிடைக்காது என்று வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுவது என்பது மிகக் கடினமான காரியம். பெரும்பான்மை சமூகம் ஏற்றுக்கொண்ட கருத்துகளையும், நம்பிக்கைகளையும் எதிர்த்து நிற்பது மட்டுமின்றி, அவற்றுக்கு எதிரான சித்தாந்தத்தை முன் வைப்பது என்பது பெருக்கெடுத்து ஓடும் […]

மேலும்....

பொதுப் போக்குவரத்து – முனைவர் வா.நேரு

உலகப் பொதுப் போக்குவரத்து நாள் நவம்பர் 10. இந்த நாள் முதன்முதலில் 2005ஆம் ஆண்டு நவம்பர் 10ஆம் தேதி கொண்டாடப்பட்டது. இதனைக் கொண்டாட அழைப்புக் கொடுத்தவர்கள் சர்வதேச பொதுப் போக்குவரத்து சங்கப் (UITP-Union Internationaldes Transport Public) பொறுப்பாளர்கள்.இந்த அமைப்பு என்பது உலகம் முழுவதும் இருக்கின்ற போக்குவரத்து அதிகாரிகள், ஓட்டுநர்கள், போக்குவரத்துத் தொழிலை வழங்குபவர்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் என அனைவரையும் உள்ளடக்கியது. இதன் கிளை அமைப்புகளாக 1900 அமைப்புகள் இருப்பதாக இந்த நிறுவனம் குறிப்பிடுகிறது. 100க்கும் […]

மேலும்....

கணவனைக் காக்க மனைவியின் விரதங்கள் !- திருப்பத்தூர் ம.கவிதா

“இது என்ன நியாயம்? மனித சமுதாயம் தவிர மற்றபடி மிருகம், பட்சி, பூச்சி, ஜந்து முதலியவைகளில் வேறு எந்த ஜீவனாவது ‘ஆண்களுக்காகவே இருக்கிறோம் நாம்’ என்ற கருத்துடன், நடத்தையுடன் இருக்கிறதா? என்று பாருங்கள். நான் சொல்வது இங்குள்ள பல ஆண்களுக்கும் ஏன் பெண்களுக்குக் கூட வெறுப்பாய்ச் சகிக்க முடியாததாய்த் தோன்றலாம். இந்த வியாதி கடினமானது. தழையடித்து மந்திரம் போடுவதாலும் பூச்சுப் பூசி பத்துப் போடுவதாலும் விலகக் கூடியதல்ல. இது கூர்மையான ஆயுதத்தால் ஆழமாக அறுத்துக் கிளறி கார […]

மேலும்....

அறநிலையத்துறைக்கு அதிகாரம் உண்டு…

1. கே: ஷிண்டே அவர்களின் மகன் கோயில் கருவறைக்குள் சென்றதைப் பெரும் பிரச்சினையாக்கும் சங்கிகளின் செயல் ஏற்புடையதா? – த.பாபு, தாம்பரம். ப: அவர்களுக்கு வாதாட, போராட வேறு பிரச்சினைகள் கிடைக்காததால் இப்படி என்பது இதன் மூலம் புரிகிறது. 2. கே: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திரசூட் அவர்கள், கடவுள் வழிகாட்டலில் பாபர் மசூதி பிரச்சினையில் தீர்ப்பு எழுதியதாய்க் கூறியபின், அத்தீர்ப்பையே மறுஆய்வுக்கு உட்படுத்த சட்டப்படி இடம் உண்டா? – கே.தாமோதரன், செங்கல்பட்டு. ப: அவர் இப்படி […]

மேலும்....