கல்வி அறிவு, தொழில் ஆற்றல், பொறுப்புணர்வு உள்ளவர் வீரமணி!- தந்தை பெரியார்
நமது ‘விடுதலை’ ஆசிரியர் அவர்கள் மலாயாநாடு சென்று சுற்றுப்பயணம் செய்து அங்குள்ள மக்களால் நல்லவண்ணம் பாராட்டப்பட்டு வெற்றிகரமாக உடல்நலத்தோடு திரும்பிவந்ததை முன்னிட்டு நமது ‘விடுதலை’ அலுவலகத்தில் பணியாற்றக் கூடியவர்கள் இந்த வரவேற்பினை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இது மிக்க மகிழ்ச்சிக்குரிய காரியமாகும். இந்த வரவேற்பு விழாவானது ‘விடுதலை’ அலுவலகத்திலுள்ளவர்களால் நடத்தப்படுகிற விழாவானதால் இந்த விழாவில் நானும் மணியம்மையும் பங்கேற்றுக் கொள்கிறோம். ஆசிரியர் அவர்கள் மலாயா நாட்டுக்குப் புறப்பட்டுச் செல்லும் போதும் அவரை வழி அனுப்ப முடியாது பெரிதும் ஏமாற்றமடைந்தேன். […]
மேலும்....