பெர்ட்ரண்ட் ரசல் – பெரியார் சிந்தனைகள் – ஒரு கண்ணோட்டம்… அறிவுத்திறனை மழுங்கடிக்கும் கல்வி முறை

சென்ற இதழ் தொடர்ச்சி… 1. அறிவுத்திறத்தையும் கூர்த்த மதியையும் மழுங்கடிப்பதாகவே கல்வி உள்ளது என்பதே ரசல் மற்றும் தந்தை பெரியார் ஆகியோரின் கருத்துகளாக உள்ளன. ரசல் அவர்கள் கல்வியைப் பற்றிக் குறிப்பிடும்போது “சுயசிந்தனைக்கும் அறிவுத் திறனுக்கும் உள்ள முதன்மையான தடைகளில் ஒன்றாக கல்வி விளங்குகிறது என்னும் முரண்பாடான உண்மையை நாம் எதிர்கொள்கிறோம்” என்று தெரிவித்திருப்பது இங்கு சிந்திக்கத்தக்கது. (“We are faced with the paradoxical fact that education has become one of the […]

மேலும்....

திருவண்ணாமலை தீபம் எரிமலை வெடிப்பா? எரிதழல் சிவனா?- சிகரம்

திருவண்ணாமலை என்றாலே தீபம்தான் எல்லோர் நினைவிற்கும் வரும். அந்தத் தீபத்திற்கு ஒரு புராணக் கதை உண்டு. சிவன் அந்த இடத்தில் (திருவண்ணாமலை யுள்ள இடத்தில்) பூமிக்கும் வானத்துக்குமாய் நெருப்பு வடிவில் நின்றார். அதனாலே அது நெருப்பு மலையாயிற்று. நெருப்பாய் நின்ற சிவனின் முடியைக் காண பிரம்மாவும், அடியைக் காண விஷ்ணுவும் முறையே அன்னப் பறவையாகவும், பன்றியாகவும் உருமாறி முயன்று தோற்றனர் என்பதே அப்புராணம். அவ்வாறு சிவன் எரிதழலாய் நின்றதன் அடையாளமாய்த்தான் ஒவ்வோர் ஆண்டும் மலையின் உச்சியில் மகாதீபம் […]

மேலும்....

திராவிடக் குரிசில் ஆசிரியர்!-முனைவர் கடவூர் மணிமாறன்

திராவிடக் குரிசில்! திக்கெலாம் புகழும் திராவிடர் கழகத் தலைவர் அய்யா தொண்ணூற் றிரண்டில் சுவடு பதிப்பவர் எண்ணிய எண்ணியாங் கெய்திட உழைக்கும் தறுகண் மறவர்; தகைசால் தமிழர்! வெறுப்பை விதைப்போர் வீழ்ந்திடச் செய்த பெரியார் போற்றிய பீடுசால் அரிமா! நரியார் வஞ்சகம் நசுக்கிடும் மாண்பினர்! சட்டம் பயின்றவர்! சால்போ நிறைந்தவர் திட்டம் இடுவதில் தேர்ந்தவர், தெளிந்தவர் முத்திரை பதிக்கும் முனைப்பு மிக்கவர்! பத்தாம் அகவைச் சிறுவனாய் இருந்த காலம் முதலே காந்தச் சொற்களால் ஞாலம் மதித்திடும் மாண்பைப் […]

மேலும்....

வீரமணி பத்து- செல்வ. மீனாட்சி சுந்தரம்

அய்யாவின் அம்மாவின் தொண்டறத்தின் நீட்சி! ஆசிரியர் வீரமணி அருந்திறத்தின் மாட்சி! கொய்யாத மலர்தாங்கும் சோலைவனக் காட்சி குளிர்பொங்கும் அருள்முகத்தின் புன்னகைப்பூ சாட்சி! பொய்க்காத கார்ப்பொழிவாய்க் கடனாற்றும் நேர்த்தி! புகழ்ச்சிக்கும் இகழ்ச்சிக்கும் வளையாத சீர்த்தி! உய்வித்த பெரியாரே உருமாற்றம் கொண்டே உலவுகிறார் நம்மிடையே வீரமணி என்று! ஒருபத்து வயதினிலே உயர்மேடை ஏறி உலகத்தின் செவிப்பறையுள் விதைத்தாரே நீதி! பருவத்தின் முன்பழுத்த மலைத்தோட்ட வாழை! பகுத்தறிவு மணம்வீச மடல்விரித்த தாழை! உருவத்திற் கொவ்வாத உரங்கொண்ட காளை! உருக்கிட்டுச் செய்தாரோ உள்ளத்தை […]

மேலும்....

உலகக் கோப்பை கேரம் போட்டியில் மூன்று தங்கப்பதக்கங்கள் வென்ற தங்க மங்கை காசிமா!

அமெரிக்காவில் நடந்த உலகக் கோப்பை கேரம் வாகையர் போட்டியில் மூன்று தங்கப் பதக்கங்களை வென்று சாதனைச் சிகரத்தை எட்டியுள்ளார் சென்னையைச் சேர்ந்த இளம் வீராங்கனை காசிமா. சென்னை புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் மெகபூப் பாஷா. ஆட்டோ ஓட்டுநர். இவரது மகள் காசிமா (வயது 17). இவர் அண்மையில் அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் நடந்த 6வது உலகக் கோப்பை கேரம் வாகையர் போட்டியில் கலந்து கொண்டு மகளிர் தனிப்பிரிவு, மகளிர் இரட்டையர் பிரிவு, குழுப் போட்டி என மூன்று பிரிவுகளிலும் […]

மேலும்....