நெருப்பின் மேல் நின்று செய்த வேலை !-வழக்குரைஞர் சே.மெ. மதிவதனி

பொதுவாக சமூகத்தின் அனைத்து நிலைகளிலும் நம்மைச் சமாதானப்படுத்துபவர்கள் அல்லது பிரச்சனைகள் வராமல் தடுக்க நினைப்பவர்கள் பயன்படுத்தும் சொற்கள் என்பது “ஊரோடு ஒத்து வாழ்”, “ஊரோடு சேர்ந்து வாழ்” என்பதாகவே இருக்கும். சாதாரண செயலில்கூட பெரியவர்களின் அறிவுரையில் முதல் இடம் பிடிக்கும் அறிவுரையும் இதுவாகத்தான் இருக்கும். வாழ்க்கை நிலை உயரவும் இலட்சியங்களை அடையவும், பிறருடன் சேர்ந்து அவ்வறிவுரைகளை அப்படியே ஏற்றுக்கொண்டு வாழும் பழக்கத்தினை, குழந்தைகள் தொடங்கி பெரியவர்கள் வரை கடைப்பிடிக்கப் பழக்குவோம். அதுதான் சரியான பாதை என்று நாமும் […]

மேலும்....

நாடாளுமன்றத்தில் ஓங்கி ஒலித்த திராவிட -ஆரியக் குரல்கள் !- மஞ்சை வசந்தன்

இந்தியாவின் வரலாறு என்பதே திராவிட – ஆரியப் போராட்டம்தான். திராவிடம் என்பது எதைக் குறிக்கிறது? ஆரியம் என்பது எதைக் குறிக்கிறது என்ற வினாக்களும் அதற்கான விளக்கங்களும், அவ்விளக்கங்களுக்கு இடையேயான மோதல்களும் தொடர்ந்து வருகின்றன. திராவிடத்திற்கு எதிரான மோதல்கள், சுயநலத்தின் காரணமாக, உண்மைக்கு மாறாக எழுகின்றன. தமிழர்கள் திராவிடர்கள்தாம் – இம்மண்ணின் மக்கள்தாம் என்று நாம் கூறிவருவது மட்டுமல்லாது, உலக வரலாற்று, தொல்லியல் ஆய்வாளர்கள் ஆழமான, ஆதாரபூர்வமான ஆய்வுகளின் முடிவாகக் கூறுகின்றனர்.அதுமட்டுமன்றி, மறுபுறம் ஆரியர்கள் மத்திய ஆசியப் பகுதியிலிருந்து […]

மேலும்....

‘அனைவருக்கும் அனைத்தும்’ என்ற சமூகநீதிக்காகப் போராடிய புரட்சித் துறவி!- கி.வீரமணி

11.7.2024 அன்று மஹாசந்நிதானம் தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்களது நூற்றாண்டு தொடங்குகிறது. அவர் குன்றக்குடி திருமடத்தின் ஆதீனகர்த்தர்! தனித்தன்மையுடன் குன்றக்குடி ஆதீனத்தின் பொற்காலத்தை உருவாக்கிய புதுமைப் புரட்சியாளர்! மதம், சொர்க்கம் போகும் மார்க்கமல்ல; மாறாக, மனிதகுலத்தைச் சீர் செய்ய, ‘அனைவருக்கும் அனைத்தும்’ என்ற சமூகநீதியை வற்புறுத்த ஒரு வழி என்பது புரட்சித் துறவியான அவரது தத்துவம்! துறவுத் துறையில் இருட்டை வெளிச்சமாக்கி, எல்லோரையும் இன்ப வாழ்வு வாழ தனது இறுதி மூச்சுவரை உழைத்த போற்றுதலுக்குரிய எம்பெருமான்! தந்தை […]

மேலும்....

கடவுள் என்பது ஒரு பொருளா?- தந்தை பெரியார்

அறிஞர்களே! நீங்களும் நாங்களும் இன்று 1968ஆம் ஆண்டில் பகுத்தறிவு விஞ்ஞானக் காலத்தில் வசிக்கிறோம்; அதன் பயனாய் நான் கடவுள் இல்லை என்றும் அது அறிவில்லாத காலத்து முட்டாள் மனிதனது கற்பனை என்றும் சொல்லுகிறேன். இந்தப்படி நான் 50, 60 வருஷங்களாகச் சொல்லி வருகிறேன். மக்கள் பக்குவப்படாத (காட்டுமிராண்டி) காலம் நான் சொல்லுவது ஒருபுறம் இருந்தாலும் கடவுளைப் பற்றி மக்கள் அறிய நேர்ந்தது சுமார் “3000 ஆண்டு”க்கு மேல் “5000 ஆண்டுக்குள்” இருக்கலாம் என்று நான் கருதுகிறேன். நீங்களும் […]

மேலும்....

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது !

உச்சநீதிமன்றத்தில் மேற்கு வங்க அரசு தாக்கல் செய்த ஒரு வழக்கு நீதிபதிகள் ஜஸ்டிஸ் பி.ஆர்.கவாய், ஜஸ்டிஸ் சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வின்முன் 10.7.2024 அன்று விசாரணைக்கு வந்தது. மேற்கு வங்க அரசு தாக்கல் செய்த வழக்கில் – சி.பி.அய். என்ற அமைப்புதான் மேற்கு வங்கத்தில் வழக்கு விசாரணையைத் தொடங்கி நடத்தவேண்டும் என்று முனைப்புடன் செயல்படும் ஒன்றிய அரசின் நிலைப்பாட்டுக்கு எதிராக, சி.பி.அய். என்ற அமைப்பு முழுக்க முழுக்க ஒன்றிய அரசின் நேரடிக் கண்காணிப்பில் இயங்கும் ஒன்று […]

மேலும்....