இரவல் இதயம் -இரா. அழகர்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கந்தசாமி ஏறக்குறைய ஒரு வாரம் கழித்து இன்றுதான் கண் விழித்தார். வீட்டின் குளியலறையில் இருந்தபோது திடீரென்று ஏற்பட்ட தலைசுற்றலும் மயக்கமும் என்ன ஏதோ என்று சுதாரிப்பதற்குள் ஆளை கீழே கிடத்திவிட்டது. அன்று கொண்டு வந்து மருத்துவமனையில் சேர்த்தது இன்றுதான் கண் விழித்தார். தலைமாட்டில் அமர்ந்திருந்த மனைவி சுப்புலட்சுமி கணவன் கண் விழிப்பதைக் கண்டு… ”ஏதும் வேண்டுமா…? நர்ஸை வரச் சொல்லட்டுமா” எனக் கேட்க, வேண்டாம் என்று தலையசைத்து பார்வையை நாலாபக்கமும் சுழலவிடத் தொடங்கினார். அந்த […]

மேலும்....

அண்ணாவின் புகழ்பாடுவோம்!-முனைவர் கடவூர் மணிமாறன்

வான்மழைபோல் பொழிந்திட்ட கருத்துக் கொண்டல்! வற்றாத தமிழருவி! கொள்கைக் கோட்டம்! தேன்போல நாவினிக்கப் பேச வல்லார் திராவிடநா டிதழ்காஞ்சி ஏடு தந்தார் கான்மலராய் மணக்கின்ற சொற்க ளாலே கண்ணியத்தை, கடமையினை, கட்டுப் பாட்டைப் பான்மையுற வலியுறுத்தி உலகில் வாழும் பைந்தமிழர் நெஞ்சமெலாம் நிறைந்தார் அண்ணா! ஆங்கிலத்தில் அருந்தமிழில் உரைகள் ஆற்றும் அருந்திறலைக் கொண்டிருந்த அறிவுச் சொற்கோ! தீங்கெவர்க்கும் எண்ணாத காஞ்சித் தென்றல்! திராவிடத்துப் புகழ் நிலவாய்த் திகழ்ந்த செம்மல்! பாங்குறவே இரண்டுமொழிக் கொள்கை ஏற்போம்! பகைப்புலத்தோர் இந்தியினை […]

மேலும்....

மல்யுத்த வீராங்கனைகளின் போர்க்குரல்!

பெண் விளையாட்டு வீராங்கனைகளுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகள் பற்றிப் பலகாலமாகப் பேசப்பட்டு வருகிறது. 2023 ஜனவரியில் இந்திய மல்யுத்த வீராங்கனைகளும், வீரர்களும் நடத்திய போராட்டம் இப்பிரச்சினையை உலகின் கவனத்துக்குக் கொண்டு வந்தது. சாக்சிமாலிக், வினேஷ் போகத், பஜ்ரங்புனியா உள்ளிட்ட வீராங்கனைகள் பா.ஜ.க.வின் நாடாளுமன்ற உறுப்பினரும், இந்திய மல்யுத்த சம்மேளத்தின் தலைவருமான பிரிஜ்பூஷன் சரண்சிங் என்பவரும், சில பயிற்றுநர்களும் தங்களைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக உள்ளிருப்புப் போராட்டத்தில் தொடங்கி, நாடாளுமன்றத்திற்கு முன்வரை போராட்டத்தில் ஈடுபட்டனர். நீதிக்காக இன்னும் குரல் […]

மேலும்....

திருப்பூர் திராவிடர் எழுச்சி மாநாடு – இயக்க வரலாறான தன் வரலாறு (346) – கி.வீரமணி

சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு இடஒதுக்கீடு தேவையில்லை என ஆகஸ்ட்12, 2005 ஆம் தேதியன்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு இந்தியாவில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களிடையே பெரும் எதிர்ப்பு அலையை உருவாக்கியது. தமிழ்நாட்டில் திராவிடர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. நமது அண்டை மாநிலமான கருநாடகாவிலும் போராட்டத்தை முன்னெடுக்கும் வகையில் அதற்கான பூர்வாங்கக் கூட்டம் பெங்களூரில் அம்மாநில மேனாள் துணை முதலமைச்சரும் பகுத்தறிவாளருமான (தற்போதைய முதலமைச்சர்) சித்தராமையா அவர்கள் இல்லத்தில் 7.9.2005ஆம் தேதி நடைபெற்றது. இந்தக் […]

மேலும்....

10 ஆண்டு பா.ஜ.க. ஆட்சியில்…

கோயில் கருவறைகள் வரைக்கும் பாலியல் வன்கொடுமைகள் நடந்ததை உ.பி., காஷ்மீர் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கடந்த 10 ஆண்டு பா.ஜ.க. ஆட்சியில் பார்த்துவிட்டோம். அந்தக் குற்றவாளிகளுக்கு ஆதரவாக மதத்தின் பேரால் பேரணி சென்ற கொடூரர்களையும் இந்த நாடு சாட்சியாக நின்று பார்த்துக் கொண்டிருந்தது. மதத்தின் பெயரால், ஜாதியின் பெயரால் பஞ்சாயத்துகளின் பெயரால் பெண்களுக்கு எதிராக அன்றாடம் நிகழும் கொடுமைகள்… இன்னும் நாம் 21ஆம் நூற்றாண்டில்தான் வாழ்கிறோமா என்ற கேள்வியை எழுப்புகின்றன.

மேலும்....